பைக் திருடியதற்காக தலித் இளைஞர்களை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலம்; ராஜஸ்தானில் மனுஸ்மிருதி படி தண்டனை

இந்தியாவில் சட்டங்களின் ஆட்சி நடக்கிறதா? மனுஸ்மிருதி ஆட்சி நடக்கிறதா என்கிற குழப்பத்துக்கு இங்கே நடப்பது மனுஸ்மிருதி ஆட்சிதான் என்று நிரூபித்திருக்கிறது ராஜஸ்தானில் நடந்த இந்த சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கா அருகே உள்ள லஷ்மிபுரா என்ற ஊரைச் சேர்ந்த மூன்று தலித் இளைஞர்கள், (15 வயதிலிருந்து 18 வயது வரையான) பக்கத்து ஊராரின் பைக்கை சில மாதங்களுக்கு முன் திருடியதாகவும் அதை இப்போது ஓட்டி வந்தபோது அவர்களைப் பிடித்த பைக்கின் சொந்தக் காரர்கள் அதாவது ஒடுக்கும் சாதியைச் … Continue reading பைக் திருடியதற்காக தலித் இளைஞர்களை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலம்; ராஜஸ்தானில் மனுஸ்மிருதி படி தண்டனை

பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?

ஆண்டுதோறும் சினிமாவுக்கென வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேசிய விருது பெறும் படங்கள் வணிக ரீதியிலான வெற்றி என்பதைக் கடந்த சினிமாவின் கலை அம்சத்தைத் தொடும் படங்களுக்கென வழங்கப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு, பாகுபலி என்ற பன்மொழி வெற்றி படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழ்ஸ்டுடியோ அருண் இளையராஜா, வெற்றிமாறன், சமுத்திரக்கனி தேசிய விருதை புறக்கணிக்க வேண்டும்... ஒரு அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தும் படத்தை … Continue reading பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?

“நான் மனுஸ்மிருதியை எரிப்பேன்”: ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் அறிவிப்பு

“சாதிய ரீதியாக மக்களைப் பிரிக்கும் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாக சித்தரிக்கும் மனுஸ்மிருதியை எரிக்கப் போகிறேன். பெண்கள் தினத்தில் இதை செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார் ஏபிவிபி அமைப்பின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாடின் கரோயா.

ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் இந்துத்வ மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது காவிக் கொடியை வைத்து விளையாடியதும், சங் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவைப் படித்ததும் நினைவில் இருக்கிறது. ... என் தாத்தா 1992இல் … Continue reading ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

மகிழ்நன் பா.ம இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் என சிலர் எழுதி திரிகிறார்கள். அவர்களின் பொருட்டு அம்பேட்கரை மீண்டும் புரட்டிப் பார்ப்போம்... இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார் அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது … Continue reading அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!