இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

சிவபாலன் இளங்கோவன்

ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா?

“survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக பிரச்சினை இந்த உலகத்தில் இருக்கிறது? அந்த survival கேள்விக்குறியாகும்போது அது எத்தனை பதட்டமானதாக, அச்சமூட்டக்கூடியதாக இருக்கும்?. அவர்களுக்காக இறங்கி போராடவில்லையென்றாலும், அவர்களுக்காக எதுவும் பேசவில்லையென்றாலும் கூட, அவர்களின் நிலையை புரிந்து கொள்வது தானே சக மனிதராக நமது முதன்மையான கடமை?, நாளை எல்லோருக்குமே இப்படிப்பட்ட existence பிரச்சினை வரும்போது இந்த சமூகம் நம்முடன் நிற்க வேண்டுமென்று தானே நாமும் எதிர்பார்ப்போம்?

அடிப்படை மனித பண்புகளை விட, நமது அடிப்படைவாத அடையாளங்கள் அத்தனை உயர்வானதா? மனித பண்புகளை உதறிவிட்டு அப்படி என்ன அடையாள பெருமையை நாம் தூக்கி சுமக்க போகிறோம்? என்னை பொறுத்த வரையில் அரசாங்க வன்முறை கூட அத்தனை அச்சமூட்டிவதாக இல்லை. ஒரு பெரும்பான்மையான சமூகம் அரசாங்கத்தின் இந்த வன்முறையை இப்படி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறதே அது தான் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது.

இந்த காலத்தில் எப்படி மக்கள் இப்படி மாறிப்போய்விட்டார்கள்? உண்மையில் சக மனிதர்களின் மீதான எந்த வித கரிசனமும் இல்லாத, மனிதாபிமானமும் இல்லாத பெரும்பான்மையான மக்களின் மன நிலையை தான் அரசு பிரதிபலிக்கிறதோ என்று நினைக்க தூண்டுகிறது. உண்மையில் அது தான் என்னை நடுங்க வைக்கிறது.

சிறு வயதில் பள்ளி புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்ற சொல்லை பார்க்கும்போதெல்லாம் அது எத்தனை பொருள் பொதிந்த சொல் என்று உணர்ந்ததேயில்லை. ஆனால் இப்போது புரிகிறது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது மாபெரும் கனவு. அது எப்படியாவது நனவாக வேண்டும் என்பதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

சிவபாலன் இளங்கோவன், மருத்துவர்; எழுத்தாளர்.

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்

சந்திரமோகன்

சந்திர மோகன்

“விவசாயிகளை, விவசாயத்தை, பொதுமக்களை, சுற்றுச்சூழலை பாதிக்கும் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை (8 way Express Greenfield Corridor) வேண்டாம் ” என ஒரு போராட்டத்தை, நான்கு இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் கடந்த ஜூலை 6 ந் தேதியன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்த முடிவு செய்து அனுமதி கேட்டு கடிதம் தரப்பட்டும் இருந்தது. இத் திட்டத்திற்கு ஒரு அடையாள எதிர்ப்பாக நகல் அரசாணை எரிப்பு ஆர்ப்பாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. காவல்துறை அனுமதி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

தோழர். P.சண்முகம், பொது செயலாளர், த.நா.விவசாயிகள் சங்கம் – Cpim தலைமையில், பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் CPIM, CPI, CPIML & SUCI(C) தோழர்கள் அணிதிரண்டு முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தோம். சுற்றி வளைத்த காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலிருந்த ஜெராக்ஸ் பேப்பர்களை பறிப்பது, அவற்றின் மீது Water pocket canon மூலமாக தண்ணீர் பீச்சியடிப்பது என பரபரப்பு ஏற்படுத்தி, பெரும்பான்மையான விவசாயிகளுக்கு குழப்பம் & அச்சத்தை ஏற்படுத்தி கலைத்து விட்டு, 44 பேர்களை மட்டும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தது.

எளிதில் பிணையில் வரமுடியாத பிரிவு 7 (1) CLA அடிப்படையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், திட்டமிட்டதாகவும் பொய் வழக்கை புனைந்தது. தவறான பிரிவு சேர்க்கப்பட்டதால், FIR ல் தோழர்கள் கையெழுத்திட மறுத்தனர். “இதே மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்திய அரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டகாரர்களை விடுவித்த தமிழக காவல்துறை சேலம் மற்றும் திருவண்ணாமலை போராட்டக்காரர்கள் மீது மட்டும் ஏன் பொய் வழக்கு போட வேண்டும்? ” என்ற கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை.

தனியார் மண்டபத்திலேயே நேரம் அதிகமாக, இரவு ஆகிவிட்டது ; ஊடகங்கள் குவிந்து விட்டன. உளவுத் துறையின் ஆலோசனை பெற்று “அரசாணை பொது சொத்து, அதை எரித்ததால்” இப் பிரிவு சேர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.” எங்கள் காசு போட்டு ஜெராக்ஸ் எடுத்து வந்த பேப்பர்களை எரிக்க முயற்சித்தால், அந்த நடவடிக்கையில் எங்கு பொதுச் சொத்துக்கு சேதம், சதி எல்லாம் வருகிறது ?” என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத அதிகாரிகள் “மேலிடத்து உத்தரவு ” (காவல்துறை அமைச்சர் முதல்வர் தான்! ) என்ற உண்மையை உரைத்து விட்டு, பொய் வழக்கு போடும் குற்ற உணர்வே இல்லாமல் காவல்துறையினர், எங்களை ரிமாண்ட் செய்யும் நீதித்துறை நடவடிக்கையில் இறங்கினர். இது மேலிடத்து உத்தரவு என்று சொன்ன போதும், சிறைக்குள் சந்தித்த குற்றம் புரிந்த சிறைவாசிகள் பலரும் சொன்ன செய்தி காவல்துறை சட்டங்களை, நியாயங்களை கைவிடுகின்றன என்பது தான்!

“சின்னச் சின்ன குற்றங்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்ட எங்கள் மீது திருந்துவதற்கு வாய்ப்பு எதுவும் வழங்காமல், “ரவுடிகளை ஒழிப்பது” என்ற பெயரால், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளியுள்ளனர்.” “இந்திய தண்டனை சட்டங்கள் IPC கடுமையாக இருக்கும் பொழுது பொய் வழக்குகளை ஏன் காவல்துறை நாடுகிறது? ” என்பது நீதித்துறையும், மனித உரிமை ஆணையமும் அக்கறை கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

சிறைக்குள் …

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர், நீதித்துறை முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் என்ற உத்தரவுபடி, நள்ளிரவில் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். சேலம் மத்திய சிறையின், கடந்த 2001ம் ஆண்டு சில நாட்கள் சிறைவாசம் அனுபவத்தை ஒப்பிடும்போது, நிச்சயமாக நிறைய மாற்றங்கள் பார்க்க முடிந்தது. அதே சிறை, அதே செல்கள், அதே கழிப்பறைகள், குளியல் தொட்டிகள் தான் எனினும், வழங்கப்படும் உணவில், மருத்துவ சோதனை, மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முன்னேற்றம் இருந்தது.

மிகவும் குறிப்பிட வேண்டியது:-

ஒன்றிரண்டு விதிவிலக்கான வார்டன்கள் தவிர, அனைவரிடமும் (வார்டன்கள் துவங்கி சூப்பிரடெண்டட் வரை) மனித முகங்களை பார்க்க நேரிட்டது. கெடுபிடிகளை தவிர்த்து மனித உறவுகளை (Human Relations) பேண, தற்போதுள்ள சேலம் மத்திய சிறை நிர்வாகம் முயற்சிப்பது போல தெரிகிறது. இது கடந்த கால மோசமான நிலைமையோடு ஒரு ஒப்பீடு தான்! அரசியல் சிறைவாசிகள், மறியல் வழக்கு சார்ந்தவர்கள் என்பதாலும் ஒரு நிதானமான அணுகுமுறை இருப்பது வழக்கமானது தான்!

எட்டு வழி சாலைக்கு சிறைக்குள்ளும் எதிர்ப்பு!

பசுமைசாலை திட்டத்தை எதிர்த்ததால் தான் சிறைபட்டிருக்கிறோம் என்பதை அறிந்த சிறைவாசிகள் (Prisoners) முதல், சீருடைவாசிகள் வரை தார்மீக ஆதரவை வெளிப்படையாக காட்டினர். விவசாய சமூகத்தைச் சார்ந்த எவரொருவரும் வேறு எப்படி நினைக்க முடியும் ? ஒன்றிரண்டு சிறை அதிகாரிகள் மட்டும், “இத்தகைய போராட்டங்கள் அதிகரித்தால் நக்சல்பாரி இயக்கம் வளர்ந்து விடும்” என அரசாங்கம் கருதுவதாக, அரசாங்க நிலைப்பட்டை தெரிவித்தனர்.

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்

நான்கு நாட்கள் சிறையின் 8 மற்றும் 7 வது தொகுதிகளில் இருக்க நேர்ந்தது. நல்லது, கெட்டது என பலவற்றையும் பார்க்க, கேட்க நேரிட்டது. தமிழக அரசாங்கம் சிறைகளை எவ்வளவு மோசமாக கருதுகிறது, அணுகுகிறது என அறிந்து கொள்ள முடிகிறது.

