“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்

அன்புள்ள திரு ரங்கராஜ் (பாண்டே) அவர்களுக்கு, வணக்கம். 'ஹிந்தி திணிப்பு உண்மையா?' என்னும் தலைப்பில், சாணக்கியாவில் நீங்கள் ஆற்றியுள்ள உரையைக் காணொளி வடிவில் முழுமையாகப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்,'புரட்சி வெடிக்கும், கிளர்ச்சி வெடிக்கும்' என்னும் குரல்கள் கேட்பதாக, ஒரு மெலிதான ஏளனத்துடன் தொடங்கும் அந்த உரை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதன் பிறகு, … Continue reading “நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்

தந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது

தந்தி டிவியை முழுக்க இந்துத்துவம், ஸ்டெர்லைட், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாற்றியது பாண்டே இழைத்த தமிழர் விரோத பெருங்குற்றம்.

பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா?

அங்கீகரிக்கப்பட்ட தார்மீக நெறிகளுக்கு மாறாக விலகி ஒன்றைச் செய்வதே ஊழல்தான். தமது வலதுசாரி சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் விதத்தில் தமிழகத்தில் ஒரு ஊழல் அரசை பராமரித்து காப்பாற்றிவரும் மத்திய ஆளும் அரசின் செயல் ஊழலே. எதன் பொருட்டு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு மாறாக கொல்லைப்புற பேரத்தின் வழியாக ஆட்சியை மாற்றுவதும் ஊழலே.

மக்களை மடைமாற்றும் உத்தி; பாண்டே செய்வது யாருக்கான உதவி?

ராஜசங்கீதன் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு புனிதமானது. கொள்கை பிரச்சாரத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த கூட்டு, கட்சி வளர்ப்பு, பிம்ப நிர்மாணம், கூட்டம் உருவாக்குதல், முக்கிய பிரச்சினைகளின் தீவிரத்தை சினிமாவாக்கி நீர்த்து போக செய்தல், சமூக பிரச்சினைகளுக்கு திரைவாசிகளை நாடுதல், சினிமா பிரச்சினைகளுக்கு அரசியலை நாடுதல் என பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கிறது. சினிமாவின் இத்தகைய சமூக ஊடறுப்பால் சமூகத்தின் பல அங்கங்களும் அதை தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கின்றன. சினிமாவும் அவ்வங்கங்களை தன் தேவைக்கு பயன்படுத்திக் … Continue reading மக்களை மடைமாற்றும் உத்தி; பாண்டே செய்வது யாருக்கான உதவி?

கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைத்தளங்கள்: ரங்கராஜ் பாண்டே கருத்து சமூக ஊடக எதிர்வினை

கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசினார். ‘கருத்து (சு)தந்திரம்’ என்னும் தலைப்பில் அவர் பேசியதாக தினமணியில் வந்துள்ள செய்தி: கருத்து சுதந்திரமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நியாயத்தோடும், நடுநிலைமையோடும், அடுத்தவர் மனம் புண்படாதபடியும் இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பேசப்பட்டால் அது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது கருத்து தந்திரம். ஊடகங்களில் வெளியாகும் … Continue reading கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைத்தளங்கள்: ரங்கராஜ் பாண்டே கருத்து சமூக ஊடக எதிர்வினை

பகுத்தறிவு பாசறை வரை செல்லும் ஊடக லாபி; பாண்டேவுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர் தி.க.விலிருந்து நீக்கம்

கடந்த வருடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை நேர்காணல் செய்தார் தந்தி டிவியின் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. அப்போது தந்தை பெரியார், பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார்  என சொல்லி ஒரு கேள்வியை முன்வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தும் இதுபோன்று பெரியார் கூறவேயில்லை என்றும் இதற்கான ஆதாரம் இருந்தால் பாண்டேவிடம் இருந்தால் தரவேண்டும்; அப்படியில்லை என்றால் இப்படியான மேற்கோளை ஊடகத்தில் சொன்னதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் செஷன்ஸ் … Continue reading பகுத்தறிவு பாசறை வரை செல்லும் ஊடக லாபி; பாண்டேவுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர் தி.க.விலிருந்து நீக்கம்

“உடம்பு சரியில்லை”: பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பாண்டே நீதிபதியிடம் சொன்ன காரணம்! 

சென்னியப்பன் வழக்குரைஞர் பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த பாண்டே,   தொடர்ந்து ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 13.6.2016 அன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரிடையாக ஆஜரானார். பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, "சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே நீங்கள் கடந்த ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்? என்பதுதான்.    இதற்கு … Continue reading “உடம்பு சரியில்லை”: பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பாண்டே நீதிபதியிடம் சொன்ன காரணம்! 

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார். இதைப் படியுங்கள்: தந்தி … Continue reading “மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…

வியாழக்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி குறித்து சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார்... “விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்? பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது. காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை … Continue reading #விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…