ஆணவக் கொலை செய்த ராமநாதபுரம் இளைஞர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

இராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபதி(24) என்பவர் ஆணவக் கொலை செய்ததற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 17 வயது பெண் ஒருவர் தலித் இளைஞரை காதலித்தார் என்பதற்காக அவரை தொண்டையை அறுத்து கொலை செய்தார் பூபதி. இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமாரும் மாவட்ட எஸ்பி மணிவண்ணனும் பரிந்துரைத்தனர்.