நிதி ஒதுக்கீடும் பணியாட்கள் ஒதுக்கீடும் இல்லாத அவலநிலையில்…

இந்தியாவின் நவீன அதிவிரைவு சாலைகளில், சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை, இரண்டாம் இடத்தில் உள்ளது. NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சாத்தியக் கூறு அறிக்கை / Feasibility Report அடிப்படையில், இந்த சாலைக்காக ரூ.10,000 கோடி முதல் ரூ.13,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் & வனத்துறை அமைச்சகம் MoEF & CC இதுவரையிலும் சுற்றுச்சூழல் ஒப்புதல் /EC வழங்கப்படாத திட்டத்திற்கு, குறிப்பான பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகளில் (Specific Terms of Reference /Specific ToR) 1)சாத்தியமான வேறு வழிகளை alignment கண்டறிய சொல்லி இருக்கும் நிலையில், 2) செங்கம் – சேலம் இடையே கல்ராயன் வனப்பகுதி பாதிக்காத வகையில் மாற்று வழியை Realignment உருவாக்க சொல்லி இருக்கும் நிலையில்…

ஏராளமான பணத்தை கட்சிகாரர்கள், அதிகாரிகளிடம் வழங்கி, “விவசாயிகள் தங்கள் நிலத்தை/ சொத்துக்களை இத் திட்டத்திற்கு வழங்கி விட்டார்கள்” என்ற நிலையை உருவாக்க சாம, பேத,தான, தண்ட என அனைத்து வழிமுறைகளையும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் கையாள்கிறது.

ஆனால் … முதலமைச்சர் சிறை மேம்பாட்டுக்கு என எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

1) சேலம் மத்திய சிறையில், பல கழிப்பறைகளில் கதவுகள் இல்லை.

2) கட்டியுள்ள 7 கழிப்பறைகள் முடிக்கப்படாமல் உள்ளன.

3) குடிநீர் உள்ளது ; ஆனால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை.

4) காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை; 800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். (40 சிறைவாசிகளுக்கு ஒரு Cook என இருக்க வேண்டும்.). தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.

5)தூய்மை பணிகளுக்கு என ஒரு பணியாளர் கூட இல்லை. எந்தவிதமான சுத்தப்படுத்தும் கருவிகளும் இல்லை. “சிறைவாசிகளே கூட்டுகிறார்கள்” என்பதில் குற்றம் காண என்ன இருக்கிறது என்ற அதிகார வர்க்கத்தின் குரலுக்கு அப்பால், #வெறுங்கால்களை பிரஸ் போல் பயன்படுத்தி, மணலை போட்டு கழிவறை பேசின்களை சுத்தம் செய்யும் அவலங்களை மனித உரிமை ஆணையமும், த.நா. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக் குழுவும் வந்து பார்வை இட வேண்டும். Green Corridor பற்றி பேசும் முதல்வர் இவை பற்றியும் கவலைப்பட வேண்டும்.

6)நாடு முழுவதும் 8 மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டம் பொருந்தும். சுமார் 150 தண்டனை கைதிகளில், 100 பேர் வரை சிறை வளாகத்தில் உள்ள Factory யில் பணியாற்றி வருகின்றனர். அவர்களது 8 மணி நேர உழைப்புக்கு கூலி ரூ.18 மட்டுமே!

இளையோர் சீர்திருத்த பள்ளி :-

மிகப்பெரிய மனித உரிமை மீறல் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைய குற்றவாளிகளை, மத்திய சிறையின் ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பதாகும்.சங்ககிரி இளையோர் சீர்திருத்தப் பள்ளி கட்டிடம் இடிந்து விட்டது என்ற பெயரால் பல மாதங்களாக, 50 க்கும் மேற்பட்ட இளையோர் எவ்வித நடமாடும் சுதந்திரமும் இல்லாமல், ஒரு தளத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். HSC அதி பாதுகாப்பு செல் போல அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். காரணங்கள் எதுவாக இருப்பினும், இது தவறானது. அவர்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

8 வழி சாலை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் இவை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்னும் பல செய்திகள் உள்ளன. வேறொரு தருணத்தில் பார்ப்போம். சிறைவாசம் பெற்ற 44 பேர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் ஆவார். 80 வயது தாண்டிய தோழர்களும் இருந்தனர். அவர்களது உணர்வு, உறுதி மதிக்கத்தக்கதாகும்.

சிறைவாசம் பற்றி சிறிதளவும் கவலைப்படாத இடதுசாரி பட்டாளம், எண்ணிக்கையில் அதிகமான மக்களை திரட்ட உறுதி பூண்டது. நாங்கள் சிறையிலிருந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் “விடுதலை செய்” எனத் தோழர்கள் போராடிய செய்தியும், நான்காம் நாள் சிறைவாசலில் தந்த உற்சாகமான வரவேற்பும் கம்யூனிஸ்ட் போராட்டஉறுதியை உயர்த்தியது!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

ஆலை ‘மூடப்பட்ட‘ பின்னரும் ஸ்டெர்லைட் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையும் அரசு நிர்வாகமும்!

சி. மதிவாணன்

சி. மதிவாணன்

அரசியல் முன்னணிகள் குறிப்பாக, புரட்சிகர அமைப்புகளின் முன்னணிகள் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் கூட காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கெல்லாம் பின்னே உள்ளது தமிழக அரசின் கை மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டின் கையும் கூட. ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எடுபிடியாக இருந்த போலீஸ் ஆலை மூடல் அறிவிப்பு வந்த பின்னர் கூட ஸ்டெர்லைட்டின் கையால் இயக்கப்படுகிறது.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இவரைக் காவல்துறை கைது செய்து எங்கோ கொண்டுசென்றுவிட்டது. கையில்லாத இவர் என்ன குற்றம் செய்தார்?

அதனைப் புரிந்துகொள்ள ஸ்டெர்லைட் தொழிலாளர்களை எவ்வாறு கையாண்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இவர் ஸ்டெர்லைட் தொழிலாளி.

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். 2500 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இந்த 2500 பேருக்கும் எந்த சட்ட உரிமையும் கிடையாது. ESI போன்ற வசதிகள் கிடையாது. ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, ஆலைக்குள் ஏற்பட்ட விபத்தில் படத்தில் உள்ள கார்த்திபனின் கை போனது. ஏறக்குறைய 75% உற்பத்தித் திறன் போனது. ESI வசதி இருந்திருந்தால் அவர் சாகும் வரை அவர் பெற்ற சம்பளத்தின் கணிசமான பகுதி மாதம் தோறும் கிடைத்திருக்கும். ஆனால், அவர் ஒப்பந்த தொழிலாளி. எனவே, அவருக்கான ESI இல்லை. கடந்த மாதம் வரை ஸ்டெர்லைட்டை அணுகி தனது வாழ்நாள் வரையிலான இழப்புக்கு நஷ்ட்ட ஈடு கேட்டிருக்கிறார். காற்றில் விஷத்தைக் கலக்கும் கிராதகர்களுக்கு இதயம் இருக்குமா என்ன?

வேறுவழியின்றி ஆலை வாயில் அருகே அவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுதான் அவர் நடத்திய ஒரே போராட்டம். ஆலையை மூட வேண்டும் என்றல்ல, சட்டப்பூர்வமான தன் உரிமைக்காக, ESI கட்டாத ஆலை முதலாளி விபத்துக்குள்ளான தொழிலாளியின் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்ற உரிமைக்காகப் போராடினார்… தன்னை எரித்துக்கொள்ள முயன்றார்.

கார்த்திபனுக்கு வயதான தாயும் மனைவியும் பிள்ளையும் இருக்கிறார்கள். தன்னை மட்டுமல்ல அவர்களையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்த கார்த்திபனின் கை போன பின்பு யார் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள்?

இன்று காலை கார்த்திபன் வீட்டுக்கு போலீஸ் வந்தது. அவரை அழைத்துச் சென்றது. கார்த்திபன் உடல் பலவீனமானவர். அங்கக் குறைபாட்டுக்கு ஆளானவர். தனக்கு நேர்ந்த கதியால் சித்தம் பேதலித்தவர். அதனால் என்ன? ஸ்டெர்லைட் போட்ட எலும்புத் துண்டு அல்லவா காவல்துறைக்கு முக்கியம்?

கார்த்திபனின் தாய் காவல்துறையின் காலில் விழுந்து பார்த்தார். கையெடுத்துக் கும்பிட்டார். தன்னைக் காப்பாற்ற வேண்டிய மகனைக் காப்பாற்றும் நிலையில் இருந்த அந்தத் தாய் அழுது புலம்பியும், எந்தப் பயனும் இல்லை.

காவல்துறைக்குக் கடமைதானே முக்கியம்?

இப்போது, கார்த்திபன் கதி என்ன? (பலருடைய விசாரிப்பின் பேரில் தற்போது கார்த்திபன் விடுவிக்கப்பட்டதாக சொல்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன்) சட்டப்பூர்வமற்ற எத்தனையோ கைதுகளில் இதுவும் ஒன்று.

தூத்துக்குடி காவல்துறை ஸ்டெர்லைட் கைக்கூலியாகவும் இருக்கிறது.

