7 எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது எம் எல் ஏக்களாக இருக்கும் ஏழு பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாலபாரதி எம் எல் ஏ, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் கட்சி கொள்கை படி வாய்ப்பு வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல்-பீம்ராவ் பெரம்பூர் - சவுந்தராஜன் திருவிக நகர் - சுகந்தி போளூர்-செல்வம் விக்கிரவாண்டி-ஆர். ராமமூர்த்தி எடப்பாடி- பி. தங்கவேலு கோபிச்செட்டிப்பாளையம்-முனுசாமி கூடலூர்-தமிழ்மணி திருப்பூர் … Continue reading 7 எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

இந்திய ராணுவ படைத் தளங்களில் அமெரிக்க ராணுவம்; அமெரிக்காவிடம் சரணடையும் மோடி அரசு!

இந்திய கப்பல் படை மற்றும் விமானப்படைத் தளங்களை அமெரிக்க ராணுவமும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திட மோடி அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரும், இந்திய பாதுகாப்பு அமைச்சரும் நீர்வழி மற்றும்வான்வழிப் பரிவர்த்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தம்(LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது, அமெரிக்கா தன்னுடைய ராணுவக்கூட்டாளி நாடுகளான … Continue reading இந்திய ராணுவ படைத் தளங்களில் அமெரிக்க ராணுவம்; அமெரிக்காவிடம் சரணடையும் மோடி அரசு!

மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடு

தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி-தமாகா கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பங்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து கூட்டணி கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி: ஆர்.கே. நகர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், வேலூர், மயிலம், … Continue reading மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடு

‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ளது வாண்டாகோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர்வி.சிவசாமி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்தஇரண்டு முறை நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் வெற்றிபெற்று பணியாற்றி வருகிறார். வாண்டாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருவுடையாபட்டி தெற்கு வெள்ளாற்றின் கரையில் அரசு நிலத்தில் புளியமரங்கள் உள்ளன. இம்மரத்தின் பழங்களை ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஏலம் விடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், கலங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரமேஷ் என்பவர் மேற்படிபுளிய … Continue reading ‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

க. கனகராஜ் அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் … Continue reading #அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

“அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”

திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். “இரண்டு திராவிடக் கட்சிகளுடைய ஆட்சியில் ஏழையெளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 1967ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 1977ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1989ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 2006ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும் … Continue reading “அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”

இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!

புதுச்சேரி-கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், தேவ.பொழிலன், அ.சந்திரசேகரன், லெனின் முன்னிலை வகித்தனர். மக்கள் நலக்கூட்டணி இணையதளத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோ துவக்கி வைத்தார். கூட்டணி இலச்சினை (லோகோ) து.ராஜா எம்.பி. வெளியிட்டார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட முத்தரசன், ராமகிருஷ்ணன். கே.நாராயணா பெற்றுக் கொண்டனர். முன்னதாக … Continue reading இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

மாநிலங்களவை நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒளிபரப்பி வரும் ராஜ்யசபா டிவியை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா டி.வி.யுடன் ராஜ்யசபா டி.வி.யை இணைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் ராஜ்யசபா டி.வி.யை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது என தீக்கதிர் நாளிதழ் சொல்கிறது. மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி இருந்தபோது, லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டன. இவை இரண்டும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. லோக்சபா டி.வி. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுத் துறைகள் … Continue reading ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் அ. குமரேசனுக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி... மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணி அதிமுக-வின் ‘பி’ டீம் என்று கூட சொல்கிறார்கள். திமுக-வுக்கு இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன? அதிமுக-வை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றால் திமுக பக்கம்தான் வரவேண்டும் என்கிறார்களே?அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம் தங்களுக்கு ஆதாயமாக மாறும் … Continue reading மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

கரூர் கிராமத்தில் தொடரும் தீண்டாமை: பள்ளிகளில், டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை; புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தலித் இளைஞருக்கு அடி!

