மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: கி. வீரலட்சுமி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி. தேர்தல் தோல்வியுற்ற அவர், தற்போது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப்படை ஆதரவை தெரிவித்தோம். 19:07:2016, இன்று அந்த ஆதரவு நிலையை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக  இணைந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறப்பட்ட தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதனை எதிர்த்து அக்கட்சியிலிருந்து சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று மக்கள் தே.மு.தி.க., என்ற பெயரில் … Continue reading அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 … Continue reading குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல … Continue reading “எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக. Status Known For 232 out of 234 Constituencies Party வெற்றி முன்னிலை மொத்தம் காங்கிரஸ் 8 0 … Continue reading ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

ஜெயமோகன் சமீபத்தில்  தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!

மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக- தாமாக கூட்டணி வேட்பாளர்களான உளூந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் விஜயகாந்த், பவானிசாகர் பி.எல்.சுந்தரம், தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நிச்சய வெற்றி உண்டு என தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலும் ரவிக்குமார் போட்டியிடும் வானூர் தொகுதியிலும் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இந்தக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. https://youtu.be/hmmCxoF82Uw கருத்து கணிப்பு முடிவுகள் அதிமுக - 111 … Continue reading விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்

சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் CPIM மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோல் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான உ. வாசுகியும் க. பீம்ராவும் வாக்களித்தனர். படங்கள்: கவாஸ்கர்.

ஆர்.கே.நகரில் போலி மையைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயற்சி

சென்னையில் ஆர்கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். ஆர்.கே நகர் கூட்டணியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மை மாற்றப்பட்டு எளிதில் அழியும் போலியான மை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைமைத்தேர்தல் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றுள்ளதாகவும் ஆர்கே நகர் தொகுதியில் மறு … Continue reading ஆர்.கே.நகரில் போலி மையைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயற்சி

பூத் சிலிப் இ‌ல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், பதினோரு வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டு ஓட்டுநர் உரிமம் பான் கார்டு என்கிற நிரந்தர கணக்கு எண் அட்டை மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவன‌ங்கள் வழங்கிய பணி அடையாள அட்டை வங்கிகள், தபா‌ல் நிலையங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு பு‌த்தகங்கள் தேசிய மக்‌கள் தொகை பதிவேட்டின் கீழ் தலைமைப் பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டு மகாத்மா … Continue reading பூத் சிலிப் இ‌ல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

நிதி நெருக்கடியையும் வலுவான எதிராளிகளையும் பொருட்படுத்தாமல், சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி மற்றும் எடப்பாடி தொகுதிகளில் துணிவோடு களம் காண்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P. தங்கவேல், எடப்பாடி தொகுதியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத் துறையின் அமைச்சர் ‘எடப்பாடி’ பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் A. மோகன், திமுகவின் முன்னாள் அமைச்சர் ‘வீரபாண்டி’ S. ஆறுமுகம் அவர்களின் மகன் ‘வீரபாண்டி’ … Continue reading நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்த நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தன்னுடைய பிரச்சாரத்தை ஸ்ரீபெரும்புதூரில் முடித்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மா. வீரக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அவர். மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் மா. வீரக்குமார் வாக்களர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். திருப்பெரும்புதூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம். என் பெயர் மா.வீரக்குமார். நான் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் வேட்பாளராக நமது திருப்பெரும்புதூர் தொகுதியில் … Continue reading ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்த நல்லகண்ணு

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குழப்பமா?

யாருக்கு வாக்களிப்பது? குழுப்பத்தை தீர்க்குமா? இந்த படம்...  

சர்வாதிகார ஆட்சியா? மன்னராட்சியா?

விஜய் பாஸ்கர் இந்திய ஜனநாயகம் பற்றி கொஞ்சம் யோசித்தால் கூட நம்பிக்கையின்மையும் விரக்தியும் வந்து மன உளைச்சல் வந்துவிடுவதால் அது பற்றி பொதுவாக இந்தியர்கள் நினைப்பதில்லை என்று நினைக்கிறேன். அப்படி யோசிக்க விரும்பாத இந்தியன்களில் நானும் ஒருவன். 2006 இல் இருந்து 2011 வரை திமுகவினரின் குடும்ப அராஜகம் கண்டு மனம் நொந்த முறையில்தான் 2011 யில் அதிமுகவுக்கு ஒட்டுப் போட்டான் தமிழன். அதிலும் திருமங்கலம் தேர்தலில் திமுக செய்த அட்டகாசம், தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் மூன்று … Continue reading சர்வாதிகார ஆட்சியா? மன்னராட்சியா?

