பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் … Continue reading பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில் புனிதமாக கருதப்படும் … Continue reading புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடுமுழுவதும் பசு, மாடு, காளை, எருது, கன்றுகள் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடைவிதித்தும், விவசாயப் பணிகளுக்கும், வளர்ப்புக்கும் கால்நடைகளை விற்பனை செய்ய கடுமையான நிபந்தனை விதித்தும் மோடியின் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் … Continue reading கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடும் மத்திய அரசின் ஆணையை நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்னும் மத்திய பி.ஜே.பி. அரசின் மனித உரிமை விரோத, அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை எதிர்த்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் … Continue reading மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்