புரட்சியாளர்கள் விடுதலைக்குக் குரல் கொடுப்பது போல, கார்த்திபன் போன்ற தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

2500 தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை நடத்திய ஸ்டெர்லைட்டுக்குத் துணைபோன ஆலை ஆய்வாளர் அலுவலகம் முதல் தொழிலாளர் நல அலுவலர்கள் அனைவரையும் விசாரணைக்கு ஆட்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட்டிடம் கையூட்டு பெறும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் கலங்கடிக்க வேண்டும். இவற்றையெல்லாம் யார் செய்வார்கள்?

சி. மதிவாணன், அரசியல் செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதிமுக அரசும் இதே கருத்தை கூறிவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ரஜினியை பாராட்டி கட்டுரை எழுதியுள்ளது.
காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான்.  பிரச்சினைக்கு ராஜினாமா முடிவல்ல என ரஜினி கூறியது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம். வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யார் நீங்க? #நான்தான்பாரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை  நேரில் சந்தித்தார். சிகிச்சை பெற்றவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்தார் ரஜினி. அப்போது, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சந்தோஷ் என்ற இளைஞர், ‘யார் நீங்க?’ என ரஜினியைப் பார்த்து கேட்டார். ‘ நான்தான்பா ரஜினிகாந்த்’ என பதிலளித்தார் அவர். நூறு நாட்களாக நடந்த போராட்டத்தின் போது வராத ரஜினி, இப்போது எதற்காக வருகிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்ததுடன்,  என்ற ஹேஷ் டேக்கில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அனைத்து கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டத்தில் பங்கெடுக்க வைத்த சந்தோஷ், அமைச்சர் செல்லூர் ராஜு மருத்துவமனைக்கு வந்திருந்தபோதும் இதேபோல் கேட்டது ஊடகங்களில் வெளியானது. அதனால், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரிக்கச் சென்றபோது ஊடகங்களுக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

பேரா. அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து கள ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள சுருக்கமான விவரங்கள்…

a marx
அ. மார்க்ஸ் தன் குழுவினருடன்
 1. துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIRl (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதெல்லாம் மேல்மட்டத்தில் முன்கூடித் திட்டமிட்ட ஒரு செயல் என நாங்கள் கருதுகிறோம்.

 2. கார்பொரேட் தொழில் முயற்சிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் ஏற்படக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அப்போது பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைதான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. தேவையானால் படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

 3. அந்த வகையிலேயே மே 22 அன்று காலையில் கூடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போலக் கையாண்டுள்ளனர்.

 4. போலீஸ் கையேட்டிலுள்ள துப்பாக்கிப் பிரயோகத்திற்கான முன்னெச்சரிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இப்படி 13 பேர்கள் இன்று கொல்லப்பட்டுள்ளனர். சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 5. மக்கள் மத்தியில் சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றில் இவர்களின் பங்கு உள்ளது என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது..

 6. மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் சென்றிருக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன் மனைவி தனது 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தையுடன் அங்கு வந்துள்ளார்.

 7. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்” என்கிற அமைப்பின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். தீவிரவாதிகள் கூட்டத்தில் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 8. திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள மகள் வீட்டிற்கு மீன் விற்றுக்கொண்டிருந்த ஜான்சி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று 5 பேர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளபோது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். இப்படியான போலீஸ் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை நிறைவேற்றப்பட வேண்டும்.

 1. இரண்டு நாள் முன்னர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கென தனியாகவும் அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு முயற்சி. எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றை எதிர்த்து ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 2. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு ரூ. கோடி  இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும். காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

11.எல்லாவற்றிற்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூடப்பட வேண்டும்,

 1. தூத்துக்குடி அரசுமருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.

மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO)

பேரா.அ.மார்க்ஸ், ரெனி அய்லின், மூத்த வழக்குரிஞர் ப.பா.மோகன், வழக்குரைஞர் என்.எம்.ஷாஜகான், வழக்குரைஞர் சென்னியப்பன், வழக்குரைஞர் உதயணன், நெல்லை அஹமது நவவி, கடலூர் இரா.பாபு, வழ. என்.கே நஜ்முதீன், தூத்துக்குடி அப்துல்காதர், வழ. மதுரை அப்துல் காதர், வழ. பி.பொன்ராஜ்
தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு, தமிழ் மாநில அமைப்பு, (National Confederation of Human Rights Organisations (NCHRO), H.O: New Delhi) (தொடர்புக்கு: என்.எம்.ஷாஜகான், 18, ஏ, சுங்கம் பள்ளிவாசல் தெரு, மதுரை-01 09443977943)

பிரின்ஸ்டனின் எதிர்காலம்..?

சென்னியப்பன்

பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு கிளம்பினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்த போது வலது முழங்காலுக்கு மேல் எங்கிருந்தோ துப்பாக்கி குண்டு ஒன்று துளைக்க மயங்கிச் சரிகிறார். அருகிலிருந்தவர் ஒருவர் உதவிட அருகே இருந்த மண்டபத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முழுங்காலுக்குக் கீழே காலினை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அகற்றிவிட்டார்கள். தங்கள் ஒரே மகனின் நிலை கண்டு அவரது தாயின் கதறல் எங்களின் மனதில் ஏற்படுத்திய வலியை என்னவென்று சொல்வது…

சென்னியப்பன், வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.

மனம்பிறழ்ந்த தமிழக காவல் துறை: ப. ஜெயசீலன்

ப. ஜெயசீலன்

2011 ஆகஸ்ட் 4, லண்டன்…29 வயது கருப்பின இளைஞர் லண்டன் போலீசால் சுட்டு கொல்லப்பட்டார். நமது போலீஸ் வழக்கமாக சொல்லும் அதே காரணத்தையே லண்டன் போலீசும் சொன்னது. அந்த இளைஞர் எங்களை நோக்கி சுட்டார். நாங்கள் தற்காப்புக்காக அவரை சுட்டு கொல்ல வேண்டியதாகிவிட்டது என்று அறிக்கை வெளியிட்டது. ஏற்கனவே தங்கள் மீதான போலீஸ் அடக்குமுறைகளால் மிகுந்த ஆவேசத்தில் இருந்த இங்கிலாந்து வாழ் கறுப்பினத்தவர்கள் மிகுந்த ஆவேசம் கொண்டு போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த போராட்டம் ஒரு பெரிய கலவரமாக வெடித்தது. ஆகஸ்ட் 6 முதல் 11 முதல் நடந்த அந்த கலவரம் இங்கிலாந்து வரலாற்றில் அதற்க்கு முன் கண்டிராதது.

ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் இங்கிலாந்து முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட 20 கோடி பவுண்ட்(ரூபாய் அல்ல) மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களாலும், கலவர நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் 5 பேர் பலியானார்கள். அப்பொழுது டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தார். உலகின் அதிநவீன சிறப்பு பயிற்சிபெற்ற, அதிநவீன தொழிநுட்ப வசதிகளை பெற்ற, மிக நவீனமான ராணுவத்தையும், போலீஸ் துறையையும் கையில் வைத்திருந்த அவர் நினைத்திருந்தால் கலவரத்தை 1 மணிநேரத்தில் அடக்கி ஒடுக்கியிருக்க முடியும். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெரும்பாலான ராணுவ வீரர்கள் கண்ணிலேயே பார்த்திராத துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் பயன்பாட்டில் வைத்திருக்கும் உலகின் தலைசிறந்த காவல் துறையில் ஒன்றாக கருதப்படும் லண்டன் காவல் துறையின் கமிஷனர் நினைத்திருந்தால் அந்த கலவரத்தை நசுக்கியிருக்க முடியும். ஆனால் இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து காவல் துறையும் மிக மிக கவனமாகவும், நிதானமாகவும் இந்த கலவரத்தை அனுகியது. கலவரம் செய்பவர்களின் கோபத்தில் உள்ள தார்மீக நியாயத்தையும், அதில் ஈடுபடுபவர்கள் தங்களது சொந்த நாட்டு மக்கள் என்பதை மனதில் கொண்டும், தாங்கள் இழைக்கும் சிறு தவறு கூட தங்கள் சமூகத்தில் நிரந்தர பிளவையும், வெறுப்பையும் விதைத்துவிடும் என்னும் கவலையிலும் பொலிஸாலோ, ராணுவத்தாலோ இன்னும் ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது என்று மிக உறுதியாக நின்று அந்த கலவரத்தை அடக்கினார்கள்.

