பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

செவ்வாயன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார் கைது உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் பதான்கோட் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.  செவ்வாயன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 16 வரை நீடிக்கிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25லிருந்து தொடங்கி மே13 வரை நடைபெறுகிறது. நடைபெறவுள்ள முதல் பட் ஜெட் கூட்டத்தொடரில் … Continue reading தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

காந்தி சுடப்பட்ட நாளில் பிறந்த ரோஹித் வெமுலா: உண்ணாவிரதத்துடன் தொடங்கியது வெமுலா மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டம்

ரோகித் வெமுலா மரணமடைந்து 12 நாட்களாகிய நிலையில், இன்று  வெமுலாவின் 26 வது பிறந்தநாள் என்று  தெரிய வந்துள்ளது அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. வெமுலாவின் பிறந்தநாளை ஒட்டி,  அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு, ஐதிராபாத் பல்கலைகழகத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் நேற்று நள்ளிரவு மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.இதில் வெமுலாவின் தாய், சகோதரர், நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே ஐதிராபாத் பல்கலைகழகத்திற்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, வெமுலா மரணத்திற்கு நீதி … Continue reading காந்தி சுடப்பட்ட நாளில் பிறந்த ரோஹித் வெமுலா: உண்ணாவிரதத்துடன் தொடங்கியது வெமுலா மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டம்

சாதிய அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்களின் பட்டியல்!

Tss Mani உயர்சாதி வெறியால் கொல்லப்படும் தலித்திய மாணவ மாணவிகள். தொடரும் படுகொலைகளின் பட்டியல். ரோகித் மட்டும்தான் தற்கொலை செய்து கொண்டார் என நினைப்பவர்களுக்கு. 1.மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 - இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை 2.அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு 3.ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர் … Continue reading சாதிய அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்களின் பட்டியல்!

ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!

இளங்கோ கிருஷ்ணன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை வளாகத்தில் இரண்டு இந்தியத் தலைவர்களுக்கு சிலைகள் உள்ளன. ஒருவர் காந்தி, இன்னொருவர் அம்பேத்கர். இரண்டு சிலைகளுக்குமே உண்மையான மூக்குக்கண்ணாடி அணிவிக்கப்பட்டிருக்கும். இதில், அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படும். யார் இதைச் செய்கிறார்கள் என பல்கலைக்கழகத்தினர் கண்காணித்தபோது, இந்திய மாணவர்களில் ஒரு பிரிவினர் இதைச் செய்வதை அறிந்தனர். ஐரோப்பியர்களுக்கு புரியவே இல்லை. அம்பேத்கரும் அவர்கள் தேசத்தின் தலைவர்தான் ஏன் அவர் கண்ணாடி மட்டும் உடைகிறது என. … Continue reading ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!

ரோஹித் வெமூலாவை மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என அவதூறு பிரச்சாரம் செய்யும் பாஜக செய்தித் தொடர்பாளர்!

ஹைதராபாத் பல்கலையின் நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமூலா குறித்து, மோடி பக்தர்கள் அவதூறு பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் முன்னணியில் இருக்கிறார் மும்பையின் பாஜக பேச்சாளராக இருக்கும் சஞ்சு வர்மா என்பவர். ரோஹித் வெமூலா மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என தொடர்ந்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவதூறு செய்து வருகிறார். ரோஹித்தின் தற்கொலைக்கு ஆந்திர பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணமாக சொல்லப்படும் நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் … Continue reading ரோஹித் வெமூலாவை மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என அவதூறு பிரச்சாரம் செய்யும் பாஜக செய்தித் தொடர்பாளர்!

செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்

ஹைதராபாத் பல்கலையில் மரணமடைந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா,  தலித் அல்ல, அவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ். இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். தலித்தாக இருந்தாலும் வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இறுதிவரை போராடியது இந்துத்துவத்தை எதிர்த்துதான் என்பதை, பானு கோம்ஸ் போன்ற வலதுசாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து … Continue reading செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்