வனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்!

சின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்;  இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவிரோதம் அல்லவா?