பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

சமர் ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் 'அவமானகரமான மௌனம்' என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை … Continue reading “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!

காவலர்கள் முன்னிலையில் இரண்டு இஸ்லாமியப் பெண்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் அடித்து, உதைத்தனர். இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. செய்தி ஊடகங்களின் பதிவின்படி,  ‘அதிக அளவிலான’ மாட்டிறைச்சியை ரயில் விற்பனைக்குக் கொண்டு சென்ற இரண்டு இஸ்லாமியப் பெண்களை கைது செய்ய காவல்துறை ரயில் நிலையம் வந்தது. இந்தத் தகவல் அறிந்து வந்த, ஹிந்து தள் என்ற அமைப்பினர், இந்தப் பெண்களை காவல்துறையினர் முன்னிலையில் ‘கௌ மாதா கீ ஜெ’ என … Continue reading மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!

”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன. இதைப் படியுங்கள்:  ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்… ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு … Continue reading ”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது

சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை … Continue reading நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது

ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

ஜோஷ்வா ஐசக் ஆசாத்     நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் … Continue reading ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே... https://youtu.be/5ocl9k8u0uA https://youtu.be/OO-VaJBHiik

“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள். - வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் … Continue reading “உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!

“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி … Continue reading “ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

“ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்ட ஸ்வாதியின் கொலையாளி குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திராவுக்கு தகவல் தெரிந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவல்: Ygee Mahendra ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார் தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான் ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும் … Continue reading “ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

காசு கொடுத்தால் மதக் கலவரம்: கேமராவில் சிக்கிய அரசியல்வாதிகள்

இந்தியாவிலியே மத கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலம் உத்தரபிரதேசம். இந்து - முஸ்லீம் கலவரங்கள் நடப்பதற்கான சூழல் எப்போதும் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டில் அடித்தே கொல்லப்பட்டார் முகமது அல்கல் என்ற முதியவர். இது கலவரம் உருவாக்க வேண்டும் என்றே திட்டமிட்டே நிகழ்ந்த கொலை என்பது நிரூபணமான பின்னும். அக்லக்கின் வீட்டுக்கு அருகே போடப்பட்ட மாட்டிறைச்சியை சோதனை செய்து, அவருடைய ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தது இந்த இறைச்சிதான் என்று புதிய கதையைப் … Continue reading காசு கொடுத்தால் மதக் கலவரம்: கேமராவில் சிக்கிய அரசியல்வாதிகள்

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!

தமிழகத்தில் 13லிருந்து 21 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்து இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பீட்டர் துரைராஜ் இணையதள கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். “2008-ஆம் ஆண்டு தமிழக அரசு 1400 சிறைவாசிகளை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் 7 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்தவர்கள். ஆனால் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை ஆணையம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. 1991-1999ஆம் ஆண்டு வரை கைதான இஸ்லாமிய சிறைவாசிகள் … Continue reading இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!

#வெறுப்புஅரசியல்: அசாதுதீன் ஓவைசி உருவம் பதிந்த கேக்கை வெட்டி ராஜ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாட்டம்!

ராஜ் தாக்கரே தனது 48வது பிறந்த நாளை மும்பையில் அவரது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். அப்போது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் புகைப்படம் பதித்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார். இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ் தாக்கரே கைது செய்யப்பட வேண்டும் என்று ஓவைசி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வாரிஸ் பதான் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் எனது கழுத்தில் கத்திவைத்து கேட்டாலும் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார் … Continue reading #வெறுப்புஅரசியல்: அசாதுதீன் ஓவைசி உருவம் பதிந்த கேக்கை வெட்டி ராஜ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாட்டம்!

