இனியன் 90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு வருடமும் சிலைகரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களைக் குறிவைத்து இந்த ஊர்வல நிகழ்வினை மதம் சார்ந்த கட்டாயச் சடங்காக மாற்றியமைத்ததில் இந்துவா அமைப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியடந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும் பெருகிவருகிற … Continue reading இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?
குறிச்சொல்: முற்போக்கு
’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்
அறிவழகன் கைவல்யம் "அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்" என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், "பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்" என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது. பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் … Continue reading ’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்
தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!
Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!