ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?

வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் … Continue reading ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து

மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  யுவராஜ் . இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவரது மனைவி சுமிதா சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யுவராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

ஆதவன் தீட்சண்யா " ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம். இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை … Continue reading ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!

இளங்கோ கிருஷ்ணன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை வளாகத்தில் இரண்டு இந்தியத் தலைவர்களுக்கு சிலைகள் உள்ளன. ஒருவர் காந்தி, இன்னொருவர் அம்பேத்கர். இரண்டு சிலைகளுக்குமே உண்மையான மூக்குக்கண்ணாடி அணிவிக்கப்பட்டிருக்கும். இதில், அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படும். யார் இதைச் செய்கிறார்கள் என பல்கலைக்கழகத்தினர் கண்காணித்தபோது, இந்திய மாணவர்களில் ஒரு பிரிவினர் இதைச் செய்வதை அறிந்தனர். ஐரோப்பியர்களுக்கு புரியவே இல்லை. அம்பேத்கரும் அவர்கள் தேசத்தின் தலைவர்தான் ஏன் அவர் கண்ணாடி மட்டும் உடைகிறது என. … Continue reading ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!