மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். இந்நாவல் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்றது. நாவலை மலைச்சொல் பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/I1jN5mchiR0
Tag: யுவ புரஸ்கார்
“எதிர்பார்த்தபோது கிடைக்கவில்லை; எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது”: லக்ஷ்மி சரவணகுமார், குழ. கதிரேசனுக்கு யுவ-பால புரஸ்கார்!
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘உப்புநாய்கள்’ மிகவும் பேசப்பட்ட நாவல். வெளியான நான்கு ஆண்டுகள் கழித்தும் வாசகர்களால் கொண்டாடப்படும் நாவல். இது வெளியான ஆண்டிலேயே சாகித்ய அகாடமி இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் ‘யுவபுரஸ்கார்’ விருதைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எவரும் எதிர்பாராத ‘கானகன்’ நாவலுக்காக ‘யுவபுரஸ்கார்’ தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் காஞ்சா தோட்டங்களில் உழலும் அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்த நாவலும் வரவேற்பைப் பெற்றதே. இந்த விருது குறித்து எழுத்தாளர் Lakshmi Saravanakumar தன்னுடைய முகநூலில் … Continue reading “எதிர்பார்த்தபோது கிடைக்கவில்லை; எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது”: லக்ஷ்மி சரவணகுமார், குழ. கதிரேசனுக்கு யுவ-பால புரஸ்கார்!