அமெரிக்க நாடாளுமன்ற உரைக்கு தனக்குத் தானே கைத்தட்டிக்கொண்ட மோடி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியது இந்திய ஊடகங்களால் பெரிதும் விதந்தோதப்பட்டது.  ஆனால் அவருடைய உரை குறித்து சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சை மோடி உரைக்கு நடுவே தனக்குத் தானெ கைத்தட்டிக் கொண்டார் என்பது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் இந்த வீடியோவைப் பாருங்கள்... https://www.facebook.com/GauravPandhi/videos/833160503456253/

ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் … Continue reading ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

“வீட்டுக்குப் போய் ஆண்மையை துதியுங்கள்; இந்து ஜனத்தொகையைப் பெருக்குங்கள்”: ஆண்மை விருத்தி லேகியம் விற்ற பிரவீன் தொகாடியா

இந்து ஆண்கள் மத்தியில் ஆண்மைக் குறைபாடு அதிகரித்து வருவது, நாட்டில் இந்துக்களின் ஜனத்தொகையை குறைத்து வருகிறது. எனவே, வீட்டிற்கு போய் உங்கள் ஆண்மையைத் துதியுங்கள் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளார். குஜராத் மாநிலம் ஜம்புசார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பிரவீன் தொகாடியா, “இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது அதிகரிக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். லவ் ஜிகாத்தும் கிறித்துவ மத மாற்றமும் இந்துக்களின் எண்ணிக்கை … Continue reading “வீட்டுக்குப் போய் ஆண்மையை துதியுங்கள்; இந்து ஜனத்தொகையைப் பெருக்குங்கள்”: ஆண்மை விருத்தி லேகியம் விற்ற பிரவீன் தொகாடியா

பிரபல நடிகையின் பாட்டியை அடக்கம் செய்ய மறுத்த தேவாலயம்;இந்துவை திருமணம் செய்ததாக காரணம்: மதங்களின் பெயரால் நடக்கும் சார்வாதிகாரம் !!!

உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டபோது, அதில் இடம்பிடித்த இந்தியர் என்ற பெருமை நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு உண்டு. அமெரிக்க தொலைகாட்சியில ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான Quantico-வின் கதாநாயகியான நடித்து உலக மக்களின் மனதில் மட்டுமல்லாது, தொலைகாட்சி தொடர்களுக்கான பிரபல விருது பட்டியல்களிலும் தன்னுடய பெயரை பதித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த மாலை நேர விருந்தில் ஒபாமா தம்பதிகளை சந்தித்ததன் மூலம், திரைத்துறையில் உச்ச நடிகையாக பேசப்பட்டு வரும் … Continue reading பிரபல நடிகையின் பாட்டியை அடக்கம் செய்ய மறுத்த தேவாலயம்;இந்துவை திருமணம் செய்ததாக காரணம்: மதங்களின் பெயரால் நடக்கும் சார்வாதிகாரம் !!!

மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்

சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்

“உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார். தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், … Continue reading “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

“காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

நிஷ்ரி ஜாஃப்ரி உசைன்  என் அப்பா, இஸான் ஜஃப்ரி கொலை செய்யப்பட்டபோது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நாராயண் தேசாய், அன் பிரான்க், கார்ல் மார்க்ஸ், தாஸ்தாவெஸ்கி, ஏ. எம். ஸெய்தி, ஆஸ்கர் ஒய்ல்டு, ஜஃபர் இக்பால் மற்றும் பலர் சாட்சிகளாக இருந்தனர். ஆமாம், 14 வருடங்களுக்கு முன் அவர்கள், புத்தக அலமாரிகளில் இருந்தபடியே அவரும் அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த முஸ்லீம்களும் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு பட்டப் பகலில் இந்துத்துவ குண்டர்களால்,  பாஜக அரசு … Continue reading “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, படங்களை பகிர்ந்துகொள்ளும் ‘பசு பாதுகாவலர்கள்’

இராஜஸ்தானில் லாரியில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி அதை படங்களாகப் பிடித்து இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். மே 30-ஆம் தேதி நடந்திருக்கிறது இந்த சம்பவம். ‘கவ் ரக்‌ஷா தள்’ (பசு பாதுகாப்பு இயக்கம்) என்ற கும்பல், பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மனிதத்தன்மையற்ற செயல்களைச் செய்து அதையே பெருமையாக பகிர்ந்தும் வருகிறார்கள். இந்தச் சம்பவத்தின் போது, போலீஸ்காரர் ஒருவரும் அருகில் இருக்கிறார். ராஜஸ்தானில் பாஜக ஆள்கிறது. இந்தப் படங்களை … Continue reading மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, படங்களை பகிர்ந்துகொள்ளும் ‘பசு பாதுகாவலர்கள்’

குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

குஜராத்தில் நடந்த படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த தகவலின் அடிப்படை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் 2 பேர்  குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, குற்றச் சதியில் ஈடுபட்டது, கொலை, அகமதாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் 69 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. … Continue reading குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…

Lalita Panicker, Hindustan Times ‘இது ஒரு எதிர்பாராத சம்பவம்; வகுப்புவாதம் தொடர்பானதல்ல’ மத்திய கலாச்சார அமைச்சர் மகேஸ் சர்மா சொன்னார். கடந்த டிசம்பர் 2015ல் ஒரு கும்பலால் உத்திரபிரதேசம், தாத்ரியில் அடித்துக் கொள்ளப்பட்ட முகமது அக்லக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போன இடத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை. அக்லக்கின் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த இறைச்சியை, நமது கலாச்சாரக் காவலர்கள் மாட்டிறைச்சி என கண்டுபிடித்து,  அக்லக்கின் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தாலே அவருடைய தலையில் தாக்கியதால் … Continue reading அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

“நாட்டை ஆள்வது பிஜெபி என்பதை சிபிஎம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்”: கேரளத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் வன்முறை பாதை

Dr.T.M Thomas Isaac தேர்தலுக்கு பின் கேரளா முழுவதும் மோதல்கள் உண்டாயின. முஸ்லீம் லீக், பிஜெபி ஒரு புறமும் மறுபுறத்தில் சி.பி.எம்முக்கும் இடையில் தான் இந்த மோதல்கள் நடந்தன. இந்த மோதல்களில் சி.பி.எம்மின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரும் கொல்லப்பட்டார். மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும், அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சி பி எம் மாநில செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் ஏறப்போகும் கட்சி என்ற நிலையில், இதனுடைய முதல் முயற்சி எங்களிடமிருந்து … Continue reading “நாட்டை ஆள்வது பிஜெபி என்பதை சிபிஎம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்”: கேரளத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் வன்முறை பாதை

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?

மலேகான் குண்டுவெடிப்பு! கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத் தப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்துத்துவ அமைப்புகளுக்குத் தொடர்பு: 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் … Continue reading மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?

“நாங்கள் எல்லோரும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நிறைய இழந்தோம்; யாருக்கா? எதற்காக?”: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான நூருல் 

2006-ஆம் ஆண்டு மும்பை மாலேகான் குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மும்பை நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். சல்மான் ஃபார்ஸி, சபீர் அகமது, நூருல் ஹூதா, ரைஸ் அஹமது, முஹம்மது அலி, ஆஷிஃப் கான், ஜாவித் ஷேக், ஃபரூக் அன்ஸாரி, அஃப்ரார் அஹமது ஆகிய ஒன்பது பேரும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து ஜாமீன் பெற்றிருந்தனர். இவர்கள் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  ஜோடிக்கப்பட்டவை என … Continue reading “நாங்கள் எல்லோரும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நிறைய இழந்தோம்; யாருக்கா? எதற்காக?”: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான நூருல் 

கோவையில் மீண்டும் தலையெடுக்கும் காவிபயங்கரவாதம்: கம்யூனிஸ்ட் இளைஞர் படுகொலை

  கோவையில் இஸ்லாமிய மக்களின் மீது வன்மத்தை வைத்து வளர்க்கப்பட்ட காவி பயங்கரவாதம் கம்யூனிஸ்ட் இயக்க இளைஞர் ஒருவரை பலிவாங்கியிருக்கிறது. “கோவை மாநகரம் ‪ஆவரம்பாளையம்‬ தெற்கு வீதி எண் நான்கில் வசித்து வருபவர் எஸ்.சதீஸ்குமார் (வயது 20). இவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில்(AIYF), தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12.04.2016 அன்று, மாலை தெற்கு வீதி பாரதி படிப்பகத்தில் இருந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த காவி கும்பலை சேர்ந்த அருண் … Continue reading கோவையில் மீண்டும் தலையெடுக்கும் காவிபயங்கரவாதம்: கம்யூனிஸ்ட் இளைஞர் படுகொலை

#வீடியோ;காவிகளுக்கு கரி பூசிய மதங்களைக் கடந்த காதல்: மிரட்டலுக்குப் பணியாத நேசத்தால் நெகிழ்ச்சி!

