மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக!: வைகோ

மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிய மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிகை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை -போரூர் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்கு மாடி குடியிருப்பு 2014, ஜூலை 28 ஆம் தேதி திடீரென்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 61 பேர் பலியான சோக நிகழ்வு நடந்தது. 11 மாடிகளைக் கொண்ட தலா இரண்டு அடுக்குமாடிக் … Continue reading மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக!: வைகோ

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: கி. வீரலட்சுமி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி. தேர்தல் தோல்வியுற்ற அவர், தற்போது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப்படை ஆதரவை தெரிவித்தோம். 19:07:2016, இன்று அந்த ஆதரவு நிலையை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல … Continue reading “எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திருவாரூரில் தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டியது குறித்தும் மதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு இடங்களில் பேசிவிட்டு, அடுத்து சீர்காழி தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் உமாநாத், மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் அருள்செல்வன், பூம்புகார் த.மா.கா. வேட்பாளர் சங்கர், நன்னிலம் சிபிஎம் வேட்பாளர் … Continue reading திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திமுகவில் இணைவதாக செய்தி:தினமலர் பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்தார் மதிமுக முன்னாள் எம்.பி!

மதிமுக முன்னாள் எம்பியும் மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான கணேச மூர்த்தி, திமுகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினமலர் தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதாக  தெரிவித்த கணேசமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்.

மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடு

தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி-தமாகா கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பங்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து கூட்டணி கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி: ஆர்.கே. நகர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், வேலூர், மயிலம், … Continue reading மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடு

#வீடியோ: வைகோ பேசியது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் குறித்தும் வைகோ பேசியது என்ன? http://www.youtube.com/watch?v=42fgF1HfTZc

“வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்”: கருணாநிதியின் சாதி அடையாளத்தை சந்திக்கு இழுக்கும் வைகோவின் சாதிவெறி

ஆழி செந்தில்நாதன் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார் வைகோ. கேப்டன் டீவியில் நேரலை பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலத்தான் பொங்குகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தார். இடையே சந்திரகுமாரின் வெளியேற்றத்தைப் பற்றி விளாசித்தள்ளிக்கொண்டிருந்தார். ஆச்சரியமில்லைதான். அப்போது சந்திரக் குமாரின் செயல்பாட்டை மிகமோசமாக வர்ணித்தார். அந்த "துரோகத்தை" அ்மபலப்படுத்தும்போது அவர் "வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்" என்றார். உலகத்தின் ஆதித்தொழிலைச் செய்யலாம் என்றார். இதுவும்கூட திராவிட வாய்ச்சவடால் ஸ்டைல்தான். அதன் பிறகு கருணாநிதியும் உலகத்தின் ஆதித் தொழிலைச் செய்யப்போகலாம் ஒரே … Continue reading “வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்”: கருணாநிதியின் சாதி அடையாளத்தை சந்திக்கு இழுக்கும் வைகோவின் சாதிவெறி

”வைகோ துணை முதல்வர்; திருமாவளவன் கல்வி அமைச்சர்; இடதுசாரிகளுக்கு உள்ளாட்சி, நிதித்துறை அமைச்சகம்”

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

#வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இரண்டு நாட்களுக்கு முன் திமுக, தேமுதிகவை கூட்டணியில் இணைக்க ரூ. 500 கோடி பேரம் பேசியது என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகைகள்தான் பேரம் பேசுவதாக தொடர்ந்து எழுதின; அப்படி எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். இந்நிலையில் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வைகோவிடம், ‘திமுக ரூ. … Continue reading #வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள். காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் … Continue reading சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

பத்ரி சேஷாத்ரி 1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதுரை மாநாட்டில் அப்படி என்னதான் பேசிவிட்டார் திருமாவளவன் ?: திமுகவினரை ஆத்திரமூட்டிய பேச்சின் கட்டுரை வடிவம்!

மக்கள் நல கூட்டணியின் மதுரை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதுதான் தற்போது இணைய உலகின் பரபரப பேச்சாக இருக்கிறது. திருமாவளவனின் பேச்சிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திமுகவினர் திருமாவளவனை தனிப்பட்ட  முறையில் தாக்கி வருவது படிப்பவர்களிடயே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் திருமாவளவன் பேசி விட்டார் என்பவர்களுக்காக, அந்த பேச்சின் கட்டுரை வடிவம். Subramanian Ravikumar மக்கள் நலக் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. வரும் சட்டமன்றத் … Continue reading மதுரை மாநாட்டில் அப்படி என்னதான் பேசிவிட்டார் திருமாவளவன் ?: திமுகவினரை ஆத்திரமூட்டிய பேச்சின் கட்டுரை வடிவம்!

நாஞ்சில் சம்பத் எப்போது “கொள்ளை பரப்பு செயலாளர்” ஆனார் ? வேண்டுமென்றே எழுதுகிறதா தினமலர்?

  நாஞ்சில் சம்பத் அதிமுகவின் " கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில்" இருந்து  நீக்கப்பட்டது தொடர்பாக கடந்த மூன்றாம் தேதி, தினமலர் கோவை பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ம.தி.மு.க.வில் "கொள்ளை பரப்பு செயலாளராக" இருந்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தபோது, அங்கும் "கொள்ளை பரப்பு துணை செயலாளர் " பதவியில் நியமிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தினமலரில் வெளியான ஒரு சிறிய பத்தியிலேயே, இப்படி இரண்டு இடங்களில் "கொள்ளை பரப்பு செயலாளர்" … Continue reading நாஞ்சில் சம்பத் எப்போது “கொள்ளை பரப்பு செயலாளர்” ஆனார் ? வேண்டுமென்றே எழுதுகிறதா தினமலர்?

சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகத்தின்" சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில்  5176 பேரிடம்  நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல்  கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  தி.மு.க-விற்கு 33.9% மக்களும்,  அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% … Continue reading சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?

கடந்த வாரம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், “மக்கள் நலக் கூட்டணி ஊழல் கறைபடியாத கட்சிகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் செயல்பாடுகள் மெச்சும்படி இருக்கின்றன” என்று பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, “தேமுதிக தலைவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்” என மீண்டும் அழைப்பு விடுத்தார். இதேபோல் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். … Continue reading விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?