“ராம்குமார் ராம்குமார்னு கத்தினோம்; கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கலை”: திலீபன் மகேந்திரன் உருக்கம்

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சந்தேகத்துக்குரிய வகையில் புழல் சிறையில் மரணமடைந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு நடந்த உடல்கூராய்வுக்குப் பிறகு அவருடைய உடல், சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ராம்குமார், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் இந்த வழக்கில் காவல்துறையால் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என சொல்லிவருபவர் திலீபன் மகேந்திரன். இந்த வழக்குத் தொடர்பாக பல்வேறு விவரங்களைத் திரட்டி ராம்குமாரின் வழக்கறிஞருக்கு இவர் அளித்தார்.  ராம்குமார் மரணமடைந்த நிலையில் அவருடைய … Continue reading “ராம்குமார் ராம்குமார்னு கத்தினோம்; கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கலை”: திலீபன் மகேந்திரன் உருக்கம்

ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி

சுவாதி வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையி‌ல் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற‌ம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் … Continue reading ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி

“நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

  மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்குத் தொடர்பில்லை, வேறு சிலருக்குத் தொடர்பிருக்கிறது என சொல்லிவருகிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமார் வழக்கறிஞருக்கு இவர் தகவல்கள் திரட்டித் தருவது போன்ற உதவிகளையும் செய்துவருகிறார். ராம்குமார் மரணத்தில் இவர் தன்னுடைய கருத்தாக … Continue reading “நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

தேவாங்கு அரசியல்!

கண்ணன் ராமசாமி சுவாதியின் கொலைக்கு உளவியல் ரீதியிலான அழகியல் கண்ணோட்டத்தில் ஒரு முகம் கொடுத்திருக்கிறது ஒரு செய்தி. “நீ தேவாங்கு போல் இருக்கிறாய்!” என்று சுவாதி சொன்னதால் ஆத்திரம் அடைந்ததாக ராம்குமார் குறிப்பிட்டிருக்கிறார் என்கிற செய்தியை நாம் எல்லோரும் படித்தோம். ராம்குமாரின் வாக்குமூலம் குறித்த முழுமையான உண்மைகள் நமக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இருப்பினும், இதுவே இறுதி உண்மை எனக் கருத முடியாது என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இது போன்ற விமர்சனங்களை நாம் பிறரிடம் இருந்து எதிர்கொள்கிறோமா? … Continue reading தேவாங்கு அரசியல்!

ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம் குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை செய்வது வீடியோவில் படம் பிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது செய்தித்தாள்களில் … Continue reading ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்

தர்மபுரி இளவரசன்; மீனாட்சிபுரம் ராம்குமார் : தற்கொலை செய்யப்படும் மருத்துவ அறம்

மருத்துவர். அரவிந்தன் சிவக்குமார் தர்மபுரி இளவரசனுக்கும் மீனாட்சிபுரம் ராம்குமாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பிரேதப் பரிசோதனை முடியும் முன்னே இருவருக்கும் மனநல மருத்துவர்கள் தற்கொலை தான் என்று முத்திரைக்குத்தி வாய்க்கரிசி போட்டுவிட்டனர். நேற்றே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பக்கம் 2 - ல் சினேகாவின் நிறுவனர் மன நல மருத்துவர். லட்சுமி விஜயகுமார் , ராம்குமார் தற்கொலை தான் செய்து கொண்டார், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆரம்ப அறிகுறிகள் … Continue reading தர்மபுரி இளவரசன்; மீனாட்சிபுரம் ராம்குமார் : தற்கொலை செய்யப்படும் மருத்துவ அறம்

சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. விசிக தலைவர் தொல் திருமாவளவன்: ராம்குமார் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று மூடி மறைக்க அரசு முயற்சிக்க கூடாது. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உடலை உடனே அடக்கம் செய்யக்கூடாது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: … Continue reading சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

“ஜாமீன் கேட்டு மனு போட இருந்தநிலையில் காவல்துறை கொன்றுள்ளது”: ராம்குமார் அப்பா

“ஜாமீன் கேட்டு மனு போட இருந்தநிலையில் காவல்துறை கொன்றுள்ளது” என மரணமடைந்த ராம்குமாரின் அப்பா பரமசிவம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “25 நாட்களுக்கு முன்புதான் நானும் என் மனைவியும் சிறையில் ராம்குமாரை சந்தித்தோம். அவன் நன்றாகத்தான் இருந்தான். சிறையில் இருப்பதற்காக அழுதான்...ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை. முக்கால் மணி நேரம் அவனுடன் பேசிவிட்டு வந்தோம். அவன் தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான தகவல் சொல்கிறார். ஆனால் சதி திட்டம் தீட்டி கொலை செய்திருக்கிறார்கள். 80 நாள் ஆகிறது. நாளை பெயில் போட … Continue reading “ஜாமீன் கேட்டு மனு போட இருந்தநிலையில் காவல்துறை கொன்றுள்ளது”: ராம்குமார் அப்பா

சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

சி.மதிவாணன் ராம்குமார் மரணம் தற்கொலை என்று சொல்லப்படுகிறது. மின்சாரக் கம்பியைப் பிடித்து தன்னைத் தானே கொன்றுகொண்டுள்ளார் என்பது செய்தி. அதேசமயம், “ராம்குமார் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுவதாக ராம்குமார் வக்கீல் கூறியுள்ளார்“ என்று தினத்தந்தியின் வலைமனை செய்தி சொல்கிறது. அவரின் இடது கன்னத்திலும் மார்பிலும் மின்சாரம் பாய்ந்த காயங்கள் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவாதி கொலையின் பின்னுள்ள, இதற்கு முந்தைய விளக்கப்படாத மர்மங்களையும், கைது செய்யப்பட்டபோதே … Continue reading சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மரணம்: ராம்குமாரின் விபத்து அறிக்கையில் தகவல்

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார், சமயலறையில் மின்சார ஒயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் சிறை வளாகத்தில் இருக்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மரணமடைந்ததாக ராம்குமாரின் விபத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராம்குமார் இறந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறைக்குள் நடக்கும் விபத்துகளுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில்தான் அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இவ்வாறான விபத்துகளை அங்கு முதலுதவி செய்யப்படும். ஆனால் அங்கு ஏன் அனுமதிக்கவில்லை என காரணம் … Continue reading உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மரணம்: ராம்குமாரின் விபத்து அறிக்கையில் தகவல்

ராம்குமார் மரணம்: பல்வேறு அமைப்பினர் போராட்டம்

ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார ஒயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை; அவரை காவல்துறைதான் கொலை செய்துள்ளது என வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல அமைப்பினர் ராயப்பேட்டை மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

பிரேம் (சாதிச்) சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது... பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம்சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதி மன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடி உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை தற்கொலை என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன. சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது. … Continue reading “மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

“ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சிறையில் இருந்த ராம்குமார் எப்படி தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும்? என சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில கண்டனக் குரல்கள் இங்கே: Vijayasankar Ramachandran: ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது. பிரதாபன் ஜெயராமன்: இரு ஆணவக்கொலைகள் Joshua Isaac Azad: Ramkumar murdered by the state!!!! #CustodialMurder #I_Stand_By_Ramkumar #JusticeForRamkumar Aravindan Sivakumar: ராம்குமார் இறந்தார் என்று போடாமல் தற்கொலை என்று எப்படி … Continue reading “ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

ராம்குமார் ‘தற்கொலை’: போலீஸ் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக தற்போது … Continue reading ராம்குமார் ‘தற்கொலை’: போலீஸ் அறிவிப்பு

“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள். - வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் … Continue reading “உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் … Continue reading “காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

“உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் "கொலையாளி ராம்குமார் தப்பியது எப்படி" என்றெல்லாம் விதவிதமான கட்டுரைகள்..பழைய புகைப்படம், புதிய படம், கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட, கழுத்தில் கட்டுடன்.... இப்படிப் படங்கள்.. எனக்கு ஒரு பழைய நினைவு.. அப்போது எனக்கு 14 வயது. ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். தினம் பாப்பாநாட்டிலிருந்து பஸ்சில் போய் வருவேன். இடைப்பட்ட ஊர் ஒன்றில் ஒரு தாசில்தார். அடிக்கடி நான் செல்லும் பஸ்ஸில், அந்த ஊரில் ஏறுவார். உள்ளூர்காரர், அதிகாரி என்கிற அடிப்படையில் … Continue reading “உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

நீதி எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்பட்சத்தில் விசாரணை, தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்றம் இயங்கும் அதே முறையில் ஸ்வாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் ராம்குமார் மீதான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகளே இங்கே தென்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும்வரை அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை கொலையாளி என எவரும் சுட்டக்கூடாது என்பது விதி.  பெரும்பாலும் பார்ப்பனர் தலைமையில் கீழ் இயங்கும் ஊடகங்கள், பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் கொல்லப்பட்டவர் பார்ப்பன சமூகத்தவர் (பெண் என்பதற்காகவெல்லாம் இல்லை; ஜெயந்திரர் … Continue reading பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

ஆம்புலன்சில் சென்னை கொண்டுவரப்படும் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நெல்லை மாஜிஸ்திரேட் எண்௧ ராமதாஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். நீதிபதியிடம் சுமார் 35 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார் ராம்குமார். முடிவில் ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல நெல்லை நீதிபதி அனுமதியளித்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், ஆம்புலன்ஸ் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுவத்தற்காக, கொண்டுவரப்படுகிறார். பாளையங்கோட்டையிலிருந்து, மதுரை, துவரங்குறிச்சி, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, ஆயுதப்படை … Continue reading ஆம்புலன்சில் சென்னை கொண்டுவரப்படும் ராம்குமார்

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு நோயாளி. அவரிடைய கழுத்துப்பகுதி அறுபட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்து, அழைத்து வரப்படுகிறார். அவருடன் போலீஸ்கூட்டமும் , ஊடகவுயலாளரும் ஒரு முக்கிய கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் என்று போலீஸ் கூறுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரை பேசவைத்து வாக்கு மூலம் வாங்க வேண்டும். எப்போது வாக்குமூலம் கிடைக்கும் என்று போலீசை விட , டி.ஆர்.பி. ரேடிங்கை ஏற்ற விழையும் சமூக அக்கறையுள்ள ஊடகவிலாளர்கள்... இந்நிலையில் சிகிச்சையளிக்கும் … Continue reading நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்