யுபிஎஸ்இ தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இடம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் பங்கேற்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜம்ஷெத் அன்சாரி தாக்கல் செய்திருந்த பொதுநல மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு; தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் ஆணை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரும் திருநங்கைகளின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளில் ஆண்கள் பிரிவில் திருநங்கைகளை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.

மூன்றாம் பாலினத்தவருக்கு சமூக நலத்திட்டங்களை அளிக்கும் முதல் மாநிலமாக ஒடிசா!

ஓய்வூதியம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை மூன்றாம் பாலினத்தவருக்கு அளிக்கும் முதல் மாநிலம் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறது ஒடிசா. தங்களுடைய பால் நிலை காரணமாக சமூக நீக்கம் செய்யப்பட்ட அவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சினை வேலையின்மை. அதனால் பெரும்பாலானவர்கள்,  பாலியல் தொழிலுக்கும் பிச்சை எடுப்பதற்கும் தள்ளப்படுகின்றனர். எனவே, மூன்றாம் பாலினத்தவரை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகக் கருதி  அவர்களுக்கு சமூக நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறோம் என்கிறார் ஒடிசா மாநில சமூக பாதுகாப்புத் துறை செயலர் நிதின் சந்திரா. … Continue reading மூன்றாம் பாலினத்தவருக்கு சமூக நலத்திட்டங்களை அளிக்கும் முதல் மாநிலமாக ஒடிசா!

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

Anohni, பிரிட்டனைச் சேர்ந்த திருநங்கை. பாடகர், பாடலாசிரியர். உலக வெப்பமயமாதல் தொடர்பான Racing Extinction ஆவணப்படத்தில் இவர் இயற்றிய “Manta Ray” பாடல் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்ற பாடல்களை தொடர்புடையவர்கள் மேடையில் பாடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருடம் நோஹ்னி உடன் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள  லேடி காகா, சாம் ஸ்மித் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் பாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. … Continue reading ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி!

தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ப்ரித்திகா அவ்வளவு எளிதில் எஸ்.ஐ. போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதில் பங்கு கொள்ளவே பெரிய போட்டியைச் சந்தித்து இருக்கிறார். அதை … Continue reading இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி!

பாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை?

இந்தியன் பீனல் கோட் 377-ம் பிரிவு என்றால் என்ன ? இயற்கைக்கு விரோதமான உடலுறவு பற்றி இந்த பிரிவு பேசுகிறது. இயற்கை நிமித்தத்திற்கு எதிராக மனிதர்களுடனோ, விலங்குகளுடனோ உடலுறவு கொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இதில் ஓரினசேர்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றிய குற்றவியல் சட்டத்தின் பிரிவில் உள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் எது பொது நெறி என்று நினைத்தார்களோ அதன் அடிப்படையில் இயற்றப்பட்டது. இன்று அவர்களுடைய நாட்டிலேயே இந்த … Continue reading பாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை?