வேட்பாளர் அறிமுகம்: பழங்குடிகளின் தோழர் பி. எல். சுந்தரம்!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார் பி. எல். சுந்தரம். இவர் தற்சமயம் இந்தத் தொகுதியில் எம் எல் ஏவாக இருக்கிறார். பல வளர்ச்சிப் பணிகள் காரணமாக தொகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்ற இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள் சப்பே கொகலு என்ற பழங்குடியின கதைத் தொகுப்பின் ஆசிரியர், லட்சுமணன் ஓடியன் சொல்கிறார்: ஒரு வார்டு கவுன்சிலரைக்கூட எளிதில் சந்திக்கமுடியாத தொகுதியில் ஒவ்வொருவீடாய் ஒவ்வொரு குடும்பமாய் ஒவ்வொரு மனிதராய் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: பழங்குடிகளின் தோழர் பி. எல். சுந்தரம்!

ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வானமாதேவியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாணவி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலை கழற்றி திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன், “நேற்று வானமாதேவியில் தேர்தல் பரப்புரையின் போது நந்தினி என்கிற மாணவி தனது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி அன்பளிப்பாக கொடுத்தார்.... "என் கழுத்திலிருந்த செயின் இனி எங்க அண்ணனிடம் இருக்கும்"" என சொல்லி எனக்கு அணிவித்தார். அது … Continue reading ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

நியூஸ் 7 தமிழ்-தினமலர் கருத்து கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

ஊடகங்கள் வெளியிடும் கருத்து கணிப்புகள் குறித்து சில சமூக ஊடக பதிவுகள்... அருணன் முரணான முடிவுகள் சொல்லும் கணிப்புகள்! ஒரு டி வி அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! இன்னொரு டி வி திமுக தான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! வேடிக்கை என்னவென்றால் இரண்டு டி வி  களும் தங்களதே விஞ்ஞானபூர்வமான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு என்று மார்தட்டிக் கொள்கின்றன. அப்படியெனில் இரண்டும் ஏன் முற்றிலும் முரணான முடிவை சொல்கின்றன? இதிலிருந்தே விஜயகாந்த் சரியாகச் சொன்னதுபோல இது கருத்து  திணிப்பு என்பது உறுதியாகிறதல்லவா? … Continue reading நியூஸ் 7 தமிழ்-தினமலர் கருத்து கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!

“மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிடுவதற்காக ஏராளமான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன. உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வார்க்கப்படும் தோசைகளைப் போல, இந்த கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் தங்களின் அரசியல் முதலாளிகளின் விருப்பப்படி கருத்துக்கணிப்பு முடிவுகளை தயாரித்து வெளியிடுகின்றன. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்” கருத்துக் கணிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. முழுவதும்... “சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஒரு காலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக இருந்தன. … Continue reading அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!

கருத்து கணிப்புகள் எப்படி பொய்த்து போகின்றன? என் டி டீவி பிரணாய் ராய் அனுபவம்!

தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு சாதகமாக இருந்தால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் வெளியிட்ட ஊடகங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. கருத்து கணிப்புகள் நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகின்றன? கருத்து கணிப்புகள் மெய்யாகின்றனவா? என்பதை பேசும் முன் கருத்து கணிப்பு குறித்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அனுபவத்தைப் பார்ப்போம். “உலகளாவிய அளவில் கருத்து கணிப்புகள் பொய்த்து வருகின்றன. கிரீஸ், துருக்கி, பிரிட்டன் … Continue reading கருத்து கணிப்புகள் எப்படி பொய்த்து போகின்றன? என் டி டீவி பிரணாய் ராய் அனுபவம்!

“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

“தலைவா நீ எங்கள் வீட்டுப் பிள்ளை”: ஹிட்டடித்த விஜயகாந்த் பிரச்சாரப் பாடல்

http://www.youtube.com/watch?v=CawZA1gGnQQ  

பீட்டர் அல்போன்சும் எஸ்.ஆர்.பியும் மட்டுமா தமாகா? வீதி வீதியாக பிரச்சாரம் செய்யும் இந்த 90 வயது தொண்டரும் தமாகாதான்!

தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பீட்டர் அல்போன்ஸ், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் போன்றவர்களோ, சந்திரகுமார் போன்றவர்களோ கட்சியின் செல்வாக்கை ஒருபோதும் தூக்கி நிறுத்தப் போவதில்லை. அந்தக் கட்சியின் ஒற்றைத் தலைமையும் இதோ இந்த 90 வயது வேர்மட்ட தொண்டர்களுமே கட்சியின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள். பழநியைச் சேர்ந்த பெரியவர் பழனிக்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை. அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜமாணிக்கம் போட்டியிடுகிறார். ஆனால் தன் கட்சி கூட்டணி … Continue reading பீட்டர் அல்போன்சும் எஸ்.ஆர்.பியும் மட்டுமா தமாகா? வீதி வீதியாக பிரச்சாரம் செய்யும் இந்த 90 வயது தொண்டரும் தமாகாதான்!

#வீடியோ புதுசு: வேர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த்!

அடிக்கப் பாய்ந்தார், நாக்கைத் துருத்தினார் என்றெல்லாம் வைரலான விஜயகாந்தின் செய்கையில் இந்த முறை ஒரு நேர்மறை மாற்றம். திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தனது பாதுகாப்புக்காக மேடையில் தனக்குக் கீழே அமர்ந்திருந்த பாதுகாவலருக்கு வேர்த்துக் கொட்டியதைப் பார்த்து விசிறிவிட்டிருக்கிறார். இதை வெட்கத்தோடு அணுகினார் உதவியாளர். விஜயகாந்தின் செயலைப்  பார்த்த பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த கூட்டத்தினர் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். http://www.youtube.com/watch?v=rVucvL7ACHg

முழுநேர அரசியல்வாதி பகுதி நேர தோசை மாஸ்டர்!

தேர்தல் பிரச்சாரம் போக மீதியுள்ள நேரங்களில் தோசை மாஸ்டராக இருக்கிறார் ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொன். சேர்மன். அவருக்குச் சொந்தமான உணவகத்தில் அவரும் ஒரு தொழிலாளியாக இருக்கிறார். உணவகத்துக்கு சாப்பிட வரும் மக்களை தனக்கு வாக்களிக்கும்படி கோருகிறார். இந்தச் செய்தியை வெளியிட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியிடம் பேசிய பொன். சேர்மன், “அதிமுக,திமுக கட்சிகளின் ஆட்சியால் தமிழ‌த்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தேமுதிக - மக்கள்நலக் கூட்டணி வெற்றிப்பெற்றால் மக்களுக்கு தேவையான வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

ஸ்டாலின் ராஜாங்கம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும். இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை … Continue reading தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு:முத்தரசன் போட்டி இல்லை

தமிழக தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.திருவாரூர்- மாசிலாமணி 2.பென்னாகரம்- நஞ்சப்பன் 3.தளி-ராமச்சந்தின் 4.பவானிசாகர்- சுந்தரம் 5.ஸ்ரீவில்லிபுத்தூர்- லிங்கம் 6.வால்பாறை(தனி)- மணிபாரதி 7.திருந்துறைப்பூண்டி உலக நாதன் 8.குடியாத்தம்(தனி) லிங்கமுத்து 9.சைதாப்பேட்டை ஏழுமலை 10.அவினாசி(தனி)- எம்.ஆறுமுகம் 11.சிவகங்கை- எஸ் .குணசேகரன் 12.மாதவரம்-ஏ.எஸ்.கண்ணன் 13.வீரபாண்டி-மோகன் மதுரை கிழக்கு-காளிதாசன் 15.திருப்பரங்குன்றனம் - கந்தசாமி 16.ஒட்டன்சந்திரம் -சந்தானம் 17.பேராவூரணி- தமயந்தி திருஞானம் 18.திருவரங்கம்- புஷ்பம் வைத்திய நாதன் 19.கீழ் பெண்ணத்தூர்- ஜோதி 20.அறந்தாங்கி- லோகநாதன் 21.அருப்புக்கோட்டை-செந்தில்குமார் 22.வாசுதேவநல்லூர்-சமுத்திரக்கனி 23.நாகப்பட்டினம்- … Continue reading சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு:முத்தரசன் போட்டி இல்லை

7 எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது எம் எல் ஏக்களாக இருக்கும் ஏழு பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாலபாரதி எம் எல் ஏ, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் கட்சி கொள்கை படி வாய்ப்பு வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல்-பீம்ராவ் பெரம்பூர் - சவுந்தராஜன் திருவிக நகர் - சுகந்தி போளூர்-செல்வம் விக்கிரவாண்டி-ஆர். ராமமூர்த்தி எடப்பாடி- பி. தங்கவேலு கோபிச்செட்டிப்பாளையம்-முனுசாமி கூடலூர்-தமிழ்மணி திருப்பூர் … Continue reading 7 எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

 ஞாநி ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி. 2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும். 3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே … Continue reading யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டி - வைகோ எம்.ஏ. பி.எல்., திருப்போரூர் - மல்லை சத்யா எம்.ஏ., காரைக்குடி - புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்., ஆலங்குடி - டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்சி., செஞ்சி - ஏ.கே. மணி சங்கரன்கோவில் - டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்., சிங்காநல்லூர் - ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் குளச்சல் - சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,. திருச்சி கிழக்கு - டாக்டர் … Continue reading மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

“வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

ஆனந்த விகடனில் கடந்த வாரம்(6.4.2016)வெளியான ‘போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ப. திருமாவேலன் ‘வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!’ என்ற தலைப்பில் தன்னுடைய முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், “மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், 'போர் வாள் அட்டக்கத்தி ஆன … Continue reading “வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இடதுசாரிகள் கேள்வி

கே. சுப்பராயன் கடந்த வார (6.4.2016) ஆனந்த விகடனில், “போர்வாள், அட்டக்கத்தி ஆனகதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாயிற்று. இதை எழுதியவர் ப.திருமாவேலன். அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். அவருக்கு அரசியல் வளர்ச்சிப் போக்குகள், அரசியல் கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைகள் குறித்து விமர்சிக்க முழு உரிமை உண்டு. அதை அங்கீகரிக்கவும், பாதுகாக்கவும் விரும்புகிறது மக்கள் நலக் கூட்டணி.விமர்சனங்கள் விமர்சனங்களாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தால் அவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவும், நியாயமானவற்றை ஏற்றுக் கொள்ளவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு … Continue reading உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இடதுசாரிகள் கேள்வி

நமது எம்ஜிஆர் நாளிதழில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ‘அமைச்சரவை’!

இலாகா ஒதுக்கிய சுதீசு! இதுவும் ஒருவகை டிசீசு! கோவில்பட்டி கூட்டத்துல பேசின மப்பானியோட மச்சான் சுதீஷ, மக்கள் நலக் கூட்டணியில் யாருக்கெல்லாம் மந்திரிப் பதவி என்று இலாகாவே பிரிச்சாராம்! என அதிமுக கட்சி ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி குறித்து சிறு கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறது. திமுக தவிர்த்த மூன்றாவது அணியை கடுமையாக விமர்சித்ததன் மூலம், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பலம் பெற்று வருவதை அதிமுக தலைமை உணர்வதைக் … Continue reading நமது எம்ஜிஆர் நாளிதழில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ‘அமைச்சரவை’!

பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி ​மக்களை குழப்பினார் கருணாநிதி!

திருச்சி உறையூரில் தேமுதிக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி விஷயத்தில் பொறுமையாக தெளிவான முடிவை மேற்கொண்ட நிலையில் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி மக்களைக் குழப்பியதாகத் தெரிவித்தார்.

தலைவர்கள் அசதியால் கண் அசந்ததை செய்தியாக்குவது என்னமாதிரியான ஊடக அறம்?

ஆளூர் ஷாநவாஸ் பரபரப்பாக எதையாவது வெளியிட்டு, டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக டி.வி.க்களை முந்த வேண்டும் என்பது மட்டுமே ஊடகங்களின் ஒரே இலக்காக உள்ளது. கொட்டாவி விடுவதையும், வாயைப் பிளப்பதையும் படம் பிடித்து செய்தியாக்கி பரபரப்பு ருசி கண்டுவிட்டதால், இனி மூக்கை நோண்டுவது, காதைக் குடைவது, தலையை சொறிவது என அனைத்தையும் படம்பிடிக்க வெறியுடன் அலைவார்கள். நியூஸ் 7 டிவியை கண்டிக்கிறேன். சுந்தர்ராஜன் கேப்டன் விஜயகாந்த் அணி மீது எனக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும் இதை ஒரு … Continue reading தலைவர்கள் அசதியால் கண் அசந்ததை செய்தியாக்குவது என்னமாதிரியான ஊடக அறம்?

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

“உடன்பிறப்பே உன்னால் முடியாதது உலகினில் ஏதும் உண்டோ?’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு பதினைந்தாவது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 22 அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனநாயக மரபுகளையொட்டி, கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த அனைவருடனும் “நேர்காணல்” நிறைவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்து, அவர்களுடைய கருத்துக்களைப் பெற்று, பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் வழங்கிய அறிவுரை, … Continue reading திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

”வைகோ துணை முதல்வர்; திருமாவளவன் கல்வி அமைச்சர்; இடதுசாரிகளுக்கு உள்ளாட்சி, நிதித்துறை அமைச்சகம்”

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாக பணம்: வைகோ இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம்!

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரிகள் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்...   அன்புடையீர், வணக்கம். தங்களுடைய மேலான நடவடிக்கைக்காக அதி முக்கியம் வாய்ந்த பிரச்சினையை தங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். கடந்த 27 ஆம் தேதி இரவு மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் … Continue reading சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாக பணம்: வைகோ இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம்!

#வீடியோ ”விஜயகாந்த் முதலமைச்சரானால் நாண்டுக்கிட்டு சாகலாம்”: சீமான் சொன்னபடி செய்வாரா?

அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போன சீமானின் இந்த முறை விஜயகாந்தை குறி வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்., “விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்” என தெரிவித்துள்ளார். சவால் விடுவதில் பெயர் போன சீமான், ஒரு வேளை விஜயகாந்த் முதல்வரானால் என்ன செய்வார்? வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=JNHxxN37jPs

’ஓ.பி.எஸ்., நத்தம் கிட்ட எடுத்த 30 ஆயிரம் கோடியை மறைக்கத்தான் 500 கோடி, 1500 கோடி மேட்டராம்’

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ரூ. 500 கோடி, 1500 கோடி பற்றிய பேச்சுதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் கற்பனைக் கேற்றமாதிரி ‘கதை’ கதையாக கதைக்கிறார்கள். சில ட்விட் கதைகள் இங்கே! https://twitter.com/thoatta/status/713669301157306369 https://twitter.com/gokula15sai/status/713704493179908096 https://twitter.com/thoatta/status/713707164209008640 https://twitter.com/Thiru_navu/status/713657596125667328 https://twitter.com/oorkkaaran/status/713654838735671296 https://twitter.com/senthilcp/status/713648957096759296 https://twitter.com/Thiru_navu/status/713628385944031233 https://twitter.com/Asalttu/status/713629798594031616 https://twitter.com/oorkkaaran/status/713617216659279872

#வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இரண்டு நாட்களுக்கு முன் திமுக, தேமுதிகவை கூட்டணியில் இணைக்க ரூ. 500 கோடி பேரம் பேசியது என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகைகள்தான் பேரம் பேசுவதாக தொடர்ந்து எழுதின; அப்படி எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். இந்நிலையில் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வைகோவிடம், ‘திமுக ரூ. … Continue reading #வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை குறிப்பிட்ட சிலருக்குப் பதவி வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படுவதல்ல. மாறாக, விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும். குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சி முறையை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் அது எதேச் சதிகாரமாக எளிய மக்களின் … Continue reading சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

மக்கள் நலக்கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த்!

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் கூட்டணி நலக் கூட்டணி தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று விஜயகாந்தை சந்தித்து பேசினர்.  சந்திப்பு முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டதாக அறிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக 124 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி தலைவர் 110 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!

சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

வி. சபேசன் சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார். யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே 'ரீல்' விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் … Continue reading சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை

பாவெல் தருமபுரி "சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்." - மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான … Continue reading ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள். காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் … Continue reading சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

“கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

 சுப. உதயகுமாரன் "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். தமிழக அரசியலின் அவல நிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே கிடையாது. தேசியம், முற்போக்கு, திராவிடம் என மனதிற்கு தோன்றிய வெறும் வார்த்தைகளை போட்டுக் குழப்பி ஒரு சொற்றொடரை உருவாக்கி, தமிழர்களுக்கு பண்ருட்டியார் போன்றோர் சேர்ந்தளித்த மாபாதகப் பரிசுதான் இந்தக் கட்சி. "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்பதுதான் இவர்கள் நாட்டுக்கு வழங்கியிருக்கும் மார்க்சிசத்துக்கு அடுத்த மாபெரும் … Continue reading “கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

திமுகவின் ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ விளம்பரம்: பிரபலங்களின் கருத்து

இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில், திமுக  முழு பக்க விளம்பரம் அளித்துள்ளது. அதைப் பற்றி பத்திரிகையாளர்கள், விமர்சகர்களின் கருத்து. Kathir Vel FOR TAMIL NADU ONLY ---------------------------------- பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஊழியர்கள் அனைவருக்கும் மஜிதியா குழு நிர்ணயித்த ஊதியம் ஜூன் முதல் வழங்கப்படும். 2011 நவம்பர் முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, மொத்த அரியர்சும் ஜூன் மாதத்தில் ஒரே தவணையில் வழங்கப்படும். திமுக, அதிமுக மனசு வச்சு, தேர்தல் கமிஷனும் கண்களை மூடி … Continue reading திமுகவின் ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ விளம்பரம்: பிரபலங்களின் கருத்து

#திருப்புமுனைமாநாடு: ’என்னதான் சொல்ல வர்றீங்க தலீவா’ ட்விட்டர் மக்கள் பகடி

https://twitter.com/praburemya_/status/701097889951383552 https://twitter.com/PuliArason/status/701097629644492800 https://twitter.com/Geosundar07/status/701097526041169920 https://twitter.com/SuruliOfficial/status/701096982731890688 https://twitter.com/Kmkarthikn/status/701096971851804673 https://twitter.com/satranluv/status/701096751919403008 https://twitter.com/SAMI_hadyh/status/701100230645649408 https://twitter.com/SAMI_hadyh/status/701099653224206336 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/Barasree1012/status/701100687480860673 https://twitter.com/manumechster/status/701100601661267969 https://twitter.com/kumaran_nanu/status/701100471360970752 https://twitter.com/umakantsingh_in/status/701100645017739268