புத்தாண்டு கொண்டாடிய தலித் இளைஞர் மீது சாதிஆதிக்கச் சக்தியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியமாக காவல்துறையினர் உள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டம், ராயனூர்அடுத்துள்ள கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கரூர் நகரக்குழு உறுப்பினர் ஆவார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகன் கேசவன். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோடங்கிபட்டி கிளை துணைத் தலைவராக உள்ளார். புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக … Continue reading கரூர் கிராமத்தில் தொடரும் தீண்டாமை: பள்ளிகளில், டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை; புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தலித் இளைஞருக்கு அடி!

விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கார்ல் மாக்ஸ் தொண்ணூறுகளில் வடமாவட்ட கிராமங்களில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தவர்கள் கவனித்திருக்கலாம். திமுக, அதிமுக கொடிக்கம்பங்களுக்குப் பிறகு விஜயகாந்தின் ரசிகர்மன்ற போர்டுகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஊடகங்கள் எல்லாம், ரஜினியின் புகழை ஊதிப்பெருக்கிக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளில், யதார்த்தத்தில் கிராமங்களில் புகுந்திருந்தது விஜயகாந்த் தான். தென்மாவட்டங்களில் அவர் ஒரு மதுரைக்காரர் என்ற பிம்பம் சாதாரணமாகவே அவர்மீதான ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் கவனிக்கத்தக்கவை என்றால் ஒன்று, பாமக திராவிடக் கட்சிகளுடன் … Continue reading விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கழிவுநீரை குடியிருப்புகளுக்குள் திருப்பிவிடும் வேலம்மாள் கல்வி நிறுவனம்!

பொன்னேரி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேலாம்மாள் கல்வி நிறுவனத்தின் கழிவு நீர் முழுவதும் இஸ்லாமிய நகரருக்குள் விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பொன்னேரியை அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லீம் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களின் முக்கிய தொழில் பீடி சுற்றுதல்,அப்பளம் கம்பனியில் பணியாற்றுவது போன்ற தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு மிகவும் குறைந்த வருவாய் காரணமாக வறுமையில் வாடும் முஸ்லீம்கள் தற்போது … Continue reading கழிவுநீரை குடியிருப்புகளுக்குள் திருப்பிவிடும் வேலம்மாள் கல்வி நிறுவனம்!

“சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?”

“சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் 18.12.2015 பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், “தற்போதைய மழை நீர் வெள்ள பிரச்சனைக்கு ஒரு சிலர் திமுக ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே?, குறிப்பாக “நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பி அதற்கு “அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், … Continue reading “சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?”

“தவறை மறைக்க தலைமை செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார்”

“சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் உரிய முறையில் உரிய காலத்தில் திறந்து விடப்படாததும், திடீரென மிக அதிகமான நீர் திறந்து விடப்பட்டதும்தான் காரணம் என்று பல்வேறு பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பியிருந்தன. இதற்கு பதில் அளிப்பதற்காக 13 பக்க அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைமை செயலாளரின் வெள்ள-விளக்க அறிக்கை … Continue reading “தவறை மறைக்க தலைமை செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார்”

சிம்பு-அனிருத்தின் ஆபாச பாடலை தடை செய்ய வேண்டும்: பெண்கள் அமைப்பு போலீஸில் புகார்

அனிருத்தின் இசையமைப்பில் சிம்பு எழுதிய பீப் பாடல் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியானது.  இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான ஜனநாயக மாதர் சங்கம் இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் அமுதா, போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் பாடல் பெண்களையும் ஆண்களையும் கொச்சையாக சித்தரிப்பதாக அமுதா கூறினார்.

‘ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை, வெள்ளம் ஓரளவு ஓய்ந்து, தட்டுத் தடுமாறி, இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழல் இது. 300க்கும் மேற்பட்டவர்கள் மரணம், உடமைகள் நாசம், பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடிழப்பு, வருமானம் … Continue reading ‘ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’