பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டிகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்கிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான … Continue reading மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா?
Tag: மோடி அரசு
கருப்புப் பணம் என்ன கரன்ஸி நோட்டிலா இருக்கிறது?!
சந்திர மோகன் நவ.10 முதல் ரூ.500, ரூ.1000 கரன்சி நோட்டுக்கள் செல்லாது என திடீரென பிரதமர் மோடி அறிவித்துவிட்டார். இரண்டு நாட்கள் ஏடிஎம் இயங்காது. வங்கிகளும் இயங்காது. வங்கிகள் திறந்த பின்னர், ரூ.4000 வரை ஆதார் அட்டை காட்டி சில்லறை நோட்டுக்கள் மாற்றிக் கொள்ளலாம். ATM களில் நாளொன்றிற்கு ரூ.2000 மட்டுமே, வங்கிகளில் வாரத்திற்கு ரூ.20,000 மட்டுமே இனிமேல் எடுக்க வேண்டும். கூடுதலான பணம் என்றால் அக்கவுண்டில் போட்டு மாற்ற வேண்டும். புதிய 500 , 2000 ரூபாய் … Continue reading கருப்புப் பணம் என்ன கரன்ஸி நோட்டிலா இருக்கிறது?!
கருப்பு பண மீட்பரல்ல; கார்ப்பரேட்களின் காவலன்!
அருண் நெடுஞ்செழியன் வாரக் கடன்: இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்திடம் இருந்து சுமார் 7 1/2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது.அதன் முதல் நான்கு இடங்களில் முறையே ரிலயன்ஸ் அனில்அம்பானி -1.21 லட்சம் கோடி ரிலயன்ஸ் முகேஷ் அம்பானி -1.87 லட்சம் கோடி எஸ்ஸார் குழுமம் -1.01 லட்சம் கோடி அதானி குழுமம் - 0.96 லட்சம் கோடி உள்ளது. நாளது வரை,இந்தக் தொகையை வசூலிக்கிற நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, ஆளும் அரசோ கடனை … Continue reading கருப்பு பண மீட்பரல்ல; கார்ப்பரேட்களின் காவலன்!
’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு!
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடியாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘நவீன கால துக்ளக்’ போல மோடி செயல்படுவதாக தாக்கியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான மணிஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், முகது பின் துக்ளக் ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவித்திருப்பதன் மூலம் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கு மாற்றிக்கொள்ளவிருக்கிறார். துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!” என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/ManishTewari/status/796013756631289857 … Continue reading ’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு!
மோடியின் ரூபாய் மந்திரம் யாருக்கு பலன் தரும்?
சி. மதிவாணன் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து மோடி அறிவித்துள்ளார். ATM வாசல்களில் பெரும் கூட்டம். பலர் அல்லாடுகிறார்கள். ஏனெனில் இன்றைய நிலவரத்தில் 500 அல்லது 1000 என்பது அன்றாட செலவு என்பது இயல்பாகிவிட்டது. கருப்புப் பணத்தைச் சேர்க்க அல்ல, மாறாக, வசதிக்காக 500-1000 தாள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் நடுததர வர்க்கமாக கூட இருக்கலாம். ஆனால், பணக்காரர்கள் அல்ல. இன்றைய நிலையிர் 500 ரூபாய் மட்டும் கையில் வைத்துள்ள ஒருவர் … Continue reading மோடியின் ரூபாய் மந்திரம் யாருக்கு பலன் தரும்?
ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி
நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் … Continue reading ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்
தமிழகத்தில் அதிமுக அரசில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழக அரசை நிலைகுலையச் செய்யவும் நரேந்திர மோடி அரசு முயற்சித்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையானது தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முழுமையாக நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தோம். … Continue reading தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்
மிச்சம் இருக்கின்ற விகாஷ் புருஷின் இரண்டரை வருட ராஜ்ய பரிபாலனத்தில்…
அகமது இக்பால் *ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த மதசகிப்பு, அமைதி எல்லாவற்றையும் மொத்தமாக கொலை செய்தாயிற்று; *அடிப்படை உரிமையான தனிமனிதனின் உணவுத்தேர்வையும் கூட பிரச்னைக்குரிய ஒன்றாக்கி கொலை பாதகம் வரை சென்றாயிற்று; *விகாஷ்புருஷின் சொந்த மாநிலத்திலேயே தலித்துக்களின் சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார நிலைமையின் லட்சணம் என்ன என்பதை உனா நிகழ்வும் தொடர்ந்த மாபெரும் எழுச்சி யாத்திரையும் அம்பலமாக்கின *‘ஒவ்வொருவரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் ரூபாய் ஏறும் நன்னாளை எதிர்பாருங்கள்’ என்ற விகாஷ்புருஷின் வாக்கு வெறும் பச்சைப்பொய் என … Continue reading மிச்சம் இருக்கின்ற விகாஷ் புருஷின் இரண்டரை வருட ராஜ்ய பரிபாலனத்தில்…
நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்
இக்பால் அகமது கடந்த ஏப்ரல் 18, 19 இரு நாட்களும் பெங்களூரில் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கம் வீறுகொண்ட ஆவேசத்துடன் சாலைகளில் திரண்டது; ஆகப்பெரும்பான்மையோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; அது தன்னெழுச்சியான போராட்டம். மத்திய மோடி அரசு ’தொழிலாளர்களின் சேமிப்பான ஈபிஎஃப்-ஐ அவர்கள் ஓய்வுபெறும்போது அதாவது 58 வயது நிறைந்த பின்னரே மீட்டு எடுக்க முடியும்’ என்று திடீர் ஆணை பிறப்பித்தது; பெங்களூரின் லட்சக்கணக்கான ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்தான் கோபாவேசம் கொண்டு வீதிகளில் திரண்டு இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை … Continue reading நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்
மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார். புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது … Continue reading மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
மோசமான ஆளுகை, ஆர்எஸ்எஸ்ஸின் சாதிவெறி - மதவெறி நிகழ்ச்சிநிரல் திட்டமிட்ட விதத்தில் முன்னகர்த்தப்படுவது, பிற்போக்கு ஆணாதிக்க மனோபாவம் ஆகியவற்றால், எம்எல் கத்தார் தலைமையிலான அரியானா பாஜக அரசாங்கம், ஏற்கனவே நம்பகத்தன்மை இழந்திருக்கிறது; இப்போது, இந்திய அரசின் அரசியல் சாசன அடிப்படையின் மய்ய கோட்பாடான, மதத்தை அரசியலில் இருந்து பிரித்து நிறுத்துவது என்ற மதச்சார்பின்மை கோட்பாட்டை வெளிப்படையாக மீறியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று, ஜைன துறவி தருண் சாகரை சட்டமன்றத்தில் பேச அழைத்தது. தொழில்நுட்பரீதியாகச் சொல்வதென்றால், தருண் சாகர் … Continue reading அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிடப்பட்டனர். அவர்களுக்காக நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்று பேசினார். நேருவும் பட்டேலும் … Continue reading வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் … Continue reading ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?
சமர் ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் 'அவமானகரமான மௌனம்' என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான மௌனத்தை … Continue reading “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?
“எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”
திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, பா.ஜ.க.வினர் சிலரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரும் மற்றும் அவர்களது தொண்டரடிப்பொடி பிரசாரகர்களும், விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலையின்றி, எதை நினைத்தாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எல்லைக்கே சென்று செயல்பட்டு, நாட்டில் பேதத்தையும், வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட … Continue reading “எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”
நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை … Continue reading நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி … Continue reading “ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….
Kathir Vel டியர் ஸ்மிருதி இரானி ஜி, புதிய கல்விக் கொள்கை எப்போது வெளியாகும்? :பிகார் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி போட்ட ட்வீட். ____ டியரா? ஒரு பெண்ணை டியர் போட்டு அழைக்கிறீர்களே, இதுதான் உங்கள் நாகரிகமா? :மத்திய கல்வி அமைச்சர் ’டிகிரி புகழ்’ ஸ்மிருதியின் அதிர்ச்சி. _____ டியர் போட்டு பேர் சொல்றதுதானே மரியாதை? நீங்ககூட அப்படிதானே ட்வீட்டெல்லாம் போட்டீர்கள். இப்போது திடீர் என்று டியருக்கு என்ன வந்தது? :பிகார் அமைச்சரின் குழப்பம். ____ … Continue reading பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….
காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
ஷாஜஹான் R அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் — பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார். பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் … Continue reading காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு விவசாயபொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தியிலும் வீழ்ச்சியை சந்தித்தது. பொருள் உற்பத்தி குறைந்தது. அதேநேரம் தாராளமயம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்று பெருமையுடன் … Continue reading “உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
சேம நல அரசு என்பதை மெல்ல மெல்ல அழித்து அந்நிய மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக அரசாங்கத்தினை மாற்றக் கூடிய ஏற்பாட்டினை செய்து வருகிறது மோடி அரசு. உலக நிதி மூலதனத்தை வேண்டுமென்றே தாஜா செய்யும் மத்திய அரசாங்கத்தின் இந்த நோக்கத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமில்லை. மாறாக பாரதீய ஜனதா கட்சியின் மிக ஆபத்தான பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கமே உள்ளது என்கிறார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் … Continue reading இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!
மாதவராஜ் நடிகர் ராமராஜனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, இந்த நாட்டின் பிரதமரின் போலிக் கல்விச் சான்றிதழ் குறித்த விவாதங்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாய் ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, … Continue reading நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!
“மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
“இதுபோன்று மாணவர்களின் நலனில் அக்கறையற்று மரக்கட்டைபோல் உணர்ச்சியற்று இருந்திடும் ஒரு துணைவேந்தரை நாங்கள் எங்கேயும் சந்தித்தது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளமாட்டோம். இது சாகும்வரையிலான உண்ணாவிரதம்,’’ என்று மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராம நாகா கூறுகிறார். 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களில் ராம நாகாவும் ஒருவர். கன்னய்ய குமார் உட்பட ஆறு பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாலும், மருத்துவர்கள் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு சிகிச்சையைத் தொடர … Continue reading “மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?
இந்திய அரசு - உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவருடைய பேட்டியின், முக்கியமான பகுதிகளை எழுத்து வடிவில் கீழே அளித்திருக்கிறோம். *வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இந்தியாவிற்குள் தாராளமாக இறக்குமதி செய்வதற்கு பாரதீய ஜனதா அரசு, உலக வர்த்தக … Continue reading ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?
ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் சென்னையில் புதனன்று (மே 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விக் கடனில் மிக மோசமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பலரை கடனை திருப்பி கட்டக்சொல்லி துன்பப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். என்றாலும் இந்தமாதியான பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்டுள்ளது. என்னுடைய மகள் கல்விக் கடன் பெற்று … Continue reading ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!
33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
அன்பே செல்வா 33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது, நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் … Continue reading 33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
”தெருச் சண்டைக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் சுப்ரமணியம் சுவாமி”
சமீபத்தில் மாநிலங்களவை எம்பியாக பாஜக சார்பில் நியமிக்கப்பட்டவர் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. ஆதாரம் இல்லாத அவதூறு பேச்சுகளுக்கு சொந்தக் காரரான சு. சுவாமி, மாநிலங்களவையில் நுழைந்த நாளில் இருந்தே தெருச்சண்டை களமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் மூத்த … Continue reading ”தெருச் சண்டைக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் சுப்ரமணியம் சுவாமி”
மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?
அ. மார்க்ஸ் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது," "கோதாவரி - கிருஷ்ணா பேசினில் ஏராளமாக எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டாண்டுகளில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கி விடுவோம்" என அதிரடியாக அறிவித்து 11 ஆண்டுகள் ஆகியும் வாயு மட்டுமல்ல ஒரு ஏப்பம் கூட வெளிவரவில்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளிலிருந்து இதுவரை 19,726 கோடி ரூபாய் அந்தத் திட்டத்திற்குக் கடன் பெறப்பட்டுள்ளது என்கிற உண்மையை சென்ற மார்ச் 31 அன்று CAG தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியது … Continue reading மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?
ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்
அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி மெட்ராஸ் ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், பேராசிரியர் ராம் புன்யாணியின் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘மத தேசியவாதத்திலிருந்து அம்பேத்கரின் சிந்தனைகளை விடுவித்தல்’ என்ற பொருளில் நிகழ இருந்த இந்த உரை, ஐஐடியின் IC & SR அரங்கில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ந் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்வு ஆரம்பிக்க இருந்த கடைசி நிமிடத்தில் திடீரென அனுமதியை மறுத்திருக்கிறது ஐஐடி நிர்வாகம். காரணம் கேட்டபோது, மாணவர் அமைப்புகள் நடத்தும் … Continue reading ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்
“முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்
பாஜக எம்பியும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “முஸ்லிம் பெண்களுக்கு மசூதிகளில் நமாஸ் செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு இந்த உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். இந்த நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்க வேண்டும், ஃபத்வாக்களின் படி அல்ல” என்று அவர் தெரிவித்தார். சாக்ஷி மகராஜ், சர்ச்சைகளால் பெயர் பெற்றவர், கடந்த ஆண்டும் இந்து பெண்கள் நான்கு … Continue reading “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்
ஒரு கிலோ வெங்காயம் 30 பைசா!
