திமுக தேர்தல் அறிக்கை: டாஸ்மாக் கலைக்கப்படும்; மதுவிலக்கு உண்டா?

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. இதில் டாஸ்மாக் கலைக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை என்றும் இருக்கிறது. டாஸ்மாக் கலைக்கப்படும் என்பதை மதுவிலக்கு என்று கொள்வதா? அல்லது மது விற்பனை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுமா என்று சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. https://twitter.com/mohanraj_aiadmk/status/719191269692416000 தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்று இருக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றோ, மதுவிலக்கு அமலாக்கப்படும் என்றோ அறிவித்திருக்க வேண்டியதுதானே என்றும் விவாதம் எழுந்திருக்கிறது.

அண்ணா உணவகம்; டாஸ்மாக் கலைப்பு; லோக் ஆயுக்தா: திமுக தேர்தல் அறிக்கை!

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கையின் சில அம்சங்கள்... 25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியான. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்   தாலிக்கு 4 கிராம் தங்கம் தொடரும்   சிறு-குறு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்   100 நாள் வேலை திட்டத்தை 150 … Continue reading அண்ணா உணவகம்; டாஸ்மாக் கலைப்பு; லோக் ஆயுக்தா: திமுக தேர்தல் அறிக்கை!

மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

சமூக ஊடகங்களில் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறார் குஷ்பூ. குஷ்பூ மது அருந்துவதாகச் சொல்லி சில புகைப்படங்களில் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப் பட்டுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸாருடன் சேர்ந்து குஷ்பூ மது ஒழிக்கும் விதம் இதுதான் என சொல்லி இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். கேரளா சென்றிருந்த போது அங்கு, நண்பர்களுடன் புகழ்பெற்ற கட்டன் சாய் குடித்தேன். அந்தப் படங்களை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதைத்தான் இப்போது எல்லோரும் பகிர்கிறார்கள் என அவர் … Continue reading மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

காஞ்சிபுரம் மாநாடுகளால் மதுவிற்பனை இரண்டு மடங்கானது: திமுக, தேமுதிகவின் மதுவிலக்கு வாக்குறுதி என்னாவது?

 காஞ்சிபுரம் மாவட்ட வேடலில் கடந்த 20-ஆம் தேதி தேமுதிக திருப்புமுனை மாநாடு நடந்தது. அப்போது தாம்பரம் சரகத்துக்குட்பட்ட மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக விற்பனை நடந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக ரூ. 3 கோடிக்கு விற்பனையாகும் மதுவிற்பனை அன்று ரூ. 6.30 கோடி அளவுக்கு விற்பனையானதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் காஞ்சிபுரத்தில்  திமுக மாநாடு 21-ஆம் தேதி நடந்தது. அப்போது வழக்கமாக ரூ. இரண்டரை கோடிக்கு விற்பனையாகும் மது,  ரூ. 5 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Continue reading காஞ்சிபுரம் மாநாடுகளால் மதுவிற்பனை இரண்டு மடங்கானது: திமுக, தேமுதிகவின் மதுவிலக்கு வாக்குறுதி என்னாவது?

“என் புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..” நாகராஜின் வாழ்க்கையை படியுங்கள்!

வினவு நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை. நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து … Continue reading “என் புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..” நாகராஜின் வாழ்க்கையை படியுங்கள்!

இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!

புதுச்சேரி-கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், தேவ.பொழிலன், அ.சந்திரசேகரன், லெனின் முன்னிலை வகித்தனர். மக்கள் நலக்கூட்டணி இணையதளத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோ துவக்கி வைத்தார். கூட்டணி இலச்சினை (லோகோ) து.ராஜா எம்.பி. வெளியிட்டார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட முத்தரசன், ராமகிருஷ்ணன். கே.நாராயணா பெற்றுக் கொண்டனர். முன்னதாக … Continue reading இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!