உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

உத்திரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 322 இடங்களைப் பிடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்? எழுத்தாளர் அன்புசெல்வம் தரும் சில காரணங்கள்... உ.பி -யில் பாஜக வெற்றி பெற்றது புதிய விசயமல்ல. ஏற்கனவே கல்யாண்சிங், ராம் பிரகாஷ் தலைமையில் ஆட்சி இருந்திருக்கிறது. மத வெறுப்பு அல்லது மதப் புறக்கணிப்பு என்பதை விமர்சித்தவர்கள் ஓபிசி. "சாதித் தொகுப்பு - Caste Consolidation" மேற்கொண்ட வியூகங்களை கண்டு … Continue reading உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

மாயாவதியை அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

அண்மையில் குஜராத் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்து எடுத்துச் சென்ற நான்கு தலித் இளைஞர்களை இந்துத்துவ கும்பல் கட்டிவைத்து அடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலித்துகள் போராட்டமாக அதை முன்னெடுத்தார்கள். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜகவை தலித் விரோத கட்சி என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக மாயாவதியை விமர்சித்த உத்திரபிரதேச பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், கீழ்தரமான ஒப்பிடலை செய்திருந்தார். … Continue reading மாயாவதியை அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

“மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க.  தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது!”

மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை  அம்மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தனிப்பட்ட முறையில் தரம்  தாழ்ந்து விமர்சித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. இதற்காக பாரதிய ஜனதா தலைமை  வருத்தம் தெரிவித்ததுடன், தயாசங்கரை கட்சியிலிருந்தும் நீக்கியிருப்பது சரியான நடவடிக்கையாகும். அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை … Continue reading “மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க.  தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது!”

நாடாளுமன்ற பேச்சுக்கு கைமேல் பலன்: உ.பியின் முதல்வர் வேட்பாளராகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரையை பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடுகிறார்கள். இப்படி கொண்டாடப்பட வேண்டும் என்றுதான் ஸ்மிருதி இரானி விரும்பினார். காரணம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாரை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்கிற தயக்கத்துக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இரானி. கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய, அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி. பாஜகவுக்கு வெற்றியை அள்ளிக்கொடுத்தது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களிலும் … Continue reading நாடாளுமன்ற பேச்சுக்கு கைமேல் பலன்: உ.பியின் முதல்வர் வேட்பாளராகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!