ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது? பத்திரிகையாளர் மணி | வீடியோ

ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து பத்திரிகையாளர் மணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்.. நன்றி: நியூஸ் ஃபோகஸ் தமிழ் https://www.facebook.com/100051618376288/videos/217358849994726/

அரசியவாதி ரஜினி 1.0? அல்லது வியாபாரி ரஜினி 2.0?

உண்மையிலேயே தமிழகத்தின் மீது ஒரு துளி அக்கரையாவது இருந்தால், உடனடியாக அனைத்து படத்திட்டங்களையும் உதறிவிட்டு அரசியலில் குதித்திருக்கலாமே? இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன?

காலாவை புறக்கணிக்க கோரிக்கை… க்யா ரே செட்டிங்கா? – 1

சாதி ஹிந்துக்களால், சூத்திரர்களால் ஒருபோதும் தலித்துகளின் sensibilities யை உள்வாங்கமுடியாது. தலித்துகளின் கலை இலக்கிய செயல்பாடுகளை புரிந்துகொள்ளமுடியாது.

யார் நீ ரஜினி?

சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி.

“ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?”: மனுஷ்ய புத்திரன்

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார்.

”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதிமுக அரசும் இதே கருத்தை கூறிவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ரஜினியை பாராட்டி கட்டுரை எழுதியுள்ளது. காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி … Continue reading ”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு!

மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?

கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்ற பிரதிநிதிகளை சந்தித்துவருகிறார். பெண் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த ரஜினி, அவர்களுக்கு மனுஸ்மிருதியை பரிசளித்தார். பெண்களை பாகுபாட்டுடன் சித்தரிக்கும் மனுஸ்மிருதியை பரிசளிப்பதுதான் ஆன்மீக அரசியலா என விமர்சனங்கள் எழுந்துள்ளன. Prabaharan Alagarsamy பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிற மனுதர்ம சாஸ்த்திரத்தை, தன் கட்சியின் மகளிரணியினருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி.இதுதான் ஆன்மீக அரசியல்.. சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாக சொல்கிற ரஜினி, அதை சரி செய்வதற்கு வைத்திருக்கும் கையேடு … Continue reading மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?

’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு … Continue reading ’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட்

கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு … Continue reading ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட்

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி…”நோ கமெண்ட்ஸ்” சொன்ன ரஜினி

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்டதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இரங்கலையும் கருத்துக்களையும் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்திருக்கிறார் என்கிறது ஏஎன்ஐ செய்தி நிறுவனம். ரஜினியின் இந்தப் போக்கை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். வீடியோ: திலீப்குமார் டூ ஆஸ்கர் நாயகன்: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் குறித்த புத்தகம்...  https://youtu.be/Q2JBrJgdkV4

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்

“என் திருமணம் குறித்த செய்தி உண்மைதான்”: சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம் முறிவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “என் திருமணம் குறித்த செய்தி உண்மைதான். நாங்கள் இருவரும் ஒரு வருடமாகத் தனித்து வாழ்கிறோம். விவாகரத்து பெறுவதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை மதித்து நடந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். https://twitter.com/soundaryaarajni/status/776815765953454080  

ரஜினி, பிரபுதேவா, பாபி சிம்ஹா வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் வன்முறைச் சம்பவங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இங்கே இருக்கும் சில தமிழ் அமைப்புகள் கர்நாடகா வங்கி முன்போராட்டம் நடத்தின. கர்நாடக வண்டிகளும் தாக்கப்பட்டன. தமிழகத்தில் வாழும் கன்னட நடிகர்கள் சிலருக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் என அறியப்படும் ரஜினிகாந்த், பிரவுதேவா, ரமேஷ் அரவிந்த், பாபி சிம்ஹா ஆகியோரது வீடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்; தனுஷ் தயாரிக்கிறார்!

கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து, நடிகர் தனுஷ் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், அதை வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/dhanushkraja/status/770306581581869056

இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!

ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக … Continue reading இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!

தினமணி ‘கபாலி’ விமர்சனம்: சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் எதிர்வினை

தினமணி எழுதிய ‘கபாலி’ விமர்சனத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் முதல் தொகுப்பை இங்கே காணலாம். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள சில பதிவுகளை இங்கே தந்திருக்கிறோம்... Yamuna Rajendran தமிழ் சினிமா வெளியில் ரஞ்ஜித் ஒரு நிகழ்வு. அவர் முன் வைத்திருககும் சினிமா ஜானரும் ஒரு நிகழ்வு. சிவப்பு மல்லியைத் தொடர்ந்து அதே பாணியில் ராம நாராயணன் இரு படங்கள் எடுத்தார். அட்டகத்திக்கும் கபாலிக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. பொதுவாக சினிமா வெகுஜனங்களின் உளவியலாக்கத்தில் … Continue reading தினமணி ‘கபாலி’ விமர்சனம்: சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் எதிர்வினை

இந்துத்துவத்திற்கு ஆதரவான பண்பாட்டைப் பேசியிருந்தால் கபாலி கொண்டாடப்பட்டிருக்கும்!

