எழுத்தாளர் ப்ரேம் மீது நடத்திய நிகழ்த்திய ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை தி டைம்ஸ் தமிழ் வெளியிட்டது. லீனாவின் ஆணவத் தாக்குதல் எத்தகைய தருணத்தில், எப்படி வெளிப்பட்டது என்பதையும் தி டைம்ஸ் தமிழ் ஆவணப்படுத்தியிருக்கிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இடம் பெறும் விவாதங்கள், சர்ச்சைகளை ஒட்டி ஊடகங்கள் செய்தியாக்குவது உலகம் முழுக்கவும் நடைமுறையில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதப்படும் பதிவு குறித்து, தொடர்புடைய பிரபலத்திடம் கருத்து கேட்டு வாங்கிப் போடுவது அவசியம் கருதி … Continue reading ’மஞ்சள் பத்திரிகை’: தி டைம்ஸ் தமிழுக்கு லீனா மணிமேகலையின் ‘பாராட்டு’
Tag: லீனா மணிமேகலை
அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை
(எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலை நிகழ்த்தியிருக்கும் ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை.) தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதலென்பது கலை இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒருவனின் வாழ்வில் முக்கியமானதொன்று. தான் உறுதிபட நம்பும் ஒரு அரசியலை பேசுவதும் அதை சார்ந்து இயங்குவதும் ஒரு கலைஞனுக்கான அறம். துரதிர்ஸ்டவசமாக தமிழ் இலக்கியவாதிகளில் அனேகர் தாங்கள் பேசும் அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர்களாகவே யதார்த்தத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த கால் நூற்றாண்டு காலமாய் தமிழில் கோட்பாட்டு ரீதியான முக்கியமான உரையாடல்களை … Continue reading அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை
அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை
சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே: “பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் "லைக்கிட்டும்" "மெளனம் சாதித்தும்" உற்சாகப்படுத்திய நண்பர்களையும் கண்டித்து எழுதியிருந்த பதிவை நீக்கியிருக்கிறேன். காரணங்கள் இரண்டு. ஒன்று, பழனிவேள் தன் வசைகளை நீக்கிவிட்டதாக நண்பர்கள் அறியத் தந்தார்கள். இரண்டு, அந்த விவாதத்திலேயே, எழுதும் பெண்களைப் பற்றி யவனிகா சுதந்திரவள்ளியின் … Continue reading அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை
இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?
நடந்த முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி சர்ச்சைகள் ஏதும் இல்லாதது ‘சப்’பென்று இருந்தது என ஒரு தமிழ் நாளிதழ் கவலைப்பட்டது. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் முகநூலில் ஒரு சர்ச்சையொன்று மையங்கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி லீனா மணிமேகலை. சமீபத்தில் அவருடைய கவிதை நூல் (சிச்சிலி) ஒன்றும் நேர்காணல் நூல் (மொழி எனது எதிரி) ஒன்றும் வெளியானது. அந்த வெளியீட்டை ஒட்டி, கவிஞர் பழனிவேள் தனது முகநூல் பதிவில் இவ்வாறு பதிந்திருந்தார். Palani Vell இதனால் தான் இது கவிதையில்லை … Continue reading இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?
’கவிதை நூல் வெளியிட்ட பெண்களை மொக்க ஃபிகர் என்பதா?’: லீனா மணிமேகலை
பெண்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக எழுத்தாளர், இயக்குநர் லீனா மணிமேகலை தன்னுடைய முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார். லீனா மணிமேகலையின் பதிவில் “பெண் படைப்பாளிகளை நக்கல் அடித்து நண்டு சிண்டுகளில் இருந்து ஆசான் கேசுகள் வரை எதையாவது எழுதிக் கொட்டுகிறார்கள்... சமீபத்தில் நடந்த கவிதை வெளியீட்டு விழா பற்றிய முகநூல் சரடில் மொக்க ஃபிகர் என்ற ரேஞ்சில் இறங்கி அந்த மேடையில் கவிதை நூல்கள் வெளியிட்ட பெண்கள் பற்றி ஒருவர் "விமர்சனம்" வைக்கிறார். தெரியாம தான் கேக்கறேன், போலிச்சாமியாருங்க … Continue reading ’கவிதை நூல் வெளியிட்ட பெண்களை மொக்க ஃபிகர் என்பதா?’: லீனா மணிமேகலை