ஆறு மாதத்துக்கு முன்பு வெங்காயம் விலை ரூ. 150 வரை விற்கப்பட்டது. உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆனது. ஆனால், இப்போது வெங்காயம் விலை ஒரு ரூபாய்க்கும் குறைந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெங்காய உற்பத்தி அதிகமாகிவிட்ட காரணத்தால், மொத்த விலை மண்டிகளில் வெங்காயம் கிலோ 30 பைசாவுக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் நிமூச் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கே அதிகப் … Continue reading ஒரு கிலோ வெங்காயம் 30 பைசா!
சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…
ஹரியான சட்டப்பேரவையின், பல வருட உறுப்பினராகவும், சமூக நீதி, வருவாய்துறை, உள்ளாட்சி என்று பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், ஏராளமான முறை பணியாற்றிய ஷ்யாம் சந்த் - Saffron Fascism என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் பார்ப்பனீயத்தை மட்டுமே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது என்றும் தாழ்த்தப்பட்டவர்களை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சூழலிலேயே வைத்திருக்க விரும்புவதாகவும் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த கருத்துக்களை முன்னிறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் தொண்டர்களுக்கு அனுப்பிய ரகசிய சுற்றறிக்கை எண் 411-ல் குறிப்பிடப்பட்டிருந்த கருத்துக்களை, Saffron … Continue reading சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…
“என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா
மத்திய ஆட்சியாளர்கள், தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புது விதமான சித்ரவதையை செய்ததாகவும் பேராசிரியர் சாய்பாபா கூறியுள்ளார். 1990-ம் ஆண்டுகளில் சமூகநீதி, இடஒதுக்கீடு கோரிக்கைகளுக்காக போராடியவர் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. பின்னர் காவல்துறையின் போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத் தார். 2000-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்த சாய்பாபா, 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ்அரசு துவங்கிய - ‘பசுமை … Continue reading “என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா
இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!
அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சமஸ்கிருத மொழியில் வெளியான பிரியமாசணம் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமஸ்கிருதம் மாநில மொழி பிரிவில் விருது பெற்றிருக்கிறது. எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழிக்கு எப்படி மாநில மொழிக்கான விருது வழங்கலாம் என பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். வினோத் மன்காரா என்பவரால் இயக்கப்பட்ட பிரியமாசணம், இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசுவதாகக் கூறி, கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நிராகரிக்கப்பட்டது. கேரளத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, உன்னாயி … Continue reading இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!
பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?
ஆண்டுதோறும் சினிமாவுக்கென வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேசிய விருது பெறும் படங்கள் வணிக ரீதியிலான வெற்றி என்பதைக் கடந்த சினிமாவின் கலை அம்சத்தைத் தொடும் படங்களுக்கென வழங்கப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு, பாகுபலி என்ற பன்மொழி வெற்றி படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழ்ஸ்டுடியோ அருண் இளையராஜா, வெற்றிமாறன், சமுத்திரக்கனி தேசிய விருதை புறக்கணிக்க வேண்டும்... ஒரு அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தும் படத்தை … Continue reading பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?
இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்
கல்பனா கண்ணபிரான் ரோஹித் வெமுலாவின் தற்கொலையிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் கற்க மறுக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அங்கே மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை வெளிஉலகிற்குத் தெரியாமல் மூடிமறைத்துவிட்டால் போதும் என்கிற ரீதியில் தன் நிர்வாக எந்திரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் நடைபெற் றுள்ள நிகழ்வுகள் மிகவும் வலியை ஏற்படுத்து கின்றன. திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துணை வேந்தர் வளாகத்திற்குள் நுழைந்ததானது, பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பெரும்திரளாகக் கூடி தங்கள் … Continue reading இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்
சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு, தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள … Continue reading சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?
#பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்
வழக்குரைஞர் மில்ட்டன் சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாய்பால் ஜனா. 1992-ல் பிலாய் தொழிலக பகுதியில் தொழிலாளர் போராட்டத்தின் பொழுது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. 18 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் காயம்பட்ட தொழிலாளர்களுக்காக மருத்துவ … Continue reading #பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்