வேந்தன். இல எங்கே பார்த்தாலும் 'கபாலி', யார பார்த்தாலும் 'கபாலி'.. யார்ரா அந்த 'கபாலி' ? 'கபாலி' - பெயர் காரணம் 'கபாலி' பெயர் காரணத்தை பேரா.செல்வக்குமார் அவர்கள் தான் ஒரு முறை என்னிடம் சொன்னார். புத்தர் உணவு வாங்குவதற்காக பயன்படுத்திய திருஓட்டின் பெயர் தான் 'கபாலம்'. அதை தான் பூர்வீக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 'கபாலி' என்று பெயர் சூட்டினர் என்றார். பௌத்தத்தின் மீதான வெறுப்பு தான் தீண்டாமைக்கு காரணம் என்பார் அம்பேத்கர். இன்று கபாலி … Continue reading இந்துத்துவத்திற்கு ஆதரவான பண்பாட்டைப் பேசியிருந்தால் கபாலி கொண்டாடப்பட்டிருக்கும்!

#கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?

Rajasangeethan John 1990-ல் வந்த படம். அதுவும் இதேதான். A retiring don, who wants to get back to his family, is threatened by a gang wa, for one last time. படம் Godfather 3. இந்த லைனை செய்வதானால், தமிழில் யாரால் செய்ய முடியும்? கமல் மொத்த Godfather படங்களையும் நாயகன் படத்திலேயே முடித்துவிட்டார். வேறு வழியில்லை. பாட்ஷா ரஜினியால் மட்டும்தான் முடியும். இப்படியான லைனை ரஞ்சித் ரஜினிக்கு … Continue reading #கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?

“பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!

கீட்சவன் பேரன்புள்ள பா.இரஞ்சித், நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் என் அருகே அமர்ந்திருக்கும் எனக்குப் பிரியமானவர்களிடம் பேசுவது பழக்கம். அவர்கள் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். சக மனிதர்கள் பார்வையில் இது மனநோய் போல் தெரியலாம். எனக்கு இது வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. அப்படித்தான் உங்களோடு பேசினேன். அதன் வரிவடிவம்தான் இந்தக் கடிதம் என்று கருதிக்கொள்ளலாம். ‪#‎அட்டக்கத்தி‬ எனும் அற்புத சினிமாவைக் கண்டு ரசித்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ரவுடிகளையும், சமூகப் பின்னணித் … Continue reading “பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!

#கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

Jeyannathann Karunanithi சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று. காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை … Continue reading #கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

“கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

பிரேம்   “கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” … Continue reading “கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு: “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்! கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க! தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்! மீண்டும் ஒரு "காளியை", "தளபதியை", "பரட்டையை" "கபாலியாக" எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்! … Continue reading “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

“எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன். பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று … Continue reading “எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

இதோ #NeruppuDaTeaser நெருப்புடா பாடல் டீஸர்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிக்கும் கபாலி படத்தின் ‘நெருப்புடா’ பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/wg-kEWsL6Xc

#கபாலிபாடல்: பா. ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புதிய பொருள் சொல்லும் முகநூல் சாதியவாதிகள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர். ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார்.   “நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.

#கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீஸர் மே 1 ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட சில மணி நேரங்களில் கபாலி டீஸர் வைரலாக, சமூக வலைத்தளங்களில் கபாலி பட பேச்சே முதன்மையாக இருக்கிறது. http://www.youtube.com/watch?v=9mdJV5-eias Jeeva Bharathi கபாலி டீசரில் அரசியல் அடிமைகளுக்கு ஒரு செய்தி இருக்கு.... கொஞ்சம் நிமிரவும்... ‪#‎கபாலிடா‬ Swara Vaithee கபாலி நமக்கு இரண்டு வகையான வாய்ப்பை வழங்குகிறது. அதை ஒரு சினிமாவாக அணுகலாம், அல்லது அதன் ஒவ்வொரு அசைவிலும் … Continue reading #கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!

பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தகவல் தொடர்புகளை தன்னுடைய நிறுவனத்தின் மூலமாகவே செய்வார் என்றும் நிகில் முருகன் இனி தன்னுடைய தகவல் தொடர்பு அதிகாரியாக நீடிக்க மாட்டார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://twitter.com/Shailja/status/704515794449899522 தமிழ் சினிமாவில் சர்வ அதிகாரம் படைத்தவராக வலம் வந்த நிகில் முருகன் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று சினிமா நிருபர்களிடம் விசரித்ததில் கிடைத்த சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம். *தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் நிகில் முருகன் தவறாக நடந்திருக்கிறார் … Continue reading பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

#சட்டப்பேரவைத்தேர்தல்2016: முதல்வர் வேட்பாளர் விஜய்?!

மக்களின் ‘தலைவன்’ தேடுதல் மீண்டும் சினிமா வட்டாரத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தங்களுக்கு நல்ல தலைவராக இருப்பார் என ஒரு சிலர் விரும்புவதுபோல், நடிகர் விஜய் எங்களுக்கு தலைவராக இருப்பார் என்கிற விருப்பத்தையும் ஒரு சில மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி, லயோலா கல்லூரியுடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்திய அதில் முதல்வர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் … Continue reading #சட்டப்பேரவைத்தேர்தல்2016: முதல்வர் வேட்பாளர் விஜய்?!

எந்திரன் 2.0 தொடங்கியது: அக்‌ஷய் குமார் வில்லன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான எந்திரன் 2.0 படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்ஸன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ. ஆர். ரகுமான், ஒளிப்பதிவு- நிரவ் ஷ, ஒலிப்பதிவு-ரசூல் பூக்குட்டி. ஹாலிவுட் படங்களான ஜுராசிக் பார்க், அவென்ஞ்சர்ஸ் படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட் செய்த ‘லெகஸி எஃபெக்ட்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்துக்கு ஸ்பெஷல் … Continue reading எந்திரன் 2.0 தொடங்கியது: அக்‌ஷய் குமார் வில்லன்?