யார் நீங்க? #நான்தான்பாரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை  நேரில் சந்தித்தார். சிகிச்சை பெற்றவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்தார் ரஜினி. அப்போது, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சந்தோஷ் என்ற இளைஞர், ‘யார் நீங்க?’ என ரஜினியைப் பார்த்து கேட்டார். ‘ நான்தான்பா ரஜினிகாந்த்’ என பதிலளித்தார் அவர். நூறு நாட்களாக நடந்த போராட்டத்தின் போது வராத ரஜினி, இப்போது எதற்காக வருகிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்ததுடன், … Continue reading யார் நீங்க? #நான்தான்பாரஜினிகாந்த்!

‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் ரஜினி காந்த்,  இதன் மூலம் புதிய இந்தியா பிறந்தது என தனது ட்விட்டர் பதிவில் புகழ்ந்திருக்கிறார். ரஜினியின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் கருத்து இது: ரஜினி எனும் சூப்பர் ஸ்டார்... நதிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி தருகிறேன் என்று சொல்லும் மூடர்களும், கருப்பு பணத்தை ஒழிக்க அன்றாடங்காய்ச்சிகளை காய்ச்சி எடுப்பவர்களை … Continue reading ‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி

எந்திரன் பட வில்லனாக அமிதாப் நடிப்பதற்கு ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லையா? அமிதாப் பச்சனே விளக்கம்…

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் வேடத்தில், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு  அமிதாப் பச்சன் பேட்டியளித்தார். "எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் என்னை வில்லனாக நடிக்கவைக்க விரும்புவதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இதுகுறித்து நான் ரஜினிக்கு தொடர்பு கொண்டு கூறினேன். இதை கேட்ட அவர் "மக்கள் உங்களை ஒரு வில்லனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நானும் அவர் … Continue reading எந்திரன் பட வில்லனாக அமிதாப் நடிப்பதற்கு ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லையா? அமிதாப் பச்சனே விளக்கம்…

ரஜினிகாந்த் ரூ.10 கோடி வெள்ளநிவாரண நிதி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 கோடி வெள்ளநிவாரண நிதி அளித்தார். முன்னதாக வரவிருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.