உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

மனுஷ்யபுத்திரன் அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை 'என்கவுண்டர்' செய்கிறது. அல்லது ' கேரக்டர் அசாசினேஷன் ' செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு. ஆனால் … Continue reading உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

சென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்!: மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் சென்னையில் கவிக்கோ மன்றம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியின் இன்னொரு அத்தியாயம். ஏற்கனவே பொதுகூட்டங்கள் நடத்துவதற்கு கடும் கெடுபிடிகள் இருக்கின்றன. இப்போது அரங்க கூட்டங்கள்மீதும் கைவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் கூட்டம் நடத்துவதற்காக இருந்த பல இடங்கள் படிப்படியாக குறைந்துவிட்டன. கவிக்கோ மன்றம் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் சிறு அமைப்புகளும் கூட்டம் நடத்துவதற்கான சகல வசதிகளும் கொண்ட மிகவும் நேர்த்தியான அரங்கம். ஒலி-ஒளி அமைப்பில் கவிக்கோ மன்றம் அளவுக்கு சிறப்பான அரங்கம் … Continue reading சென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்!: மனுஷ்ய புத்திரன்

பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அச்சம் அவர்களை நிதானமிழக்க … Continue reading பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

கல்லாக்கட்டி அரசு உதயசந்திரனை குறிவைக்கிறதா?: மனுஷ்ய புத்திரன்

பள்ளி கல்வித்துறை செயலாளராக அவர் பொறுப்பேற்ற கடந்தசில மாதங்களில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் அதிகாரபோட்டியிலும் முற்றிலுமாக உருக்குலைந்து நிற்கும் அதிமுக அரசிற்கு ஒரே ஆசுவாசமாக இருந்தது.

கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில், “கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவார் என்பது உலகறிந்த உண்மை. சந்திரலேகா மேல் ஆசிட் வீசப்பட்டது, நக்கீரன் கோபால் கைது என அரசியல் எதிரிகள் மேல் நடத்திய தாக்குதல் எத்தனை..எத்தனை...போட்ட அவதூறு வழக்குககளுக்கு … Continue reading கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

மனுஷ்யபுத்திரன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன? வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான … Continue reading வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

காவிரி போராட்டமும்! வாணி ஸ்ரீக்களும்…!

இசை கருக்கல் என்னும் கவிஞர் 2013-ம் ஆண்டு / வருக என் வாணிஸ்ரீ/ என்னும் கவிதை எழுதுகிறார். அதை - சில நாட்களுக்கு முன் நடந்த இசையின் கவிதைகள் பற்றிய விமர்சன கூட்டத்தில் சிலாகிக்கிறார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். அதை அடுத்துதான் தொடங்குகிறது முகநூளில் "வாணி ஸ்ரீக்கள்" பற்றிய பதிவுகள். தமிழ் இலக்கியவாதிகளின் சமீபத்திய டாப் trending hashtag என்பது வாணிஸ்ரீ மட்டுமே. மனுஷ்ய புத்திரன்: போட்டிக்கவிதைகளைப் படித்து தூக்கத்தில் கெட்ட கனா கண்டு எழுந்து உட்கார்ந்துகொண்டு … Continue reading காவிரி போராட்டமும்! வாணி ஸ்ரீக்களும்…!

ஜெயமோகனை போலவே எனக்கும் இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது: மனுஷ்யபுத்திரன்

கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு ரமோன் மகஸேசே விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்து எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். தனது முகநூல் எழுதியுள்ள பதிவில், “ஜெயமோகனை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் நிதானமிழக்கும்போது எந்த அளவிற்கு செல்வார் என்பதற்கு திரும்பத் திரும்ப காணக்கிடைக்கும் உதாரணமாக அவர் இருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது அளிக்கப்பட்டதை அவர் கடுமையாக தாக்குகிறார். ’’சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட … Continue reading ஜெயமோகனை போலவே எனக்கும் இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது: மனுஷ்யபுத்திரன்

விகடன் தொலைத்த விகடன்; குமுதம் லைஃப் ஒரு புரட்சியா? முகநூலில் ஓர் விவாதம்!

வார இதழான குமுதம் கடந்த இரண்டு வாரங்களாக குமுதம் லைஃப் என்ற இணைப்பு புத்தகத்தை குமுதத்துடன் சேர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஊடகவியலாளர் கே. என். சிவராமன் தனது முகநூலில் '‪#‎குமுதம்லைஃப்‬ ‪#‎kumudamlife‬ (விகடன் தொலைத்த விகடன்)' என்ற பெயரில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில், 1980கள் நினைவுக்கு வருகிறது. தமிழ் வார இதழ்களின் வரலாற்றிலேயே அதிகபட்ச சர்க்குலேஷனை அப்போதுதான் ‘குமுதம்‘ தொட்டது. எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு., புனிதன் என நால்வர் அணி ரவுண்டு கட்டி அடித்து உச்சம் … Continue reading விகடன் தொலைத்த விகடன்; குமுதம் லைஃப் ஒரு புரட்சியா? முகநூலில் ஓர் விவாதம்!

போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

மனுஷ்யபுத்திரன் சுவாதி கொலையில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுக்கிறார். வதந்திகளை வெளிப்படையாக பரப்புகிற பிரபல மனிதர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுவாதியின் கொலைக்கான காரணங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படக்கூடாது என்று சிலர் எரிச்சலடைகின்றனர். அந்தரங்க காரணங்களுக்கான கொலைகளை காவல்துறை முறையாக விசாரிக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் நம்பகத்தன்மையற்ற முரண்பாடான தகவல்களை, கதைகளை ஊடகங்களில் அவிழ்த்துவிடும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். சுவாதியின் கொலை தொடர்பாக தமிழ்ச் செல்வன் என்பவர் தொலைக்காட்சி காமிராக்கள் … Continue reading போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

புத்தக விற்பனை இருண்டு போயுள்ளது: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் சென்னை புத்தகக் கணகாட்சியில் பெரும்பாலான புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களின முகங்கள் இருண்டு போய் உள்ளன. நேற்று பல கடைக்காரர்கள சந்தித்துப் பேசினேன். கடந்த ஏழெட்டு வருடங்களில் இவ்வளவு மந்தமான விற்பனை உள்ள கண்காட்சி இதுதான் என பலரும் கூறினர். ஏற்கனெவே நசிவின் விளிம்பில் இருக்கும் பதிப்புத் தொழிலின் சிறிய பிடிமான்மாக இருந்துவருவது சென்னை புத்தக் கண்காட்சியே. அதுவும் இத்தகைய நிலை என்றால் இந்தத் தொழிலின் எதிர்காலம் மிகுந்த அச்சத்திற்குரியது. ஊட்கங்கள் தரும் கவனமே இந்தக் கண்காட்சிக்கு … Continue reading புத்தக விற்பனை இருண்டு போயுள்ளது: மனுஷ்யபுத்திரன்

சொல்வதெல்லாம் உண்மை; சொல்லப்படாத உண்மைக் கதைகளின் தொகுப்பு!

மனுஷ்யபுத்திரன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘ சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் பலமுறை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். குங்குமத்தில் நான் எழுதி வந்த பத்தியில் ஒரு கட்டுரையே எழுதினேன். எனது நீண்ட நாள் நண்பன் சரவணன் சந்திரன்தான் அதை இயக்கி வந்தார். சரவணனிடம் அதைப்பற்றி நேரிலேயே அழைத்து பேசியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதெல்லாம் உண்மையின் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு கருத்தாளனாக என்னை சரவணன் அழைத்தபோது நிர்தாட்சண்யமாக அதை மறுத்தேன். ஆனால் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சியை நான் … Continue reading சொல்வதெல்லாம் உண்மை; சொல்லப்படாத உண்மைக் கதைகளின் தொகுப்பு!

வைகோவின் நோக்கம் நிறைவேறியதா?

மனுஷ்யபுத்திரன் வைகோ எதை வேண்டுனாலும் பேசுவார், அடிகிடைக்கும் என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்பார் என்றால் இந்த தந்திரத்தை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இது தேர்தல் களத்தை பெருமளவு சீரழித்து விடும். சாதி ரீதியாக இழிவுபடுத்தும் சொற்களைபேசுவது, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறுவது தேர்தல் விதிமுறைகளின்படி மிகக்கடுமையான குற்றம். தேர்தல் ஆணையம் தானாக முன் வந்து வைகோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையர் தேர்தல் விதிமுறைகளைப் பற்றி பேசுவது … Continue reading வைகோவின் நோக்கம் நிறைவேறியதா?

’போராட்டத்தில் இறந்துபோன மாற்றுத்திறனாளி குறித்து பேசாமல் நாம் ஏன் அமைச்சரின் அந்தரங்க புகைப்படம் குறித்து பேசுகிறோம்?’

போராட்டத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் மரணம் குறித்து பேசாமல் அமைச்சரின் அந்தரங்க ஒளிப்படம் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் கேட்டிருக்கிறார். அவருடைய முகநூல் பக்கத்தில், “மாற்றுத்திறனாளி ஒருவர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோயிருக்கிறார். நியாயமாக இன்று சமூகவலைத்தளங்களில் பேசப்படவேண்டிய விஷயம் இதுதான். ஆனால் அமைச்சர் ஒருவரின் அந்தரங்க புகைப்படம் பரவவிடப்படுகிறது. அதைப்பற்றிய பேச்சுக்கள் தீயாக பரவுகின்றன. பின்னர் அமைச்சருடன் இருப்பவர் அவரது மனைவிதான் என்று மற்றொரு மறுப்பு புகைப்படம். எப்படியோ ஒரு நாள் கழிந்தது. யார் யாரோடு இருந்தால் … Continue reading ’போராட்டத்தில் இறந்துபோன மாற்றுத்திறனாளி குறித்து பேசாமல் நாம் ஏன் அமைச்சரின் அந்தரங்க புகைப்படம் குறித்து பேசுகிறோம்?’

கார்ட்டூன் சர்ச்சை: ’பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?’

2014-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து குஷ்பூ விலகியபோது, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் யாரும் அதை விமர்சிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்த பிறகு, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது. முகநூலில் வெளியான சில கருத்துகள் கீழே... மனுஷ்யபுத்திரன் மதுவிலக்கிற்காக கலைஞர் செய்த அறிவிப்பிற்கு தினமணியில் மதிபோட்ட கார்ட்டூனாகட்டும் இப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஒட்டி குஷ்புவை வைத்து பாலா என்பவர் போட்டிருக்கும் கார்ட்டூனாகட்டும் அவர்களது மனோ வக்கிரத்தின் சிறுமையையே … Continue reading கார்ட்டூன் சர்ச்சை: ’பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?’