காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே.. எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி: காலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை. இந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் … Continue reading காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி

”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி

இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... “தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், … Continue reading ”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி

வசவுகளைக் கழுவி பரிகாரம் செய்க: பாஜகவுக்கு மு.க. அறிவுரை

ஏழையெளிய மக்கள் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் காண, மத்திய பா.ஜ.க. அரசினர் முன்வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்: இந்தியப் பிரதமர், நரேந்திரமோடி, பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய … Continue reading வசவுகளைக் கழுவி பரிகாரம் செய்க: பாஜகவுக்கு மு.க. அறிவுரை

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு தேவை: பார்வையாளர்கள் வருவதைத் தவிர்க்குமாறு தலைமைக்கழகம் அறிவிப்பு

திமுக தலைவர் மு. கருணாநிதி ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், “தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் … Continue reading திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு தேவை: பார்வையாளர்கள் வருவதைத் தவிர்க்குமாறு தலைமைக்கழகம் அறிவிப்பு

திமுக துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு: கருணாநிதி இரங்கல்

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு திமுக தலைவர் மு. கருணாநிதியும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மு. கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சற்குண பாண்டியனின் மறைவு துயரைத் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திருமதி சற்குணப் பாண்டியன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மறைந்து விட்டார் … Continue reading திமுக துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு: கருணாநிதி இரங்கல்

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

“உடன்பிறப்பே உன்னால் முடியாதது உலகினில் ஏதும் உண்டோ?’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு பதினைந்தாவது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 22 அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனநாயக மரபுகளையொட்டி, கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த அனைவருடனும் “நேர்காணல்” நிறைவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்து, அவர்களுடைய கருத்துக்களைப் பெற்று, பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் வழங்கிய அறிவுரை, … Continue reading திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

திமுக-காங்கிரஸ் கூட்டணி: 2 G விவகாரத்தை மறந்துவிட்டதா திமுக?

உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வன் கூட்டணி என்று வரும்போது காங்கிரசை ஒதுக்கவில்லை என்று காங்கிரசுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் மு.கருணாநிதி. இனி எப்பொழுதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் 2013 ஆம் ஆண்டு சொன்னதாக நினைவு. திமுக காங்கிரசுடன் தாரளமாக இணையலாம். ஆனால் 2 G விவகாரத்தில் நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள், ராஜா பலிகடா ஆக்கப்பட்டார், தலித் என்பதால் ராஜா பழிவாங்கப்படுகிறார், மன்மோகனுக்குத் தெரியாமல் இது நடக்குமா என்று பல வகைகளில் காங்கிரசை குற்றம் சாட்டிய பின்னர்தான் கூட்டணியில் இருந்து திமுக விலகியது. … Continue reading திமுக-காங்கிரஸ் கூட்டணி: 2 G விவகாரத்தை மறந்துவிட்டதா திமுக?

”நமக்கு நாமே-திமுக மீட்புப் பயணம்” மு. க. அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர் தலைப்பு இது!

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக பல்வேறு இடங்களில் ஸ்டாலினை வரவேற்று, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அழகிரி ஆதரவாளர்களால், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “நமக்கு நாமே திமுக மீட்புப்பயணம்” என குறிப்பிட்டு, கருணாநிதி படத்துடன் அழகிரி படத்தையும் சேர்த்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  

முதலமைச்சர் அலட்சியம்: சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கருணாநிதி மனு

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் வெள்ளச் சேதம் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் அவர் இன்று புகார் மனு அளித்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரியை முன்பே திறந்துவிட்டிருந்தால் டிசம்பர், 1 மற்றும் 2 ம் தேதிகளில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம் . செம்பரம்பாக்கம் ஏரியில் 33,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், ஒரு … Continue reading முதலமைச்சர் அலட்சியம்: சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கருணாநிதி மனு