தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. "பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!

மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.

தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.

தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை  சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் … Continue reading தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் … Continue reading போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் … Continue reading தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

பேரா. அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து கள ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள சுருக்கமான விவரங்கள்... துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

“மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்!

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்தை பகை நாடாகக் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள், ரயில்கள், சுங்கச்சாவடிகள் அனைத்தையும் முடக்கும் போராட்டங்களை அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடத்தி வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை. ஐம்பது ஆண்டுகள் பொறுத்தவர்கள் ஐந்து மாதம் பொறுக்கக் கூடாதா … Continue reading “மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்!

“ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல…”

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் அதிகாரம் (தமிழ்நாடு) வெளியிட்டுள்ள அறிக்கை:  அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் - எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் … Continue reading “ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல…”

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் “தேவ**** காசு வாங்கிட்டு ஆடுறீங்க” என்ற போலீஸ் அதிகாரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கேட்டு விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக தவிர்த்த அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் தமிழகத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னை எழும்பூரிலும் விழுப்புரத்திலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்கிழமை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஈடுபட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கீழ்த்தரமாகப் பேசியதாக கூறியுள்ளது.   இதுகுறித்து மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மக்கள் … Continue reading ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் “தேவ**** காசு வாங்கிட்டு ஆடுறீங்க” என்ற போலீஸ் அதிகாரி

சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோத பாசிசம்!

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: அப்போலாவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகத்தில் வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளது தமிழகப் போலீசு. அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பியதாக 3 சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் படி ஏழாண்டுகள் வரை அவர்களைச் சிறையிலடைத்துத் தண்டிக்கமுடியும். முதல்வர் உடல் நிலை பற்றி வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை 50 … Continue reading சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோத பாசிசம்!

விவசாயிகள் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் ஆதரவு

தமிழகத்தில் வரும் 17, 18-ஆம் தேதி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் நடத்தவிருக்கும் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நதி நீர் உரிமையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும், அதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய பி.ஜே.பி மோடி அரசாங்கம் நிராகரித்து விட்டது. உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டாலும் … Continue reading விவசாயிகள் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் ஆதரவு

படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர். மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக … Continue reading படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

டாஸ்மாக் கடை மூடக் கோரிய போராட்டத்தில் பெண்களை கடுமையாகத் தாக்கிய போலீஸ்

மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிப்பதாக   பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:   சென்னை மதுரவாயல் ரேசன் கடை அருகில், உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மதுரவாயல் நொளம்பூர் மாதாகோயில் நகர், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு … Continue reading டாஸ்மாக் கடை மூடக் கோரிய போராட்டத்தில் பெண்களை கடுமையாகத் தாக்கிய போலீஸ்

டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள் மீது ஒன்றரை மாதங்கள் கழித்து தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. இது குறித்து வினவு தளத்தில் வெளியான அறிக்கையில், டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகளின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிக்கை முழுவிவரம் இங்கே: கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் … Continue reading டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

“என் புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..” நாகராஜின் வாழ்க்கையை படியுங்கள்!

வினவு நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை. நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து … Continue reading “என் புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..” நாகராஜின் வாழ்க்கையை படியுங்கள்!

Video: “உச்சநீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா?” மகஇக போராட்டம் 

அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுடன் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் மட்டுமல்லாது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து … Continue reading Video: “உச்சநீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா?” மகஇக போராட்டம் 

அவசியம் படியுங்கள்: ஆட்சியாளர்களின் பேரிடர்!

“கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களாகத் தமிழகத்தை உருக்குலைத்து, தமிழக மக்களது வாழ்வுக்குச் சர்வநாசம் விளைவித்தது இயற்கைப்பேரிடரால் நேர்ந்தவை அல்ல. இவை ஆட்சியாளர்களே விளைவித்த பேரிடர், பேரழிவுகள்தாம்” என்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் இந்த அமைப்பு அண்மையில் தமிழகத்தை ஸ்தம்பிக்க வெள்ளம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இங்கே... “இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்” மட்டுமல்ல, நிவாரணங்கள் என்ற பெயரில் உள்ளிட்டு … Continue reading அவசியம் படியுங்கள்: ஆட்சியாளர்களின் பேரிடர்!