கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் … Continue reading கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

சு. இரவிக்குமார் காலை 10.30 மணிக்கு மினிப்பிரியாவில் ஜோக்கர் முதல் நாள் முதல்காட்சி பார்த்தாச்சு! Mockery Cinemaவுக்கு முயன்றிருக்கிறார்கள். ராமசாமியின் நாடகம் போன்ற நாடகத்துக்குள் கொஞ்சம் சினிமா தூவியிருக்கிறார்கள். சாமானியனின் குரல், அரசியல், சமூக அவலம் என்று படம் முழுக்க மனப்பிறழ்வாளனின் முற்போக்குக் குரலை எழுப்ப முயல்கிறது. எழுத்தாளர்கக், நாடகக்காரர்கள் என்று பலரும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். சுய வாழ்வில் காயம் பட்டவனே சமூக உணர்வோடு வெளியில் வருவான் என்பதும், இந்த அரசமைப்பை வெறும் கோமாளித்தனமாக சாகசங்களால் அதன் … Continue reading ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

சினிமாவுக்குப் போகும் எழுத்தாளர்: அட… பவா செல்லதுரை நடிக்கப் போகிறார்!

எழுத்தாளர் பவா செல்லதுரை சினிமாவில் நடிக்கிறார். செய்தி உண்மைதான் அவருடைய நெருங்கிய நண்பர் எஸ்கேபி. கருணா இதை சொல்கிறார். “தோழமையின் உச்சம், விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டு, மனிதத்தின் மீதான நம்பிக்கை, எளிதில் உணர்ச்சிவயப்படுபவர், மிகைக்கூற்றின் நாயகன், ஆகச் சிறந்த கதைசொல்லி என பல்வேறு பரிமாணங்கள் அவருக்கு. மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு தெரிந்த ஒரு ரகசியம் இது. ஆகச் சிறந்த சோம்பேறித்தனமும் அவரது இயல்புகளுள் ஒன்று. இலக்கிய விழா ஏற்பாடுகள் தவிர மற்ற அனைத்துச் செயல்களையும் பெரிய சிரத்தையோ, பதட்டமோ … Continue reading சினிமாவுக்குப் போகும் எழுத்தாளர்: அட… பவா செல்லதுரை நடிக்கப் போகிறார்!