”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”

காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சார்ந்த ஆதிக்கக் சமூகத்தைச் சேர்ந்த சுமன் என்பவரின் குடும்பத்தினர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததை தடுக்கக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சாதியினர். காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கடந்த 4 ஆண்டுகாலமாக அலட்சியம் செய்து … Continue reading ”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”

”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.  ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, … Continue reading ”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர், தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் ஆகியோர் கூட்டறிக்கையை விடுத்துள்ளனர். மாநில பட்டியலில் இருக்கும் இப்பிரச்னையில் மத்திய … Continue reading மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.முத்தரசன் கைது

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து இன்று காலை வட கோவை ரயில் நிலையத்தில் மங்களா புரம் துரிதரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் மற்றும் 28 பெண்கள் உள்பட 238 பேர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்  “கேரள அரசு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய … Continue reading கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.முத்தரசன் கைது

மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)-லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய் அன்று சந்தித்து, … Continue reading மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்: சிபிஎம் கண்டனம்

காவிரி மேலாண்மைவாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை … Continue reading கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்: சிபிஎம் கண்டனம்

கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமுஎகச மற்றும் சமூக ஆர்வலர்கள், கீழடி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர்களது கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் … Continue reading கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலையானதை அடுத்த நடத்தப்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து … Continue reading கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

“தமிழகத்திலும் உனா எழுச்சியை முன்னெடுக்க வேண்டும்”: டி. கே. ரங்கராஜன்

தீக்கதிர் ஒவ்வொரு தலித்துக்கும் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற குஜராத் பேரணியின் முழக்கம் அற்புதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுஉறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார். உனா நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தையொட்டி, தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆதரவு இயக்கங்கள் நடைபெற்றன. மதுரை குஜராத் தலித் எழுச்சி கருத்தரங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மதுரையில் விக்டோரியா எட்வர்டு ஹாலில் திங்களன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னணியின் மாவட்டத் … Continue reading “தமிழகத்திலும் உனா எழுச்சியை முன்னெடுக்க வேண்டும்”: டி. கே. ரங்கராஜன்

தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்ப்பதில் பாஜக ஆளும் மாநில அரசுகள் முதலிடம்!

தலித்துகளை தாக்குவதற்குப் பதிலாக என்னைத் தாக்குங்கள் என்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்த அதிரடி வாசகங்களை தனது கட்சி ஆளும், மாநில முதலமைச்சர்களுக்கும் அவர் சொல்லியிருக்கலாம். குறிப்பாக  பிரதமர் ஆவதற்கு முன்பு வரை தான் முதலமைச்சராக இருந்த தன் சொந்த மாநிலத்தில் தலித்துகள் மீதான வன்முறையை கட்டவிழ்த்த இந்துத்துவ கும்பலுக்கு எடுத்துச்சொல்லியிருக்கலாம். இந்திய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள 2015-ஆம் ஆண்டின் அறிக்கையை ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த புள்ளிவிவரப்படத்தைப் பாருங்கள். … Continue reading தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்ப்பதில் பாஜக ஆளும் மாநில அரசுகள் முதலிடம்!

”இந்தியாவும் அமெரிக்கவும் உலகக் கூட்டாளிகள்” அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு சார்பில்அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள சமயத்தில் “அமெரிக்காவும் இந்தியாவும்: 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் - 1” என்னும் தலைப்பிட்டு 50 பத்திகளுடன் இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் உலகளாவிய நீண்டகால நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு இந் தியாவை, ஓர் இளைய பங்காளியாக மாற்றி இருக்கிறது. ஒப்பந்தத்தில் அநேகமாக இரு நாடுகளுக்கும் இடையேயான … Continue reading ”இந்தியாவும் அமெரிக்கவும் உலகக் கூட்டாளிகள்” அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

வெ.ஜீவக்குமார் ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் காலத்தில் வந்தியத் தேவன் ஓட்டிய குதிரையின் குளம்படி தடங்கள் ஆற்றங்கரைகளில் இப்போதும் ஒளிந்து கிடக்கலாம்.எனினும் திருவையாறு சட்டமன்ற பரப்பு காவிரிச் சமவெளி பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. கட்டளை மேட்டு வாய்க்கால், … Continue reading தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 … Continue reading குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

கேரளத்தில் மட்டுமே இது சாத்தியம்: ஊடக அதிபரை வீழ்த்திய பால்காரர்!

கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பேட்டா தொகுதியில் பெரும் முதலாளியும் ஊடக அதிபருமான தற்போதைய எம்எல்ஏ ஸ்ரேயாம்ஸ் குமாரை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறார் சி.கே.சசீந்திரன் என்ற பால்காரர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரான சசியேட்டன், தொழில் முறையில் ஒரு பால்காரர்.  மூன்று முறை தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்தபோதும் அவர் எப்போதும் பால்காரர்தான். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவரும் சசியேட்டன், எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரேயாம்ஸ் குமார் தொடர்ந்து இரண்டு முறை எம் எல் ஏவாக இருந்தவர். மாத்ருபூமி பத்திரிகையின் உரிமையாளர்களுக்கு … Continue reading கேரளத்தில் மட்டுமே இது சாத்தியம்: ஊடக அதிபரை வீழ்த்திய பால்காரர்!

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த … Continue reading தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்

சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் CPIM மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோல் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான உ. வாசுகியும் க. பீம்ராவும் வாக்களித்தனர். படங்கள்: கவாஸ்கர்.

சுதந்திரப் போராட்ட வீரர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா வாக்களித்தார்!

சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா வாக்களித்தார்.

நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

நிதி நெருக்கடியையும் வலுவான எதிராளிகளையும் பொருட்படுத்தாமல், சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி மற்றும் எடப்பாடி தொகுதிகளில் துணிவோடு களம் காண்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P. தங்கவேல், எடப்பாடி தொகுதியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத் துறையின் அமைச்சர் ‘எடப்பாடி’ பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் A. மோகன், திமுகவின் முன்னாள் அமைச்சர் ‘வீரபாண்டி’ S. ஆறுமுகம் அவர்களின் மகன் ‘வீரபாண்டி’ … Continue reading நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

என்னைத் தேர்ந்தெடுத்தால்! பி.கற்பகவல்லி அம்பாசமுத்திரம் வேட்பாளர்!

மக்கள் நலக் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் பி.கற்பகவல்லி சாதாரண ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பங்கேற்று வருகிறார். சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு அனைத்து பகுதி மக்களின் நலன்களுக்காவும் 24 மணிநேரமும் பணியாற்றி வருபவர். 15 முறைக்கும் அதிகமாக கைது செய்யப்பட்ட பெண் உரிமை போராளி. நேர்மையான மக்கள் நல தொண்டர். தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி மக்களுக்காக என்னவெல்லாம் செய்வேன் என்பதை … Continue reading என்னைத் தேர்ந்தெடுத்தால்! பி.கற்பகவல்லி அம்பாசமுத்திரம் வேட்பாளர்!

வேட்பாளர் அறிமுகம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட போராடியவர் கே. பாலகிருஷ்ணன்

சிதம்பரம் தொகுதில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணிசார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மீண்டும் போட் டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் கோரி பிரச்சாரம் மேற்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி பாலகிருஷ்ணன். இந்த தேர்தலிலும் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது” என்றார்.“நாம் அமைத்திருக்கும் கூட்டணி வரலாற்று முயற்சி. இதனால்ஆத்திரம் அடைந்துள்ள திமுக வும், அதிமுகவும் நம்மைப் பல வடிவங்களில் சேதப்படுத்த நினைக் கிறார்கள். இந்த மாற்று அணி அவர்களுக்கு சவாலாக … Continue reading வேட்பாளர் அறிமுகம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட போராடியவர் கே. பாலகிருஷ்ணன்

“நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்

வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் உங்களோடு இருப்போம். மனத் தைரியத்தோடு இருங்கள் என்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட உடுமலைப்பேட்டை கௌசல்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவக் கொலை … Continue reading “நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்

தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத். தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், http://www.youtube.com/watch?v=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் சி.பி.எம்-ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகவல்லி. பணமும் அதிகாரமுமே அரசியலை தீர்மானிக்கும் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் தி.மு.க அ.தி.மு.க வின் அதிகார ஆதிக்க சக்திகளை எதிர்த்து களமிறங்கியிருக்கிறார் கற்பகவல்லி. போராட்டங்களும், எளிமையுமே கம்யூனிஸ்ட்களின் அடையாளம், அதுவே இவரின் மிகப்பெரிய பலம். மொத்த குடும்பமும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் இயல்பாகவே பொதுவுடைமை சிந்தனையுடன் வளர்ந்தவர். பள்ளி … Continue reading வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

வேட்பாளர் அறிமுகம்: தொகுதி பக்கம் தலைகாட்டாத விஜயதரணியை எதிர்த்து களமிறங்கும் ஆர். செல்லசுவாமி!

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமாகா அணிசார்பில் சிபிஎம் விளவங்கோடு தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி போட்டியிடுகிறார். ஆர்.செல்லசுவாமி 10 ஆண்டுகள் ஏழுதேசம் பேரூராட்சி தலைவராக பணியாற்றியவர். 10 ஆண்டுகள் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட்டு வருபவர். 2011 முதல் குமரியின் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும், மாவட்ட திட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தனது 30 ஆண்டு கால பொதுவாழ்வில் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்.  தமிழ்நாடு விவசாயிகள் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: தொகுதி பக்கம் தலைகாட்டாத விஜயதரணியை எதிர்த்து களமிறங்கும் ஆர். செல்லசுவாமி!

“இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூருக்கு வருகை தந்தார். மிக எளிமையாக வந்திறங்கிய அவரை கூட்டணிக்கட்சியினர் வரவேற்றனர். தஞ்சாவூரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கிய மாணிக் சர்க்கார், “மாற்று அணியை ஆதரியுங்கள். திமுக, அதிமுக தலைமைகள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் எதையும் செய்யவதில்லை. எங்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.  குறிப்பாக இளைஞர்களிடம் இதைக் கேட்கிறேன்” என்று பேசியிருக்கிறார். வீடியோ இணைப்பு கீழே... … Continue reading “இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

திமுக - அதிமுக ஆட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தாது மணலில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மெகா கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும்,இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது; ஆனால் அதற்கு மாறாக திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை ஏமாற்றவே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள … Continue reading தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

கருத்துக் கணிப்புகள்; ஆசைகள்; ஆரூடங்கள்!

ஜி. ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் - சிபிஐ(எம்) தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில்  திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் பூரண மதுவிலக்கு விவசாயக் கடன் , கல்விக் கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாற்றம் வேண்டும் என்ற ஆவல் … Continue reading கருத்துக் கணிப்புகள்; ஆசைகள்; ஆரூடங்கள்!

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்

சட்டக் கல்லூரி மாணவி ஜிஸா கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்துவருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கோரியும் கேரளாவில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிஸாவின் தாயைக் காண எதிர்க்கட்சித் தலைவரும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் சென்றிருந்தார். அப்போது, வி. எஸ். அச்சுதானந்தனைப் பார்த்து, “என் மகள் எனக்கு வேண்டும். இந்த நாட்டில் நீதி … Continue reading “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்

இனவாத கருத்துள்ள இளைஞர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தால் என்ன ஆவார்?