சூரியன் மறையாத நாட்டின் அரசகுடும்பமும், இங்கிலாந்து பிரதமரின் வீடும், அந்த நாட்டின் ராணுவ தலைமையகமும் இருக்கும் லண்டன் மாநகரத்தின் போலீஸ் கமிஷனரின் அதிகாரத்தோடும், வலிமையோடும் ஒப்பிட்டால் தூத்துக்குடி asp செல்வ நாகரத்தினமோ, பரமக்குடியில் 7 பேரை சுட்டு கொன்ற செந்தில்வேலனோ லண்டன் கமிஷனரின் குசுவுக்கு கூட சமமான ஆள் கிடையாது என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் லண்டன் போலீஸ் காட்டிய நிதானத்தையோ, பொறுமையையோ கொஞ்சமும் கடைபிடிக்காமல் தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை அடக்குவதாய் கூறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளார்கள் என்பது பதைபதைக்க வைக்கிறது. நாம் உண்மையில் அரசியல் சாசனத்தின் படி நடக்கும் ஒரு ஜனநாயக அமைப்பில்தான் இருக்கிறோமா என்பது கேள்விக்குறியாகிறது. உண்மையிலேயே நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள்தானா என்ற கேள்வியும் எழுகிறது. இவையெல்லாவற்றையும் விட தமிழக காவல்துறையினரின் இருப்பை பற்றியும், ஒரு அமைப்பாக அந்த அமைப்பின் மனோ நலன் பற்றியும் எனக்கு தீவிரமான கவலைகள் எழுகின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற அதே வாரத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் பங்கேற்ற Women’s March on Washington பெண்களின் உரிமைகளை கோரி நடைபெற்றது. உலகின் இணையற்ற வல்லரசின் அதிபர் வசிக்கும் ஒரு நகரில் 5 லட்சம் பேர் பேரணி செல்லவும், ஆர்பாட்டம் நடத்தவும் வாஷிங்ட்ன் காவல்துறை அனுமதி அளித்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. இது தொடர்பாக பேட்டியளித்த வாஷிங்டன் கமிஷனர் இதை தங்களது நாட்டின் ஜனநாயக பெருமையாக பார்ப்பதாக பேட்டியளித்தார். அந்த வாஷிங்டன் கமிஷனரின் அதிகாரத்திற்கும் பலத்திற்கும் முன்பு மயிரளவு கூட பெறாத கமிஷனர் ஜார்ஜ் ஜல்லிக்கட்டு போராட்டத்தை காவல்துறையை ஏவி ரவுடித்தனம் செய்து ஒடுக்கினார்.

நமது காவல்துறைக்கு என்னதான் பிரச்சனை? ஏன் இப்படி அதன் அதிகாரிகள் பொறுக்கித்தனம் செய்வதை policing என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்? அவிழ்த்துவிடப்பட்ட வேட்டைநாய்களின் குணநலன்களை அவர்கள் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஒரு அமைப்பாக நமது காவல்துறை ஏன் மனப்பிறழ்வு நோயிற்கு ஆட்பட்டிருக்கிறது? ஏன் அவர்களுக்கு சில்லறைத்தனமான அடக்குமுறை சாகசங்களில் ஆர்வம் ஏற்படுகிறது? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சீருடை கூட அணியாமல், செருப்பில்லாத வெறுங்காலுடன் வண்டி மீது ஏறிநின்று தன்போக்கில் கூட்டத்தை பார்த்து சுடும் போலீஸின் முகத்திலிருக்கும் தீர்க்கமும், தெளிவும், கிளர்ச்சியும் மனதை உறையவைக்கிறது. இவர்கள்தான் நமது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயுத பயிற்சி பெற்று நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது மிகுந்த மனஉளைச்சல் ஏற்படுகிறது.

செய்திகளில் காவலர்கள் மனஉளைச்சலின் காரணமாக சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக படித்திருப்பீர்கள். அப்பொழுதெல்லாம் எனக்கு எழுந்த கேள்வி ஏன் அவர்களுக்கு தன்னுடைய உயர் அதிகாரிகளை சுட தோன்றவில்லை என்று? இதற்கான விடையில்தான் தமிழக காவல்துறையின் மனப்பிறழ்வுக்கான விடை உள்ளது. ராணுவ வீரர்கள் தங்களது உயர் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற செய்திகளை படித்திருக்கிறோம். எங்காவது காவலர் உயர் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற செய்தியை படித்திருக்கிறோமா? infact தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வது இந்திய அளவில் அதிகம் என்று படித்திருக்கிறேன். தமிழக காவல்துறையினர் மிக திறமையாக வேட்டை நாயும், செல்ல நாயும் சேர்ந்த கலவையாக காவலர்களை உருவாக்குகிறார்கள். உலக அளவில் policing என்பதை குறித்தான கருத்தாக்கங்கள் மாறிக்கொண்டிருப்பதை பற்றியோ, policing என்பதின் நவீன செயல்பாடு/பங்களிப்பு பற்றியோ நமது காவல்துறைக்கு மயிரளவு கூட கவலையில்லை. காவல்துறையினரின் சுயமரியாதையை சிதைத்து அவர்களை ஒரு பூச்சை போல உணரவைத்து பிறகு செல்ல நாய் மற்றும் வேட்டை நாய் இரண்டும் கலந்த பயிற்சியை கொடுத்து வெளியில் விடுகிறார்கள். அதனால்தான் மிகுந்த மனஉளைச்சலில் கூட தனது மன உளைச்சலுக்கு காரணமான அதிகாரியின் மீது கோபம் கொள்ளாமல் அவர்களை தண்டிக்க முனையாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுதெல்லாம் செல்ல நாயை அழைத்து பந்தை தூக்கி தூர எறிந்தால் எப்படி கண்முன் தெரியாமல் ஓடி அந்த பந்தை எடுத்துவந்து தனது எஜமானனிடம் கொடுக்கிறதோ, எப்பொழுதெல்லாம் முயல் வலைக்குள் இருந்து வெளிப்பட்ட உடன் வேட்டை நாயை அவிழ்த்துவிட்டால் எப்படி அது மூர்க்கமாக ஓடி முயலை கவ்வி எஜமானிடம் கொடுக்கிறதோ அதே போன்ற பாவத்தில் நமது காவல்துறையினரும் மிக நேர்த்தியாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்தான் அவர்களுக்கான stress buster. தங்களை தங்களது உயர் அதிகாரிகள் நாய்களை விட கேவலமாக நடத்தி, உழைப்பு சுரண்டல் செய்து, ஓய்வில்லாமல் வைத்திருக்கும் நிலையில் தூத்துக்குடி போன்ற சம்பவங்கள்தான் அவர்களுக்கு அவர்களின் வெறிநாய் மனநிலையை தீர்த்துக்கொள்ள உதவுகிறது. அந்த வெறி நாய் மனநிலை இல்லாத ஒருவரால் தான் யார் என்னவென்று தெரியாத ஒருவரை, தனது சொந்த மாநில, மொழி மக்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் பொறுக்கித்தனமாக சுட வைக்கிறது.

இதனோடு தன்னை நவீன இயக்குனராய் நிறுவிக்கொண்டுள்ள கவுதம் போன்றவர்களும், சமூக அரசியல் பார்வை கிஞ்சித்தும் அற்ற ஹரி போன்ற இயக்குனர்களும் போலீஸ் என்றால் இரண்டு ஆண்குறிகளோடு பிறந்து வந்திருக்கும் காவல் தெய்வங்கள் என்னும் ரீதியில் எடுத்த பொறுக்கித்தனமான, மடத்தனமான, பிற்போக்குத்தனமான, காரி முகத்தில் உமிழ கூடிய அளவிலான கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படங்களும் போலீசாரின் மனநிலையில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். இது போன்ற படங்களின் நாயகர்களை போல காப்பு போட்டு கொண்டு, கையை தூக்கினால் அக்குளில் சட்டை கிழிந்துவிடும் அளவில் இறுக்கமாக சட்டை போட்டுகொண்டு கோமாளிகளை போல உலவும் செல்வ நாகரத்தினம் போன்ற இளம் தலைமுறை ips அதிகாரிகளிடம் இவர்களின் படங்களின் தாக்கம் தெரிகிறது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரின் மீதான தொடர் தாக்குதல்கள் விரக்தி அடைந்த Micah Xavier Johnson என்ற கருப்பின இளைஞர் 2016 ஜூலை 7, டல்லாஸ் நகரில் போலீசார் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 போலீசார் கொல்லப்பட்டார்கள். 9 போலீசார் படுகாயமடைந்தார்கள். இதில் கவனிக்க படவேண்டியது இறந்துபோன யாரும் இனவெறியர்களோ அல்லது கருப்பின விராதோ செயல்களில் ஈடுபட்டவர்களோ அல்ல. அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஒரே காரணம் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது மட்டும்தான். அதாவது இனவெறி கொண்ட போலீசாரின் செயல்பாடுகளின் விலையை இவர்கள் கொடுத்தார்கள். தமிழகத்தில் பொதுமக்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு துறை உண்டென்றால் அது நிச்சயம் காவல்துறைதான். அவர்களின் தொடர் ஜனநாயக விரோத, மக்கள் விரோத வன்முறை செயல்பாடுகளால் மீட்டெடுக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். டல்லாஸ் நகருக்கும் தமிழகத்திற்கும் ரொம்ப தூரம்தான். ஆனால் நவீன உலகம் ஒரு சின்ன கிராமம்.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு!

மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,

‘ நாட்டின் அரசியல் அதிகாரம் நிதி மூலதன சக்திகளின் ஆதிக்கத்திற்கு சென்றுள்ளது.

நிதி மூலதன சக்திகள் வலதுசாரி, மதவாத சக்திகளை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.

திரு நரேந்திர மோடியின் பாஜக ஆட்சி வரும் 22.05.2018 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் நுழைகிறது.