அன்புமணியால் ஊழலை ஒழிக்க முடியுமா?

வரவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பை ஆராய்ந்து தகவல் வெளியிட்டுவருகிறது அறப்போர் இயக்கம். இதில் அன்புமணியின் சொத்து மதிப்பு இங்கே...   //‪#‎Shocking‬ Asset report of PMK's CM candidate Anbumani. He was the Central Health Minister from 2004 - 2009. After 2009 his asset value and his wife's asset value increased rapidly. Anbumani Asset value 2009 - 1 … Continue reading அன்புமணியால் ஊழலை ஒழிக்க முடியுமா?

“சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் … Continue reading “சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

என்னைத் தேர்ந்தெடுத்தால்! பி.கற்பகவல்லி அம்பாசமுத்திரம் வேட்பாளர்!

மக்கள் நலக் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் பி.கற்பகவல்லி சாதாரண ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பங்கேற்று வருகிறார். சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு அனைத்து பகுதி மக்களின் நலன்களுக்காவும் 24 மணிநேரமும் பணியாற்றி வருபவர். 15 முறைக்கும் அதிகமாக கைது செய்யப்பட்ட பெண் உரிமை போராளி. நேர்மையான மக்கள் நல தொண்டர். தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி மக்களுக்காக என்னவெல்லாம் செய்வேன் என்பதை … Continue reading என்னைத் தேர்ந்தெடுத்தால்! பி.கற்பகவல்லி அம்பாசமுத்திரம் வேட்பாளர்!

“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

Kumaresan Asak விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்? தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர … Continue reading “பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

மக்கள் நலக்கூட்டணி பிற கட்சி/கூட்டணிகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

மக்கள் நலக்கூட்டணியோடு விஜய்காந்த், வாசன் உள்ளிட்டவர்களும் இணைக்கப்பட்டதற்கு பிறகு சில விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மாற்றுக் கூட்டணி என்று சொல்லிவிட்டு தேர்தல் ஓட்டுக்கான கூட்டணியாக மாற்றப்பட்டுவிட்டதே உங்கள் மாற்றுக்கொள்கை இதுதானா என்பதுதான் பலரது விமர்சனங்களுக்கான மையப்புள்ளி. இதனை நாம் நேரடியான அர்த்தத்தில் எடுக்க முடியாது என்பது என் வாதம். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் பின்னோக்கி பத்து மாத காலத்திற்கு இழுத்து சென்று அங்கிருந்து வாதம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். 2015 ஜுலையில் மக்கள் நலக்கூட்டியக்கம் தொடங்கப்பட்டு … Continue reading மக்கள் நலக்கூட்டணி பிற கட்சி/கூட்டணிகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் வீட்டில் சோஃபா அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 14 லட்சம் பறிமுதல்!

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று அதிமுக வேட்பாளர் நிலோபர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் சோஃபாவின் அடியில் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 8,000 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லீக் வேட்பாளர் செய்யது பாரூக் போட்டியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணியின் … Continue reading வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் வீட்டில் சோஃபா அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 14 லட்சம் பறிமுதல்!

மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

இளமதி சாய்ராம் “பணத்தை எப்படி கொண்டு போய் சேர்க்குறதுன்னு தெரியல... ஒரே கெடுபிடியா இருக்கு... வண்டிக்கு பெட்ரோல் போடுறதுக்காவது காசு கொடுங்கப்பா, எப்படி பிரச்சாரம் பண்றது..” இவ்விரண்டு, வெவ்வேறு முனைகளின் குரலாகத்தான் இந்த தேர்தலை பார்க்கத் தோன்றுகிறது. இலவச அறிக்கைகள், கருத்துக்கணிப்புகளை பார்த்து குழம்பித்தவிக்கும் மக்களின் சித்திரமே கண்முன் ஓடுகிறது. இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு தீர்மானமாக சொல்லமுடியால் இருப்பது இத்தேர்தலின் சுவாரசியம் என்றால், அதிமுக, திமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்த மக்கள் நல … Continue reading மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சி அமைக்க வேண்டும்? ஓர் எளிய மனிதனின் பார்வையில்…

