மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்

சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம் ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத் தடை … Continue reading மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்

திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

திவ்ய பாரதி  மதுரை நாயக்கர் புது தெருவில் சற்று நேரத்திற்கு முன்பு மலக் குழிக்குள் காளி என்கிற துப்புரவு தொழிலாளியை இறக்கி மிகக் கொடூரமான முறையில் வேலை வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தோழர் தமிழ்தாசன் அவர்கள் இத்தகவலை நமக்கு சொன்னதும் அங்கே புகைப்பட கருவிகளோடு கிளம்பினோம். காவல் துறையையும் அணுகினோம். எந்த பயனுமில்லை. இறுதியில் எங்களால் செய்ய முடிந்தது இதையெல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நண்பரிம் சொல்லி இது குறித்து இரண்டொரு நாட்களில அவரின் பத்திரிக்கையில் கட்டுரை … Continue reading திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

மனித கழிவுகளை அகற்ற உத்தரவிடுவதும் வன்கொடுமையே: தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்…

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இச்சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டப் பிரிவுகள் என்னென்ன?: *தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்களது தன்மானத்துக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் … Continue reading மனித கழிவுகளை அகற்ற உத்தரவிடுவதும் வன்கொடுமையே: தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்…

தலித், பழங்குடிகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தால் வன்கொடுமைச் சட்டம் பாயும்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை உத்தப்புரம் பகுதிகளில் தலித்துக்கள் கோயில்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பகுதிகளிலில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் தலித்துகள்-பழங்குடிகளில் கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் உத்திர பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த ஒரு தலித் பெரியவர் எரித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், திருத்தப்பட்ட வன்கொடுமைச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலித்-பழங்குடிகளின் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதா பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்படி... * தலித்-பழங்குடியினரை பொது வெளியில் சாதி பேர் சொல்லிப் … Continue reading தலித், பழங்குடிகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தால் வன்கொடுமைச் சட்டம் பாயும்!