பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு

சென்னை காட்டாங்கொளத்தூரில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஹோட்டல் மேனேஜ் மென்ட் என பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். … Continue reading பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு

ரூ. 70 லட்சம் மோசடி: பாரிவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

மருத்துவ படிப்பிற்கு இடம் வழங்கும் விவகாரத்தில் பண மோசடி, தயாரிப்பாளர் மதன் காணாமல் போனது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடையதாக, எஸ் ஆர் எம் கல்விக் குழும நிறுவனர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் கடந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜாமின் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாரிவேந்தர் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், … Continue reading ரூ. 70 லட்சம் மோசடி: பாரிவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? என கேள்வி … Continue reading சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

“14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

ஈஷா யோகா மையத்தில், குழந்தைகளும், பெண்களும் வலுக்கட்டாயமாக துறவியாக்கப்படுவதாக அந்த மையத்தின் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.  மகள்களை பிரிந்து வாடும் பேராசிரியர் காமராஜ் போன்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இவற்றை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “நான் ஈஷா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எங்கள் ஊரில் மொத்தம் ரூ. 15 லட்சம் மரம் நடுவதற்கென்று வசூலித்து கொடுத்தேன். ஆனால், அந்த அளவுக்கு மரங்களை நடவே இல்லை. ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஈஷா மையத்தின் நடவடிக்கைகள் … Continue reading “14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார். தீக்கதிரில் வந்த செய்தியின்படி சத்தியஜோதி தெரிவித்தவை: எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் … Continue reading யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

ஆபாசப் பட புகார் விசாரணையில் வினுப்ரியாவை அவதூறு செய்த காவலர் இடைநீக்கம்

சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த வினுப்பிரியா தற்கொலை வழக்கு விவகாரத்தில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுனித்சரண். புகார் கொடுத்த வினுப்ரியா பெற்றோரிடம் அவர் லஞ்சம் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் வினுப்ரியா (21). முகநூலில் அவரது படம் ஆபாசமாக வெளியிடப்பட்டது தொடர்பாக வினுப்ரியாவும், அவரது பெற்றோரும் மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்தனர். … Continue reading ஆபாசப் பட புகார் விசாரணையில் வினுப்ரியாவை அவதூறு செய்த காவலர் இடைநீக்கம்

வருமான வரி ஏய்ப்புப் புகார்: மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ. 85 கோடி பறிமுதல்

வருமானவரி ஏய்ப்புப் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருரில், மகாத்மா காந்தி மருத்துவக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், புதுச்சேரியில் அதே‌ குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரின்‌ வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 43 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்குழுமத்திற்கு சொந்தமான மேலும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை … Continue reading வருமான வரி ஏய்ப்புப் புகார்: மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ. 85 கோடி பறிமுதல்

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார். 300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனிடையே டைம்ஸ் ஆப் … Continue reading ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மவுலிவாக்கத்தில் விதிமீறி கட்டப்பட்ட மற்றொரு கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜுன் 28ம் தேதி சென்னை அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  இந்நிலையில் இந்தக் கட்டடத்தின் அருகே ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு கட்டடிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கட்டடமும் விதிமீறி கட்டப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

அம்மா மிக்ஸி; அம்மா ஃபேன்; அம்மா கிரைண்டர்: மேட் இன் சீனா!

தமிழக அரசு தமிழக மக்களுக்கு விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி … Continue reading அம்மா மிக்ஸி; அம்மா ஃபேன்; அம்மா கிரைண்டர்: மேட் இன் சீனா!

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பின்னர், சொத்துக்களை குவித்துள்ளார் என்றும் இதில் வந்த முறைகேடான பணத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், தி பயோனீர் ஆங்கில நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதுதொடர்பாக “தி பயோனியர்” என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான … Continue reading ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

  2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் … Continue reading உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

50 கோடி ரூபாய் நிலத்தை பிரபல நடிகைக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு அளித்த பாஜக அரசு:சதுர மீட்டர் வெறும் ரூ.35தான்!

பாலிவுட் நடிகையும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான ஹேமா மாலினி, தனது நடன அகாடமிக்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, ரூ. 70 ஆயிரத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. கிளாசிக்கல் நடன பள்ளி அமைக்க முடிவு செய்து, அதற்காக நிலம் கேட்டு, மகாராஷ்டிர அரசிடம் 20 வருடங்கள் முன்பு விண்ணப்பம் அளித்திருந்தார். இதையடுத்து, 1997ம் ஆண்டு அப்போதைய முதல்வர் … Continue reading 50 கோடி ரூபாய் நிலத்தை பிரபல நடிகைக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு அளித்த பாஜக அரசு:சதுர மீட்டர் வெறும் ரூ.35தான்!