Ganesan Anbu  தமிழக அரசியலில் பல ஆண்டுகளாகவே மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த “ மாற்றம் ” எனும் முழக்கம் இந்தச் சட்டமன்ற தேர்தலில் சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியே அம்மாற்றத்திற்கான ஒரே அணியாகவும் தோன்றுகிறது. கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும், வைகோவை அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டுள்ள தேமுதிக + தமாகா + மக்கள் நலக் கூட்டணி அடங்கிய அணியை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டிய காரணங்களாக இவற்றைக் கருதுகிறேன்.. 1. ஒற்றுமையும் புரிந்துணர்வும் : … Continue reading மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சி அமைக்க வேண்டும்? ஓர் எளிய மனிதனின் பார்வையில்…

வேட்பாளர் அறிமுகம்: ’அரசியல் அதிகாரமே தீர்வு’ செய்யூர் தொகுதி எழில் கரோலின்

செய்யூரின் பிரபலம் எழில் கரோலின். வழக்கறிஞர், சமூக சேவகர் என்பதையும் சேர்ந்து பிரபலத்துக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது, அது முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் என்பது. “என் அப்பா அரசியல் பிரபலம் என்பது மட்டுமல்ல, சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் ஒரு காரணம். இந்த சமூகம் சாதி கட்டமை உடைக்க வேண்டும், சாதியில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதில் இருந்தே எனக்குள் இருந்தது. கல்லூரி நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’அரசியல் அதிகாரமே தீர்வு’ செய்யூர் தொகுதி எழில் கரோலின்

வேட்பாளர் அறிமுகம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட போராடியவர் கே. பாலகிருஷ்ணன்

சிதம்பரம் தொகுதில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணிசார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மீண்டும் போட் டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் கோரி பிரச்சாரம் மேற்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி பாலகிருஷ்ணன். இந்த தேர்தலிலும் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது” என்றார்.“நாம் அமைத்திருக்கும் கூட்டணி வரலாற்று முயற்சி. இதனால்ஆத்திரம் அடைந்துள்ள திமுக வும், அதிமுகவும் நம்மைப் பல வடிவங்களில் சேதப்படுத்த நினைக் கிறார்கள். இந்த மாற்று அணி அவர்களுக்கு சவாலாக … Continue reading வேட்பாளர் அறிமுகம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட போராடியவர் கே. பாலகிருஷ்ணன்

துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி, ப்யூன் வேலைக்கு ரூ. 8 லட்சம் லஞ்சம்: கழகங்களால் கறைபடிந்த பல்கலைக்கழகங்கள்!

முனைவர் கலைவாணன் தமிழகத்தில் மார்ச் 1967ல் இருந்து கழகங்களின் ஆட்சிக்காலம் துவங்கியது. தமிழக முதல்வராக அண்ணா குறுகியகாலமே இருந்து 1969ல் மறைந்த நிலையில் நெடுஞ் செழியன் ஒருவாரம் தற்காலிக முதல்வ ராக இருந்தது போக, 10 பிப்ரவரி 1969ல் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் முதல்வரானார். 30 ஜூன் 1977 ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வரானார். அவர் இறந்த பின் ஜானகி ராமச்சந்திரன் 24 நாள் முதல்வ ராக இருந்தார். பின் 1989ல் கருணாநிதிமுதல்வரானார். 24 ஜுன் 1991ல் … Continue reading துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி, ப்யூன் வேலைக்கு ரூ. 8 லட்சம் லஞ்சம்: கழகங்களால் கறைபடிந்த பல்கலைக்கழகங்கள்!

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மகன் வீட்டில் ரூ. 1.50 கோடி பறிமுதல்!

 சென்னையில் கே.சி.பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டில் இருந்து ரூபாய் 1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தற்போதைய எம் எல் ஏவாக இருக்கும் கே.சி. பழனிச்சாமிக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்து வரும்நிலையில், பணப்பட்டுவாடா மூலம் அதை சரிக்கட்ட முயல்வதாக சொல்லப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுகவின் கோ. கலையரசன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் சி.பி.எம்-ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகவல்லி. பணமும் அதிகாரமுமே அரசியலை தீர்மானிக்கும் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் தி.மு.க அ.தி.மு.க வின் அதிகார ஆதிக்க சக்திகளை எதிர்த்து களமிறங்கியிருக்கிறார் கற்பகவல்லி. போராட்டங்களும், எளிமையுமே கம்யூனிஸ்ட்களின் அடையாளம், அதுவே இவரின் மிகப்பெரிய பலம். மொத்த குடும்பமும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் இயல்பாகவே பொதுவுடைமை சிந்தனையுடன் வளர்ந்தவர். பள்ளி … Continue reading வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