நாட்டின் நெடிய விடுதலைப் போராட்ட அனுபவத்தில் உருவானதும், அரசியல் அமைப்பு சட்டத்தின் உயிரான சாரமாகவும், ஒட்டு மொத்த மக்கள் வாழ்க்கை முறையாகவும் விளங்கி வரும் மதச்சார்பற்ற கொள்கை தாக்கி அழிக்கப்படுகிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டு, அதனைப் பலப்படுத்தி வந்த பண்புகள் தகர்க்கப்பட்டு, வெறுப்பு மற்றும் பகை அரசியல் வளர்க்கப் படுகிறது.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என சகல பகுதி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

பன்னாட்டு குழும நிறுவனங்களின் கூட்டாளியாகி, உள்நாட்டு தொழில்கள் முடக்கப்படுகின்றன. அவைகள் மூச்சு திணறி செத்ததும் பன்னாட்டு நிறுவனக் கழுகளால் தூக்கி செல்லப்படுகின்றன.

மாநில அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுவதும், பறிக்கப்படுவதும் தீவிரம் ஆகியுள்ளன.

மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, மக்கள் வாழ்க்கை துயரங்கள்,அறிவியல் கருத்துகள், வரலாற்று உண்மைகளை எழுதுவோர், கருத்துதெரிவிப்போர் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

தலித்துகள், சிறுபான்மை மக்கள் பிரிவினர் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மதவெறி தாக்குதலாகியுள்ளன. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் ‘சுதந்திரமாக’ உலவி வருகின்றனர்.

வரும் 23.05 2018 ஆம் தேதி தமிழக மக்கள் மேடை சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மோடி அரசின் முகத்திரை கிழித்து, அதனை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட உறுதி ஏற்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரட்டி பங்கேற்க வேண்டுகிறோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அனைத்து மக்களுக்குமான அரசு, அனைத்து மக்களுக்குமான நீதி என அனைத்து மக்களின் நலன்களுக்கான சாதனமாக ஒரு முதலாளித்துவ அரசு இயந்திரம் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அதன் வர்க்க குணாம்சத்தை அது வெளிப்படுத்தியே தீரவேண்டும்!

நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற ஜனநாயகவாதமானது, முழுவதுமான ஒரு முதலாளித்துவ நலன்களுக்கான அரசு என்பதையும், முதலாளித்துவ நலன்களைத்தான் நாடாளுமன்ற வாதம் வெளிப்படுத்துகிறது என்பதையும் வர்க்கப் போராட்டத்தின் வழியேதான் மக்கள் உணர்ந்துகொள்கின்றனர்.

சமூகத்தின் பணமுள்ள வர்க்கத்திற்கு மட்டுமே இனி மருத்துவமும், பொறியியல் படிப்பும் என இந்த அரசு நீட் தேர்வு நடைமுறையை கொண்டு வருகிறது. கல்வி உரிமை மறுக்கப்படுகிற ஏழை எளிய மக்கள்,மாணவர்கள் நீட் நடைமுறைக்கு எதிராக வீதியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது… போராடுபவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

உள்ளடக்கத்தில் நடைபெறுகிற மாணவர் போராட்டமானது, ஒரு வர்க்கப் போராட்டம். நாடாளுமன்ற ஜனநாயகவாத அரசியலை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளோ, நிலை எடுக்க இயலாமல் போராட்டத்தை வேடிக்கை பார்கின்றன. இதை வாய்ப்பாக கொண்டு ஆட்சியை அகற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுக்கிறதே அன்றி, வர்க்கப் போராட்டத்தின் மெய்யான கோரிக்கையின் பக்கம் நிற்ப்பதில்லை, வாய்திறப்பதில்லை.

மக்களின் வர்க்கப் போராட்ட காலங்களில், வாய் வீச்சு வீரர்கள் அம்பலப்பட்டு போகின்றனர். ஆளும்வர்க்க வடிவத்தில் கரைந்து போகிறவர்கள் இந்த வர்க்கப் போராட்ட காலங்களில் சந்தர்ப்பவாத அரசியலை தேர்ந்துகொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்கின்றனர்.

வர்க்கப் போராட்ட காலங்களின் போது மட்டுமே, முதலாளித்துவ நாடாளுமன்ற வாதத்தின் உண்மை வடிவத்தை மக்கள் கண்டுகொள்கின்றனர். அதன் பிரதிநிதிக் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலை புரிந்துகொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் தான் மக்கள்,முதலாளித்துவ ஜனநாயகம் மீதான தப்பெண்ணங்களை களைகின்றனர்.

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

மக்களுக்காகத் தான் அரசு இயந்திரமே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல என்ற முழக்கங்கள் ஓங்கட்டும்..!

அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

அனிதாவுக்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்ப் படைப்பாளிகள் முழக்கம்!

சமகால அரசியல் பொருளியல் பண்பாட்டுச் சூழலை அசைக்கும் நிகழ்வுகள் யாதொன்றுக்கும் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்திருக்கின்றனர்.

அவ்வகையில் சமீபத்தில் நிகழ்ந்த அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.மதிப்பெண் தகுதியிருந்தும் லட்சிய தாகம் கொண்ட அனிதாவின் கனவை நீட் எனும் பூதம் சிதைத்திருக்கிறது. இம் மரணம் விரக்தியாலோ, கையறு நிலையிலோ, தோல்வி மனப்பான்மையாலோ நிகழ்ந்தது அன்று. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் நிகழ்ந்தது இம் மரணம்.

அனிதாவின் மரணம் ஒரு தற்கொலையாகக் கருதப்படவேண்டியது அல்ல . அது நமது கல்விக் கொள்கைகளின் மீது எழுதப்பட்ட ஒருவகையான விமர்சனம். ஒரு மாணவி நிகழ்த்திய கல்வி உரிமைக்கான யுத்தம்.

இந்திய அளவில் இந்நிகழ்வு முக்கியத்துவம் மிகுந்ததாக அறிவுஜீவிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அனிதாவின் நினைவை ஏந்திப்பிடிப்பதென்பது எளியோருக்கான கல்வி உரிமையை, சமூகநீதியைப் பாதுகாக்கும் இயக்கமாக அமையும்.

அனிதா என்பவள் இன்று இந்தியப் பெருந்தேசியம்,ஏகாதிபத்தியம்,உலக வர்த்தகக் கழகம் போன்றவை குறித்து உரையாடும் அடையாளமாக மாறியிருக்கிறாள்.அரசு பள்ளிகள் அரசு மருத்துவ மனைகள் இவற்றின் அழிவிற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நமக்கு அடையாளம் காட்டிச்சென்றிருக்கிறாள்.

அரச பயங்கரவாதத்திற்கு பலியான கண்ணகி நீதி கேட்ட அதே மதுரை மண்ணில் நவீன அரச பயங்கரவாதத்திற்கு களப்பலியாகியிருக்கும் அனிதாவுக்கு நீதி கேட்க தமிழ்ப் படைப்பாளிகள்,கலைஞர்கள் ஒருங்கிணைகிறோம்.

அனிதாவை ஒரு மாணவி என்பதிலிருந்து உயர்த்தி, ஒரு போராளியாக தமிழ்ச் சமூகம் அவதானிக்கிற நிலையில் இந்த மரணத்தை ஓர் அரசியல் உரையாடலாக மாற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரை மற்றும் நாடகக் கலைஞர்கள் எனப் பரந்துபட்ட தளத்திலிருந்து நண்பர்களை திறந்த மனதோடு அழைக்கிறோம்.

மிகக்குறுகிய காலமென்பதாலும், எது ஒன்றுக்கும் ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது என்பதாலும் இங்கு சிலரை ஒருங்கிணைப்பாளர்களாக அடையாளம் கண்டுள்ளோம். மற்றபடி இந்நிகழ்வில் இணையும் ஒவ்வொரு படைப்பாளியின் பங்கும் மகத்தானதே.

வாருங்கள் செப்டம்பர் 10 இல் மதுரையில் இணைவோம்.நீதி கேட்போம்

பி.கு : செப்டம்பர்10 ஞாயிற்றுக் கிழமை பின்மதியம்.4:00 மணிக்குத் துவங்கி முன்னிரவு 9.00 மணி வரை மதுரையில் இந் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இடம், விரைவில் அறிவிக்கப்படும்.

அற்பப் புல்லென நினைத்தாலும் அடி மண்ணில் சல்லி வேர்களாக அவை ஒன்றுடன் ஒன்று காதலாய் கைகோர்த்திருப்பதை அறியா அரியாசனமே!!! மாற்றங்கள் எப்போதும் மக்களுக்கானதே!!! மறவாதே!!!

அனைத்துப்படைப்பாளிகள் கலைஞர்களின் சுதந்திரமான எதிர்க்கலைச் சங்கமத்தில் இணைந்து சமூக நீதியை முன்னெடுப்போம்.

