யார் நீ ரஜினி?

சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி.

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் … Continue reading பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

மாதவராஜ் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் … Continue reading புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்

மாதவராஜ் நேற்று விருதுநகரில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த , ‘கறுப்புப்பண மீட்பு – மக்களோடு கலந்துரையாடல் நிகழ்வு, மிகச் சிறு அசைவே என்றாலும், முக்கியமான நிகழ்வு என்றே கருதுகிறேன். முத்துகிருஷ்ணன் முயற்சியால் உருவாக்கப்பட்ட, கறுப்புப்பணம் குறித்த படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. புதுகை பூபாளம் கலைக்குழு- பிரகதீஸ்வரன் மோடியின் செல்லாத அறிவிப்பையும், கள்ளப்பணத்தையும், மக்களின் மொழியில் கதாகாலேட்சேபம் பாணியில், நையாண்டியாக சொன்னது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு நின்று, நாட்டின் முக்கியப் பிரச்சினை குறித்து … Continue reading ‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்

“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”

மாதவராஜ் எழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது. இந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு எரிச்சல் அடைந்ததாகவும், இந்தியாவின் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் பெண் வங்கி ஊழியர்கள் இப்படித்தான் வேலை பார்ப்பதாகவும், ஜெயமோகன் எழுதிய காடு நாவலில் வரும் சுறுசுறுப்பற்ற தேவாங்கு போல இருப்பதாகவும், தேசீய வங்கிகளின் … Continue reading “மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”

நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

மாதவராஜ் நடிகர் ராமராஜனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, இந்த நாட்டின் பிரதமரின் போலிக் கல்விச் சான்றிதழ் குறித்த விவாதங்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாய் ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, … Continue reading நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

மே தினம் கொண்டாடுவதற்கு அல்ல, போராடுவதற்கு!

மாதவராஜ் 1886ஆம் ஆண்டு மே மாதம் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட்டில் சிந்திய தொழிலாளர்களின் இரத்தம் இன்று உலகமெங்கும் செந்நிறக் கொடிகளாக பறந்து கொண்டிருக்கின்றன. இதே நாளில் அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும், லண்டனிலும், மாஸ்கோவிலும், பாரிஸிலும், பெர்லினிலும், இத்தாலியிலும், இராவல்பிண்டியிலும், என உலகத்தின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்த செந்நிறக் கொடி ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சிலிர்ப்பாய் இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் அந்த கொடியின் கீழ் நின்று கொண்டிருகிறார்கள் என்னும் பிரக்ஞை மாபெரும் மனித சமுத்திரத்தில் நாமும் ஒரு … Continue reading மே தினம் கொண்டாடுவதற்கு அல்ல, போராடுவதற்கு!