கொரோனா பெருந்தொற்றைவிட அபாயகரமானது தனியார்மயமாக்கல் | மரு. அரவிந்தன் சிவக்குமார்

மரு. அரவிந்தன் சிவக்குமார்பெருந்தொற்று நெருக்கடி மிகுந்த சூழல் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அதற்கு முன்னரே பொது சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பல்வேறு விசயங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.கார்பொரெட் சமூகப் பங்களிப்பின் மூலம் My hospital My pride என்ற திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டம் ஜூலை 2019ல் தொடங்கப்பட்டுள்ளதை நாம் கவனமாய் பார்க்கவேண்டியுள்ளது.மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் துறைவாரியாக இருக்கும் செலவுகளுக்கான நிதித்தேவையை சமாளிக்க முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் … Continue reading கொரோனா பெருந்தொற்றைவிட அபாயகரமானது தனியார்மயமாக்கல் | மரு. அரவிந்தன் சிவக்குமார்

பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு நெருங்குகையில், சென்னை வட்டாரத்தில் திடீர் மழைச்சூழல் தொற்றிக்கொண்டது. ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்வு நடந்தது. இதில் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் பேச்சு, தீர்மானிக்கப்பட்டிருந்த பொருளை மையப்படுத்தியதாக அமைந்தது.   அவரின் … Continue reading பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு நோயாளி. அவரிடைய கழுத்துப்பகுதி அறுபட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்து, அழைத்து வரப்படுகிறார். அவருடன் போலீஸ்கூட்டமும் , ஊடகவுயலாளரும் ஒரு முக்கிய கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் என்று போலீஸ் கூறுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரை பேசவைத்து வாக்கு மூலம் வாங்க வேண்டும். எப்போது வாக்குமூலம் கிடைக்கும் என்று போலீசை விட , டி.ஆர்.பி. ரேடிங்கை ஏற்ற விழையும் சமூக அக்கறையுள்ள ஊடகவிலாளர்கள்... இந்நிலையில் சிகிச்சையளிக்கும் … Continue reading நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்