காசி. சின்னையா இன்றைய தி இந்து நாளிதழ் (4/5/2016) நடுப்பக்கத்தில், "தார்மிகம் எனும் அறம்" என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.   அதில், தோழர்கள் வி.பி.சிந்தன், டபிள்யூ.ஆர்.வரதராஜன் மற்றும் ஒரு இளைஞர் பற்றி குறிப்பிட்டுள்ளார் (படம்). அந்த இளைஞர் என்னதான் ஆனார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதற்கு எழுதப்பட்ட குறிப்புகள் ஏதும் இல்லை. சமஸ் அந்த உரையாடலை உடன் இருந்து கேட்கவும் "இல்லை". செவி வழியாக கேள்விப்பட்ட உண்மையைத்தான் எழுதியுள்ளார். சமஷுக்கு சொன்னவர்கள் அவர் யார் என்பதை சொல்லித்தான் … Continue reading இனவாத கருத்துள்ள இளைஞர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தால் என்ன ஆவார்?

வேட்பாளர் அறிமுகம்: மணல் கொள்ளையைத் தடுக்க போராடி சிறை சென்ற லால்குடி வேட்பாளர் ஜெயசீலன்!

கடந்த அரை நூற்றாண்டு காலஆட்சியில், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக- திமுக கட்சிகள் எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி தொகுதி வேட்பாளர் எம்.ஜெயசீலன் குற்றம் சாட்டினார்.தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி தொண்டர்களுடன், வேட்பாளர் எம்.ஜெயசீலன் செவ்வாயன்றும் தொடர்ந்து புள்ளம்பாடி ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக, கல்லக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம், இடங்கிமங்கலம், இ.வெள்ளனூர், நஞ்சை சங்கேந்தி,ஐயனார்புரம், புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், நல்லூர், தொரணிபாளையம் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: மணல் கொள்ளையைத் தடுக்க போராடி சிறை சென்ற லால்குடி வேட்பாளர் ஜெயசீலன்!

திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திருவாரூரில் தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டியது குறித்தும் மதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு இடங்களில் பேசிவிட்டு, அடுத்து சீர்காழி தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் உமாநாத், மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் அருள்செல்வன், பூம்புகார் த.மா.கா. வேட்பாளர் சங்கர், நன்னிலம் சிபிஎம் வேட்பாளர் … Continue reading திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

கிரானைட் ஊழல் மிகப்பெரிய கூட்டுக்கொள்ளை : சகாயம் குழு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் (23.4.2016) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை: கிரானைட் கனிம வளச் சுரண்டல், தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகளிளேயே மிகப்பெரியதாகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரிகள், சட்டவிரோத சுரண்டல் குறித்த விசாரித்த சிறப்பு விசாரணை அதிகாரி திரு. உ.சகாயம் அறிக்கை நீதிமன்றத்திடம் உள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் - மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. மிகப்பெரும் … Continue reading கிரானைட் ஊழல் மிகப்பெரிய கூட்டுக்கொள்ளை : சகாயம் குழு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

தனது கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பணியில் இறங்கிய முன்னாள் வேட்பாளர்: இது நடப்பது கம்யூனிஸ்ட் கட்சியில்!

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர் மாற்றக் கோரியும், தன்னை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பதால் கட்சிப் பணி ஆற்றுவதில்லை என்றும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் உள்கட்சி பூசல் நடந்துவரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் வேறுபட்ட காட்சியைப் பார்க்க முடிகிறது. விளவங்கோடு தொகுதியில் 2011 -ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் லீமாரோஸ். திங்கள் கிழமை காலை விளவங்கோடு தொகுதியில் ஆர்.செல்லசுவாமி வேட்பாளராக கட்சி அறிவிக்கப்பவுடன் லீமாரோஸ் அவருக்காக சுவர் எழுத்துப் பணியை மேற்கொள்ளும் படம் … Continue reading தனது கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பணியில் இறங்கிய முன்னாள் வேட்பாளர்: இது நடப்பது கம்யூனிஸ்ட் கட்சியில்!