28 வயது ஆஷிதாவும், ஷகீலும் 12 வருட நண்பர்கள். வாழ்க்கையின் மீதமிருக்கும் பக்கங்களை ஒன்றாக கடக்க முடிவு செய்த இருவரும், அது குறித்து தங்களின் பெற்றோர்களிடம் பேசுகிறார்கள். உடனடியாக ஒப்புதல் தெரிவித்த இரு தரப்பும், தங்களது குழந்தைகளின் திருமணதிற்கான ஆயத்தங்களை முழு வீச்சில் தொடங்குகிறார்கள். "செம்ம. இதுதான் செம்ம லவ் ஸ்டோரி" என்று தோன்றுகிறதா ? இங்குதான் காவிகளின் வடிவில் முழு திருப்பமும் ஏற்படுகிறது. பிஜேபி மற்றும் இந்துத்துவவாதிகள் அடங்கிய காவி கும்பல் ஒன்று கடந்த செவ்வாய் … Continue reading #வீடியோ;காவிகளுக்கு கரி பூசிய மதங்களைக் கடந்த காதல்: மிரட்டலுக்குப் பணியாத நேசத்தால் நெகிழ்ச்சி!

ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்

அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி மெட்ராஸ் ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், பேராசிரியர் ராம் புன்யாணியின் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘மத தேசியவாதத்திலிருந்து அம்பேத்கரின் சிந்தனைகளை விடுவித்தல்’ என்ற பொருளில் நிகழ இருந்த இந்த உரை, ஐஐடியின் IC & SR அரங்கில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ந் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்வு ஆரம்பிக்க இருந்த கடைசி நிமிடத்தில் திடீரென அனுமதியை மறுத்திருக்கிறது ஐஐடி நிர்வாகம். காரணம் கேட்டபோது, மாணவர் அமைப்புகள் நடத்தும் … Continue reading ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்

“முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்

பாஜக எம்பியும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “முஸ்லிம் பெண்களுக்கு மசூதிகளில் நமாஸ் செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு இந்த உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். இந்த நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்க வேண்டும், ஃபத்வாக்களின் படி அல்ல” என்று அவர் தெரிவித்தார். சாக்ஷி மகராஜ், சர்ச்சைகளால் பெயர் பெற்றவர், கடந்த ஆண்டும் இந்து பெண்கள் நான்கு … Continue reading “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்

‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 5 ஆயிரம் பேர் பலியாகினர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இச்சம்பவம் பற்றி துவாரகை சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். அதில், கேதர்நாத்திற்கு பக்திக்காக அல்லாமல், தேனிலவு கொண்டாடுவதற்கும், சுற்றுலாவுக்காகவும் செல்வதுதான் அங்கு வெள்ளம் ஏற்பட்டு, 5 ஆயிரம் பேர் பலியாக காரணம் என்று சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். புனித தலங்களுக்கு தேனிலவு, சுற்றுலா செல்வதை … Continue reading ‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி

கொல்லம் விபத்து: ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற டவுசர் போட்டு வந்த ஆர் எஸ் எஸ் காரர்கள்!

கொல்லம் அருகே கோயில் திருவிழாவில் நடந்த பட்டாசு விபத்தில் 107 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜகவும் அதன் முன்னோடி இயக்கமான ஆர் எஸ் எஸ் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Nandha Kumaran பொதுவாக ஒரு பெரும் விபத்து அல்லது அழிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம் ? ஆபத்தில் நிற்பவர்களை மீட்க நாம் என்ன உடை உடுத்தியிருப்போமோ அதனை போட்டு கொண்டே மீட்பதற்காக ஓடுவோம். இங்கே, ஆபத்தில் 'என்னை காப்பாற்றுங்கள்' … Continue reading கொல்லம் விபத்து: ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற டவுசர் போட்டு வந்த ஆர் எஸ் எஸ் காரர்கள்!

#அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!

இனியன்   நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்குக் காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் "இந்து சேவா" அமைப்புகள் மற்றும் "RSS" யின் … Continue reading #அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!

“பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்

யோகா குரு, பாபா ராம்தேவ், “பாரத் மாதா கி ஜெய் என சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம். ஆனால் இங்கே சட்டத்தையும் அரசியலமைப்பும் நாம் மதிப்பதால் அதை  செய்யவில்லை. இல்லையென்றால் இங்கே ஒருவருடைய தலையை அல்ல, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் தலையை வெட்டி வீசியிருப்போம்” என ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்திருந்த சத்பாவ்னா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்திருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஹரியாணாவில் நடந்தது. ராம் தேவின் பேச்சுக்கு … Continue reading “பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்

“காவி கொடியும் தேசியக் கொடியே” ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பகிரங்க பேச்சு

தேசியக் கொடி, தேசிய கீதம் என தேசியம் குறித்து ஆர் எஸ் எஸ்ஸும் பாஜகவும் தொடர்ந்து பேசி வருகின்றன. மூவர்ண கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ அமைப்பான ஆர் எஸ் எஸ், மூவர்ண கொடியை உயர்த்திப் பிடித்து சமீப காலமாக பேசிவந்தது. ஆனால், அதெல்லாம் மேம்போக்கானவை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி. https://twitter.com/IndiaTodayFLASH/status/716217993269682176 வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள தீன் தயாள் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் பேசிய அவர், “தேசிய கீதமாக … Continue reading “காவி கொடியும் தேசியக் கொடியே” ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பகிரங்க பேச்சு

“இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்”

இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான நேர்காணல், வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. 567 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். முதற்கட்டமாக 127 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் சுந்தர்சுவாமி போட்டியிடுகிறார். அதிமுகவை பாஜக இப்போதுதான் விமர்சித்துப் பேசுகிறது. இது தேர்தலுக்கான … Continue reading “இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்”

பழங்குடிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆய்வாளர்கள் ஜீன் ட்ரெஸ், பேலா பாடியாவை மிரட்டும் காவிபக்தர்கள்!

அ. மார்க்ஸ் ஜீன் ட்ரெஸ் ஒரு வளர்ச்சிப் பொருளியல் அறிஞர். வறுமை ஒழிப்பு தொடர்பாக அமார்த்ய சென் அவர்களுடன் இணைந்து பல ஆய்வுகளைச் செய்தவர்; நூல்களை எழுதியவர். காங்கிரஸ் அரசும், தற்போது அதைவிடத் தீவிரமாக பா.ஜ.க அரசும் நடைமுறைப் படுத்திவரும் நவ தாராளவாதப் பொருளியல் குறித்த கடும் விமர்சகர். ஆதார் அட்டை, அரசு உதவிகளை உணவுப் பொருட்களாக வழங்காமல் பணமாக வங்கியில் போடுதல். நியாவிலைக் கடை முதலான பொது விநியோக முறையைப் படிப்படியாக அழித்தல் முதலான மத்திய … Continue reading பழங்குடிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆய்வாளர்கள் ஜீன் ட்ரெஸ், பேலா பாடியாவை மிரட்டும் காவிபக்தர்கள்!

இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சமஸ்கிருத மொழியில் வெளியான பிரியமாசணம் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமஸ்கிருதம் மாநில மொழி பிரிவில் விருது பெற்றிருக்கிறது. எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழிக்கு எப்படி மாநில மொழிக்கான விருது வழங்கலாம் என பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். வினோத் மன்காரா என்பவரால் இயக்கப்பட்ட பிரியமாசணம், இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசுவதாகக் கூறி, கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நிராகரிக்கப்பட்டது. கேரளத்தில்  17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, உன்னாயி … Continue reading இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!