கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரளத்தில் ஆட்சியமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேரளத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு ஆகும். கேரள அரசியல் வரலாற்றில் அனைத்து அரசாங்கங்களிலுமே ஒரே ஒருபெண் அமைச்சர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையே இருந்தது. இதை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது பினராயி விஜயன் அரசு.முதல்முறையாக இரண்டு பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இடதுஜனநாயக முன்னணி அரசில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு சீரிய முயற்சி எடுக்கப்பட்டு இரண்டு பெண் தலைவர்கள் … Continue reading கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

உருது படைப்புகள் தேசத்துக்கும் அரசுக்கும் எதிரானவை அல்ல என சர்டிபிகேட் வாங்க வேண்டும்:ஸ்மிருதி அமைச்சரவை உத்தரவு

இரா.தெ. முத்து  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரத்தில் முன்னுக்கு கொண்டு வரப்பட்ட தேசவிரோதிகள் பழியும் வழக்கும் இருக்கும் பொழுதே, அதே ஸ்மிருதி இராணி அமைச்சகம் இன்னொரு தாக்குதலை கருத்துரிமை படைப்புரிமை மீது தொடுத்திருக்கிறது. உருது மொழி படைப்பாளர்களை முன் வைத்து தாக்குதல் தொடுத்துள்ளது. உருதுமொழியில் வெளி வந்த படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு The National Council for Promotion of Urdu Language (NCPUL) என்ற அரசு சார்பான அமைப்பு இருக்கிறது. இது அனுப்பி … Continue reading உருது படைப்புகள் தேசத்துக்கும் அரசுக்கும் எதிரானவை அல்ல என சர்டிபிகேட் வாங்க வேண்டும்:ஸ்மிருதி அமைச்சரவை உத்தரவு

“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன் ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, … Continue reading “பாகிஸ்தானின் ஏஜென்ட்”!