வேட்பாளர் அறிமுகம்: “அவர் காலில் செருப்புக் கூட இல்லை”: மதுரை கிழக்கு வேட்பாளர் பா. காளிதாஸ்

“முன்னாள், இன்னாள் முதல்வர்களின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டே போகின்றன. இதோ எங்கள் வேட்பாளர், அவர் காலில் செருப்புக் கூட இல்லை. இதுதான் நாங்கள்; எங்கள் இயல்பு. ஆனால் எங்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் பா. காளிதாஸை அறிமுகப்படுத்தியபோது பேசியது இது.   மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் பா. காளிதாஸ். மதுரை ஒத்தகடை அருகே … Continue reading வேட்பாளர் அறிமுகம்: “அவர் காலில் செருப்புக் கூட இல்லை”: மதுரை கிழக்கு வேட்பாளர் பா. காளிதாஸ்

“இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூருக்கு வருகை தந்தார். மிக எளிமையாக வந்திறங்கிய அவரை கூட்டணிக்கட்சியினர் வரவேற்றனர். தஞ்சாவூரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கிய மாணிக் சர்க்கார், “மாற்று அணியை ஆதரியுங்கள். திமுக, அதிமுக தலைமைகள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் எதையும் செய்யவதில்லை. எங்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.  குறிப்பாக இளைஞர்களிடம் இதைக் கேட்கிறேன்” என்று பேசியிருக்கிறார். வீடியோ இணைப்பு கீழே... … Continue reading “இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

திமுக - அதிமுக ஆட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தாது மணலில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மெகா கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும்,இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது; ஆனால் அதற்கு மாறாக திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை ஏமாற்றவே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள … Continue reading தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

“சாராயம் வித்த காசுலதான் சர்க்கார் நடக்குது”: பிரச்சாரப் பாடல்கள் ஒரு தொகுப்பு!

தேர்தலில் கவனம் பெற்ற சில பிரச்சாரப் பாடல்கள் இங்கே!   http://www.youtube.com/watch?v=C-LF74XWfVM https://youtu.be/WjuUPvGo7xQ

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

திருமாவளவன் மீது நடந்த தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி -தமாகா அணியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், திருமாவளவன் அவர்கள் சாவடிக்குப்பத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, வழியில் டிராக்டரை நிறுத்தி அவர் சென்ற … Continue reading காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

கருத்துக் கணிப்புகள்; ஆசைகள்; ஆரூடங்கள்!

ஜி. ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் - சிபிஐ(எம்) தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில்  திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் பூரண மதுவிலக்கு விவசாயக் கடன் , கல்விக் கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாற்றம் வேண்டும் என்ற ஆவல் … Continue reading கருத்துக் கணிப்புகள்; ஆசைகள்; ஆரூடங்கள்!

கருத்துக் கணிப்புகள்: தேர்தல் ஆணையம் அமைதி காப்பது ஏன்?

கருத்துக்கணிப்புகள் வெளியிட தடையிருந்தும் தற்போது வெளியாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் அமைதி காப் பது ஏன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்(2016) தொடர்பாக 04.04.2016 காலை 7 மணி முதல் 16.05.2016 மாலை 6.30 மணி வரையிலான காலத்தை வாக்குப்பதிவிற்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அதனை அச்சு மற்றும் மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது … Continue reading கருத்துக் கணிப்புகள்: தேர்தல் ஆணையம் அமைதி காப்பது ஏன்?

வேட்பாளர் அறிமுகம்: மணல் கொள்ளையைத் தடுக்க போராடி சிறை சென்ற லால்குடி வேட்பாளர் ஜெயசீலன்!

கடந்த அரை நூற்றாண்டு காலஆட்சியில், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக- திமுக கட்சிகள் எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி தொகுதி வேட்பாளர் எம்.ஜெயசீலன் குற்றம் சாட்டினார்.தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி தொண்டர்களுடன், வேட்பாளர் எம்.ஜெயசீலன் செவ்வாயன்றும் தொடர்ந்து புள்ளம்பாடி ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக, கல்லக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம், இடங்கிமங்கலம், இ.வெள்ளனூர், நஞ்சை சங்கேந்தி,ஐயனார்புரம், புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், நல்லூர், தொரணிபாளையம் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: மணல் கொள்ளையைத் தடுக்க போராடி சிறை சென்ற லால்குடி வேட்பாளர் ஜெயசீலன்!