ஒருங்கிணைப்புக்குழு
——-

சுகிர்தராணி
ஸ்ரீரசா
கரிகாலன்
செல்மா பிரியதர்ஷன்
அசதா
யவனிகா

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி

திருமுருகன் காந்தியும் மகளும்

இந்தச் சந்திப்பில்
நீ எதைக் கடத்துகிறாய்
என் அன்பு நண்பனே
பிஞ்சு விரல்கள் பற்றிய
உன் விரல்கள் என்ன
சொல்கின்றன குழந்தையிடம்
அன்பின் தூரிகைகளாய்
மாறியிருக்கும் உங்கள் விரல்களில்
வழியும் உணர்வின் பெரும்பாதையில்
நாளையின் கணங்கள் நடக்கலாம்
சொல்லாமலேயே பாதியில் விடப்பட்ட
ஒருபுரட்சியின் காதையை மீண்டும்
சொல்வேன் என்னும் நம்பிக்கை
அந்தத் தீண்டலில் துளிர்விட்டிருக்கலாம்
ஒன்றும் கவலைப்படாதே
என்னும் சொல்லொன்று உனக்கு அந்த விரல்களிலிருந்து வந்திருக்கலாம்
ஒளியேற்றி வந்ததனால்
சிறையிருள் வாய்க்கப்பட்டவன்
நீ என்பதால்
சிறகுகள் தயாரிக்க. அக்கரங்கள்
ஒப்பிடலாம்
நீதியின் கரங்களில் விலங்கிடும் ஆட்சியாளர்கள்
அவள் விரல்களே எழுதுகோலானால்
என்ன செய்வார்கள்
நண்பனே
சிறைக்கொட்டடியின்
வெம்மை உன்னை உருக்கலாம்
ஆனால்
உருகி வடிந்த உலோகம்
உறைகையில்
கூராயுதமாகும் கணக்கிங்கே
புதிதாய் எழுதப்படட்டும்.

யாழன் ஆதி, கவிஞர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 5000 ம் வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தவும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அமல்படுத்தவும், தினஊதியம் ரூ 400 வழங்கிடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை உடன் அமைத்திட வலியுறுத்தியும், சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையம் தொடர்ந்து மேம்பட்ட முறையில் செயல்படவும், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ் ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், இயற்கை வளச் செல்வங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்துவதுடன், அரசு நிர்ணயித்த விலையில் மணல் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வலியுறுத்தியும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி இலவசமாக கிடைத்திடக் கோரியும், ஊழலை ஒழித்திட, மாநில அரசு லோக் ஆயுக்தா சட்டத்தையும், மத்திய அரசு லோக்பால் சட்டத்தையும் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடன் நடத்திடக் கோரியும், தமிழக மீனவர்கள் உடமைக்கும், தொழிலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.

தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையிலும், மாநில துணைச்செயலாளர் கே.சுப்பராயன் திருப்பூரிலும், மாநில துணைச் செலாளர் மு.வீரபாண்டியன் சிவகாசியிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி நெல்லையிலும், டி.எம்.மூர்த்தி திருவள்ளுரிலும், பி.சேதுராமன் மதுரையிலும், பி. பத்மாவதி திருச்சியிலும், என்.நஞ்சப்பன் தர்மபுரியிலும், ந.பெரியசாமி கரூரிலும் போராட்டத்திற்கு தலைமை வகித்து கைதாகினர்.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கைதாகியுள்ளனர்.

எண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் வள வேட்டைகளை நடத்தி வருகின்றன.குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, அங்கோலா நாடுகளிலும் கொலம்பியா, ஈராக் போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் வள வேட்டை அதிகமான அளவில் நடந்து வருகின்றன. எண்ணெய் வள சூறையாடலுக்கு உள்ளாகிற நாடுகளில் இந்நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்தன. அதில் முக்கியமான போராட்டம்தான் நைஜீரியா நாட்டில் ஒகோனி இன மக்கள் மேற்கொண்ட வீரமிக்க போராட்டமாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றுதான் நைஜீரியா. இங்குள்ள நைஜர் ஆற்றுப் படுகையில் சுமார் ஐந்து லட்சம் ஒகோனி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எல்லாம் நன்றாகதான் இருந்தது, அந்த பாகாசுர எண்ணெய் நிறுவனம் இங்கு வரும்வரை. இங்கிலாந்து நாட்டின் சேல் நிறுவனம், நைஜர் ஆற்றுப்படுகையில் எண்ணெய் எடுக்க ராட்ச கரங்களோடு ஒகோனியர்கள் வசிக்கிற பகுதியில் நுழைந்தது. இந்நிறுவனத்திற்கு ஆதரவாக நைஜீரிய நாட்டு அரசோ, இராணுவத்திலேயே, சேல் இராணுவப் படைப்பிரிவை உருவாக்கி இந்நிறுவனத்திற்கு காவல் காத்தது.

இந்நிறுவனந்தில் எண்ணெய் சுரண்டல் நடவடிக்கையால் சுமார் 300 ஹெக்டர் வயல்களும், நன்னீர்க் குளங்களும், பழந்தரும் மரங்களும் அழிந்து போயின. சுமார் ஐயாயிரம் இடங்களில் 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் கொட்டியதால் புறச்சூழல் மோசமாக பாதிப்படைந்தது. சேல் நிறுவனத்தின் இந்த நாசகர விளைவுகளால் கிளிர்ந்தெழுந்த ஒகோனிய இன மக்கள் தோழர் கென் சரோவிவா தலைமையில் ஒகோன் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தை உருவாக்கி போராடினர். சேல் நிறுவனத்திற்கு எதிரான இந்த மக்கள் இயக்கத்தின் முதல் பேரணி 1993 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டு போராடினர்.

நிலைமை கட்டுபாட்டை மீறிச் செல்வதை உணர்ந்த நிறுவனம், ராணுவத்திற்கு நேரடியாக நிதியும் ஆயுதமும் வழங்கிப் போராட்டத்தை ஒடுக்கக் கோரியது. பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலி அரசோ, உடனடியாக இயக்கத்தின் தலைவர் கென் சரோவிவா உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பத்து பெயரை கைது செய்தது. பின்னர் போலிக் குற்றச்சாட்டு சுமத்தி, பத்து தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கி அவர்களை சிரைச் சேதம் செய்து கொன்றது.

கென் சரோவிவா

அரசின் இந்த கொடூர செயலால் அதிர்வும் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த மக்கள் அலை அலையாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்த தனமாக நைஜீரிய ராணுவம் சுட்டுக் கொன்றது. 1993 ஆம் ஆண்டின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் ஒகோனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் கிராமங்களும் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அடுத்த சில ஆண்டுகளில், போராடிய இரண்டாயிரம் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  நைஜர் ஆற்றுப்படுகையில் ஒகோனியர்களை வேட்டையடியாடுவதை போல தற்போது காவிரிப்படுகையில் எண்ணெய் எடுப்பிற்காக தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்… கதிராமங்கல ஒடுக்குமறை அதன் ஒரு பகுதிதான்….

சர்வதேச, உள்ளூர் முதலாளித்துவ நலன் சார்பில், காட்டுமிராண்டித்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகிற இவ்வழிவு பாணியிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர்களுக்கு எடுபிடியாக வேலை செய்கிற இவ்வரசின் கொள்கைகளையும் முற்றாக புறக்கணிப்போம்.

ஆளும்வர்க்க நலன்களுக்காக அடித்தள மக்களின் நலனை இயற்கை வளத்தை பறிக்கிற சக்திகளுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னகர்த்துவோம்.

நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

சென்னை மற்றும் கோவை AICCTU தொழிற்சங்க அலுவலகங்களில், பிரிக்கால் PRICOL தொழிலாளர்கள், AICCTU, AIARLA மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள் ஜூன் 19 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மரியாதைக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் சென்னையில் நேரிலும், கோவையில் (காணொளி மூலமும்)பிரிக்கால் தொழிலாளர்களின் நீதிக்கானப் போராட்டத்தை துவக்கி வைத்தார். “நீதிக்காகப் போராடும் தொழிலாளர்களோடு இருப்பேன்” என ஒருமைப்பாடு தெரிவித்தார். சிறை சென்று திரும்பிய & பழிவாங்கப்பட்ட பிரிக்கால் தொழிலாளர்கள், AICCTU, AIARLA தலைவர்கள் மற்றும் முன்னோடித் தோழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களைச் சந்தித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், பல்வேறு தொழிற்சங்க அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏனிந்த போராட்டம்?

வரலாறு காணாத வறட்சியால் கருகிய பயிர்களால், கடன் நெருக்கடிகளால், தஞ்சை டெல்டா மாவட்டங்கள் , பல்வேறு கிராமங்களிலும் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கடந்த ஏப்ரல் 25ல் தமிழகமே எழுச்சியுடன் அணிதிரண்டு கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என ஆதரவு வழங்கியது. பாஜக, அ.தி.மு.க தவிர அனைத்து எதிர்கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. அன்றைய வேலநிறுத்தத்தில் கோவை பிரிக்கால் தொழிற்சாலையைச் சார்ந்த 840 தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். அதற்காக தண்டனையாக எட்டு நாள் ஊதியத்தை பிடித்துள்ளது பிரிக்கால் நிர்வாகம்!

பிரிக்கால் நிர்வாகம் பொதுநலனுக்காக செயல்படுவதாக நடிக்கும் நிர்வாகமாகும். கடந்த காலத்தில் தொழிலாளர்களிடம் இருந்து நான்கு நாள் சம்பளம் பிடித்து பெரியநாயக்கன் பாளையம் மின்மயானம் அமைத்தார்கள். பிரிக்கால் காம்பவுண்டு நெடுக குடியிருந்த 120 சலவைத் தொழிலாளர்களிடம் “ஆஸ்பத்திரி அமைக்க இடம் வேண்டும்” எனச் சொல்லி, அவர்களை சாமிசெட்டிப் பாளையத்திற்கு வெளியே அனுப்பிவிட்டு அந்த இடத்தை வளைத்து காம்பவுண்டு அமைத்தார்கள். உடுமலையில் TERA AGRO FARM அமைப்பதாகச் சொல்லி பிரிக்கால் தொழிலாளர்களிடம் Shareகளை வாங்கிக் கொண்டு விவசாயிகள் நிலங்களை குறைந்த விலையில் அபகரித்து, Jain Irrigation நிறுவனத்திற்கு விற்றுவிட்டு Share வாங்கிய தொழிலாளர்கள் வாயில் மண்ணைப் போட்டார்கள்.

