’மஞ்சள் பத்திரிகை’: தி டைம்ஸ் தமிழுக்கு லீனா மணிமேகலையின் ‘பாராட்டு’

எழுத்தாளர் ப்ரேம் மீது நடத்திய நிகழ்த்திய ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை தி டைம்ஸ் தமிழ் வெளியிட்டது. லீனாவின் ஆணவத் தாக்குதல் எத்தகைய தருணத்தில், எப்படி வெளிப்பட்டது என்பதையும் தி டைம்ஸ் தமிழ் ஆவணப்படுத்தியிருக்கிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இடம் பெறும் விவாதங்கள், சர்ச்சைகளை ஒட்டி ஊடகங்கள் செய்தியாக்குவது உலகம் முழுக்கவும் நடைமுறையில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதப்படும் பதிவு குறித்து, தொடர்புடைய பிரபலத்திடம் கருத்து கேட்டு வாங்கிப் போடுவது அவசியம் கருதி … Continue reading ’மஞ்சள் பத்திரிகை’: தி டைம்ஸ் தமிழுக்கு லீனா மணிமேகலையின் ‘பாராட்டு’

“கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

பிரேம்   “கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” … Continue reading “கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை: ப்ரேம்

பிரேம்  இறுதியாய் எஞ்சக்கூடிய வன்முறை வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூக அதிகாரம் என்ற அனைத்து வகை அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல்களும் கடந்து இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஆகக்கொடிய வன்முறையாக அமைவது அழகு-அழகின்மை என்ற புனைவு வழி கட்டப்பட்ட வன்முறைதான். இனவெறுப்பு-புனித வாதம்- தேர்ந்தெடுத்த உடல் என்ற பிழிந்து- பிரித்தெடுத்தல் செயல்பாடு வழி உருவாக்கப்பட்ட இயற்கை மறுத்த உளவியல்பின் நீட்சிதான் அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை. நோயற்ற, உறுப்புக் குறைபாடுகள் அற்ற, இயற்கையான உடல்கள் என்பதற்கு மேல் மனித … Continue reading அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை: ப்ரேம்

பின்நவீனத்துவம் அறியாத அம்பேத்கரும் அயோத்திதாசரும் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களும்

பிரேம்  1916- மே மாதம் 9 ஆம் தேதி Caste in India: Their mechanism, genesis and development (இந்தியாவில் சாதிகள்: அவற்றின் செயல்பாடு, உருவாக்கம், பெருக்கம்) என்ற ஆய்வுக்கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கர் அளித்த போது அவருக்கு வயது 25. ஒரு ஆய்வு மாணவராக அவர் அளித்த அக்கட்டுரை இன்று உள்ள இந்திய ஆய்வுகள் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அதனை எழுதும் முன் அவரின் மனதில் அது எத்தனை காலம் ஊறிக்கிடந்திருக்கும் என்பதை … Continue reading பின்நவீனத்துவம் அறியாத அம்பேத்கரும் அயோத்திதாசரும் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களும்

”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

பிரேம் பிரேம் நீங்கள் சாதி பார்ப்பதில்லை ஆனால் சாதி உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட. தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம். நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் … Continue reading ”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

“நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்”: உம்பர்தோ இக்கோ மறைவுக்கு எழுத்தாளர் பிரேமின் அஞ்சலி

பிரேம் எனக்கு மிகப்பிடித்தமான எழுத்தாளர்களின் வரிசையில் ழோர் பெரக், உம்பர்தோ இக்கோ, மிலோராத் பாவிக் என்ற மூன்று பெயர்கள் எப்பொழுதும் இருக்கும். இதில் இக்கோவின் பெயர் அதிக கனமானது. கோட்பாடு, அறிதல் முறை இரண்டிலும் நான் அதிகம் இவரிடம் கற்றிருக்கிறேன். அதனைவிட புனைகதையின் பலதளங்களைக் கண்டறிய அவரது கதைகள் எப்போதும் ஊக்கமளிப்பவை. தொடர்ந்து வாசிக்கச் சொல்லும் எழுத்துகள் அவருடையவை.. அவரது இறுதிக் கதையெழுத்தாக அமைந்துவிட்ட Numero Zero (Richard Dixon மொழிபெயர்ப்பில்) நாவலின் இறுதிப் பகுதியில் காணும் … Continue reading “நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்”: உம்பர்தோ இக்கோ மறைவுக்கு எழுத்தாளர் பிரேமின் அஞ்சலி