பிரிக்கால் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான திருமதி.வனிதா மோகன் மக்கள் நலனுக்காக, பொது நலனுக்காக செயல்படுவதாக காட்டிக் கொள்பவர் ஆவார். #சிறுதுளி என்ற NGO மூலமாக கோவையின் நீராதாரம் பாதுகாக்க பணியாற்றுபவராக தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கிறார். (“சிறு துளி” விவசாயிகள் விரோதமாக செயல்படுவதைப் பற்றி பிறகு பார்ப்போம்.)

பிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான இவரும், இவருடைய குடும்ப உறுப்பினர்களும் தான், தமிழக விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த காரணத்திற்காக, 840 தொழிலாளர்களின் 8 நாள் சம்பளத்தை தண்டனையாக வசூலித்து வயிற்றில் அடித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

தமிழகத்தில்  ஈழத் தமிழர் பிரச்சினை முதல் காவிரிப் பிரச்சினை மற்றும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் வரை மாநில அரசாங்கமே பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளது. பிரிக்கால் நிர்வாகம் எவ்வளவு மோசமான #விவசாயிகள்_விரோத எண்ணம் கொண்டதாக இருந்தால், ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்த தொழிலாளர்களிடம் எட்டு நாள் சம்பளம் பிடிக்கும்?

முன்கூட்டியே அறிவிப்பு /Notice தராமல் வேலை நிறுத்தம் செய்தால் தான் ID Act படி சட்டவிரோதமாகும். அச் சட்டத்தின் படி சம்பளம் பிடிக்கப்படலாம்!

ஆனால், பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்தியது சட்டப் பூர்வமான ஸ்ட்ரைக் ஆகும்.
தொழிற் தகராறு சட்டத்தின் (ID Act)படி, உரிய காலத்தில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதற்கும், ஈடு செய்து வேறொரு நாளில் வேலை செய்வதற்கு ஒப்புதல் அளித்தும், முன்கூட்டியே தகவல் அளித்து நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் ஆகும்.

ஆனாலும், 8 நாள் சம்பளத்தை பிரிக்கால் நிர்வாகம் பிடித்தது ஏன்? வேறு எதுவும் நோக்கம் இருக்கிறதா ? ஆம் இருக்கிறது!

தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி, அசுர வளர்ச்சியுடன் எழுந்துள்ள
பிரிக்கால் சாம்ராஜ்யம் !

கோவையில் 18 பேருடன் 1975 ல் கம்பெனி துவக்கி, 1978 ல் பிரிமீயர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் & கண்ட்ரோல் என்ற பெயரில் ஆண்டிற்கு 4 இலட்சம் மீட்டர் டேஷ் போர்டுகள் உற்பத்தியில் துவங்கி, 2016 ல் சுமார் 35 இலட்சம் போர்டுகள் உற்பத்தியை எட்டியுள்ளது பிரிக்கால் நிர்வாகம். இரு சக்கர வாகனங்கள் முதல் கார், பஸ், ட்ரக்குகளுக்குத் தேவையான எலக்ட்ரானிக் மீட்டர்கள், சென்சார்கள், வால்வுகள் என ஆட்டோ இண்ஸ்ட்ரூமென்ட்ஸ் உற்பத்தியில் 53% கட்டுப்படுத்துகிறது. PRICOL கம்பெனியானது டாடா,  மாருதி, ஹோண்டா, டொயாட்டா கிர்லாஸ்கர், டாஃபே என பல்வேறு ஆட்டோ மேஜர்களுக்கு கண்ட்ரோல் மீட்டர்கள் வழங்கும் முக்கியமான ஆட்டோ ஆன்சிலரியாகும்.

கோவை பிரிக்கால் கம்பெனி தொழிலாளர்கள் சம்பாதித்துக் கொடுத்த கொழுத்த பணம் /இலாபம் மூலமாகத்தான், பல மாநிலங்களில், வெளிநாடுகளில் பிரிக்கால் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரிக்கால் முதலாளிகள் Pricol Technologies, Pricol Software, Pricol Travels, Pricol Cargo, Pricol Properties, Pricol Academy, English Tools எனப் பல்வேறு துணை நிறுவனங்களையும் உருவாக்கி மாபெரும் பிரிக்கால் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துள்ளதுள்ளனர்.

சுமார் 1350 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 500 Staff எனப்படுகிற நிர்வாக ஊழியர்கள், 800 Apprentice எனப்படுகிற இரண்டாண்டு பயிற்சியாளர்கள் ஆகியோர் கோவை பிரிக்கால் கம்பெனிக்கு உழைத்துக் கொடுக்கும் பட்டாளம் ஆகும். தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் இரத்தம், வியர்வையை உறிஞ்சி தனது சாம்ராஜ்யத்தை இன்னமும் பெரிதாகக் கட்டமைக்க பேராசை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தனது விருப்பப்படி ஏராளமான உற்பத்தியை Production கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறது. தொழிலாளர்களை தனது விரல் அசைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறது.

பிரிக்கால் நிதிநிலை அறிக்கை பல்வேறு தகவல்களை சொல்கிறது :-

2015-2016 ல் விற்பனை 20% உயர்ந்துள்ளது.

2016 ல் மொத்த விற்பனை ரூ.1237.66 கோடியாகும். அதை ரூ.3000 கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு சம்பளமாக ரூ.158.50 கோடி செலவிடப்பட்டது. இது 2015 யைக் காட்டிலும் 2.10 % குறைந்துள்ளது. (இதிலும் தொழிலாளர்களுக்கு என்று செலவு செய்த சம்பளம் எவ்வளவு என பகுத்துப் பார்க்க வேண்டும்.)Admin நிர்வாக செலவோ 31 % கூடியுள்ளது; ரூ.46.29 கோடி செலவிடப்பட்டது. இதுவும் என்னவகையான செலவுகள் எனப் பகுத்துப் பார்க்க வேண்டும்.

மொத்த செலவு ரூ.1019.26 கோடியாகும். (இதில் பிரிக்கால் துணை நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்காகக் கொடுக்கப்படும் Payments யை சரிபார்க்க வேண்டும்.) எனினும், இலாபம் Operating Profit ரூ.114.47 கோடியாகும். இது 2015 யை ஒப்பிடும்போது 337 % உயர்ந்துள்ளது.

2016 நிதிநிலை அறிக்கை ஒரு உண்மையை சுட்டிக் காட்டுகிறது. Employee costயை / தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது நோக்கமாகும். பத்தாண்டு கால AICCTU சங்கத்தின் காரணமாக ஏற்கெனவே தொழிலாளர்களின் சம்பளம் 300 % வரையில் உயர்ந்துள்ளது.

இதற்காக தொழிலாளர்கள் கொடுத்த விலை என்னவென்றால்…
பொய் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை, 6 பேருக்கு பலமாத சிறைவாசம்,
83 சங்க முன்னணித் தொழிலாளர்கள் வேலை நீக்கம், தொழிலாளர்கள் வீடுகளில் துயர மரணங்கள்,வேலை இழப்பால் கடன் தொல்லைகள், வாழ்க்கை தரம் சரிதல்…
இன்னும் பல.

உழைப்புச் சுரண்டல் போரை நடத்தும் பிரிக்கால் முதலாளிகள்!

“கூலி குறைய இலாபம் உயரும் ” என்கிறது மார்க்சீயம்.

@ கட்டற்ற உற்பத்தி!
@ உற்பத்தியில் ஏகபோகம்!
@ உற்பத்தி திறனை பெரிதும் உயர்த்துவது!

இதுவே நிர்வாகத்தின் தாரக மந்திரம்!

தற்போதுள்ள உழைப்புச் சக்தி மூலமாகவே உற்பத்தி திறனைக் கூட்டுவது(அதிகமான Production எடுப்பது) வேண்டும்.

அதற்காக, 1)நிர்வாகத்திற்கு விசுவாசமான தொழிலாளர்களிடம் சக்கையாகப் பிழிந்து Production யை அதிகப்படுத்துவது வேண்டும்.

2)புதிது புதிதாக பயிற்சியாளர்களாக எடுக்கப்படும் Apprentice களை இரண்டாண்டு காலம் பிழிந்தெடுத்து வெளியேத் தள்ளிவிடுவது வேண்டும்.

3)பிரிக்கால் உற்பத்தியின் முதுகெலும்பான KMPTOS சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள சுமார் 1000 தொழிலாளர்களை மிரட்டி வைப்பது, வயிற்றில் அடிப்பது ஆகும்.

இதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழக அரசே தலையிடுக!

தொழிற் தகராறு சட்டம் ID Act 1947 ஆனது, சட்ட விரோத வேலை நிறுத்தத்தின் போது, அதாவது முன்கூட்டியே நோட்டீஸ் தரப்படாத ஸ்ட்ரைக்கிற்கு #எட்டு நாள் வரை தண்டனையாக சம்பளம் பிடிக்கலாம் என்கிறது. பிடித்துதான் ஆக வேண்டும் என்றும் சொல்லவில்லை.

ஏப்ரல் 25 ல் நடைபெற்றது, சட்டபூர்வமான வேலைநிறுத்தம் ஆகும்.முன்கூட்டியே நோட்டீஸ் தரப்பட்டு விட்டது.

எனவே தான் சொல்கிறோம்.

தமிழக அரசாங்கம் உடனே தலையிட வேண்டும்.

1)தொ.த.சட்டம் 1947 பிரிவு 10(1)ன் கீழ் சம்பளம் பிடித்த விவகாரத்தை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.

2)தொ.த.சட்டம் பிரிவு 10 B யின் படி, தொழில் அமைதி கருதி, தமிழக அரசாங்கம் பிரிக்கால் நிர்வாகம் பிடித்தம் செய்த தொகையை முன்பணமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பிரிக்கால் உட்பட, பல வழக்குகளில் இந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வர்க்கப் போராட்டத்தின் கதாநாயகர்கள் பாட்டாளி வர்க்கம்!

கோவை பிரிக்கால் துவங்கி ஹரியானா மாருதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போர்–

கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்குமான போர்!

தொழிலாளி வர்கத்துக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான போர்!

இந்தப் போர் பிரிக்கால் தொழிலாளர்களிடமிருந்து தொடங்கப்படவும் இல்லை; (அவர்களுக்கு முன்பேத் துவங்கிவிட்டது.)அவர்களோடு முடிந்துப் போவதும் இல்லை.

அவர்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மூலதனத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை இந்தப் போர் தொடரும். அதில் பிரிக்கால் தொழிலாளர்களோடு பல்வேறு ஆலைத் தொழிலாளர்களும் அணிவகுப்பார்கள்.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நினைவேந்தல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Arun Mo

3 hrs ·

தோழர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கடுமையான கண்டங்களை பதிவு செய்கிறேன். கையில் மெழுகு ஏந்தி போராடுபவர்கள் எல்லாம் குண்டர்களா, தமிழ்நாட்டில் உண்மையில் மத்திய அரசுதான் ஆட்சி செய்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சி. திருமுருகன் காந்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசியல் வேற்றுமை மறந்து இது போன்ற தருணங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

குண்டர்கள் கையில் குண்டர் சட்டம் கிடைத்தால் இப்படித்தான் திருமுருகன் காந்தி என்ன ? மகாத்மா காந்தியே குண்டராக வேண்டிய நிலை தான் ஏற்படும்.

நீங்கள் திருமுருகன்காந்தியோடு முரண்படலாம். உங்கள் கடுமையான விமரசனத்திற்கும் எதிர்ப்பிற்கும் கூட அவரும் மே17 ஆளாகலாம். அதுவல்ல தற்போதைய விடயம். அரசியல் போராட்டங்களையும், தங்கள் உறவுகளின் கொலைகளுக்கு கண்ணீர் சிந்துகிறவர்களையும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி முடக்கப்பார்க்கின்றன பார்ப்பனீய இந்துத்துவமும் அதன் எடுபிடிகளான எடப்பாடிகளும். இந்த நேரத்தில் ஒன்று திரண்டு எதிர்க்காவிடில் நாளை உங்கள் மீதும், உங்களது கட்சிகள் மீதும் இதைவிட மோசமான தாக்குதலை நிகழ்த்த காத்திருக்கிறது நாக்பூர்.

இது தமிழர்களின் அரசியலுக்கு விடப்படிருக்கிற வெளிப்படையனத் தாக்குதல். மோசடி அரசு நேரடியாக களமிறங்கியுள்ளது. நாக்பூர் நடத்துகிற இத்தாக்குதலில் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முடக்கப்பார்க்கிறது. காட்டெருமைகளின் ஒற்றுமைப் போல பொதுஎதிரியை நோக்கித் திரளாவிடில் வீழ்வீர்கள் தனித்தனியாக. உள்முரண்பாடுகளல்ல இணைக்கிற புள்ளிகளும், சரடுகளுமே தற்காலத்தின் தேவை.

நினைவேந்தலுக்கு குண்டர் சட்டமா? அப்போ மோடி யாரு? அமீத்ஷா யாரு? அத்வானி யாரு?

#StandWithThirumuruganGandhi

தோழர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு தோழர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை.

நாளை குண்டர் சட்டம் என் மீதோ? உங்கள் மீதோ?

அரசியல் முரண்பாடுகள் கடந்து கைதை கண்டிப்போம்.

மே17 திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்

வன்மையான கண்டனம்.

பிஜேபி-யோட எடுபுடி அரசு திருமுருகன் காந்தி மேல குண்டர் சட்டம் போட்டதுக்கு உடன்பிறப்புகள் ரொம்ப ஆனந்தப்படுறாங்க… என்ன எழவு டிசைன்-ன்னு தெரியல…

#இன்று திருமுருகன்; நாளை நான்; இன்னுமோர் நாளில் நீ…
#ReleaseThiru

சென்னையில் இருக்கும் அதிகாரம் என்பதெல்லாம், தில்லியில் இருக்கும் பார்ப்பனிய தரகு முதலாளிய ஏகாதிபத்திய அதிகாரத்தின் அடிமை எடுபிடி அதிகாரம் என்பது இப்போதும் தெரிகிறது. தமிழர் பகை மற்றும் துரோக அதிகாரத்தை வீழ்த்த அணி திரள்வோம்.

Kiruba Munusamy

1 hr ·

I condemn the State repression to arrest Thirumurugan Gandhi under Goondas Act!

Vikkranth Uyir Nanban

தோழர் திருமுருகன் காந்தி மேல குண்டர் சட்டம்… சாதாரணமா பெயில்ல வர முடியாத வழக்கு.. கடந்த ஆறு மாசத்துல மட்டுமே அவரும் அவரது இயக்கமும் நடத்திய தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் மட்டும் ஏராளம்..

WTO’ல மோடி அரசு போட்ட ஒரு ஒப்பந்தத்தின் படி நம்ம ஊர்ல ரேஷன் கடைகள் மூடப்படும் ஒரு இமாலய விவகாரம் பற்றி வேறு எந்த கட்சியும் வாய் திறக்காத நிலையில் இவரு மட்டுமே போராடி வந்தார்… இந்திய அரசை விமர்சிச்சிட்டாங்கன்ற காரணத்துக்கு இதோ தமிழக அரசு இவர் மேல இந்த கொடுமையான வழக்கை போட்டு தன் ஹிந்திய விசுவாசத்தை காமிச்சிருக்கு…

கைல கத்தி கபடாவோட ஊர்வலம் போன RSS கூட்டத்திற்கு அனுமதி… கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்ளுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தடியடி.. கூடி அழக்கூட உரிமையில்லாத ஒரு தேசத்திற்கு துரோகம் செய்தால்தான் என்ன என்று யோசிக்க வைக்கிறார்கள்..

மே 17 இயக்க தோழர்களின் மேல் குண்டர் சட்டத்தை ஏவிய எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரே மே 17 தோழர்களை உடனடியாக விடுதலை செய்.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.சனநாயகத்தின் குரலை, கருத்துரிமையை முடக்கும் அதிகார மீறல் இது.

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை ஏவிய பிஜேபி வழிநடத்தும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள். பச்சையான அரசியல் பழி வாங்கல்.

இன்று மே 17 திருமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. நாளை நம்மில்
யார் மீதும் பாயலாம். வன்மையான கண்டனங்கள்.

ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதிற்கு என் வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும் அனைவரும் குண்டர்கள் எனில் நானும் குண்டர்தான்..

மெழுகுவர்த்தி ஏந்தி நம் தமிழனத்திற்கு அஞ்சலி செலுத்தியதற்கு குண்டர் சட்டமா?? ஜனநாயகநாடா இது கேடுகெட்ட பாசிச அரசு அழியும் காலம் நெருங்கிவிட்டது..

மெழுகுவர்த்திக்கே குண்டாசா..?

பாசிசத்தின் எடுபிடியாகிப்போன எடப்பாடியாரே.. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் அனாதையாகப் போகிறீர்கள், நீங்களும் உங்கள் அடிப்பொடிகளும். உயிருக்கு ஊசலாடுகிற உங்கள் கட்சியும்..!!

தமிழகத்தின் பிற எந்த அரசியல் தலைவரையும் விட திருமுருகன் காந்தி தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படுகிற புதிய யுக அரசியல் பிரக்ஞை கொண்ட தலைவர். மெயின்ஸ்ட்ரீம் அரசியல் வாதிகளுக்குக் கூட அவரது முன்னெடுப்புகள் சவாலாகவே இருக்கும். முழு தேசிய அரசியலையும் ‘குண்டர்’ அரசியலாக ஆக்கியிருப்பவர்களுக்கு ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுக்கிற திருமுருகன் காந்தி ‘அச்சம் தரும் குண்டராக’ ஆகியிருப்பது ஆச்சர்யமில்லைதான். எல்லா வெகுமக்கள் போராட்டங்களையும் கிரமினலைஸ் பண்ணுவதும், அதனது தலைவர்களைத் தனிமைப்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதும் இன்றைய உலகில் எல்லா எதேச்சாதிகார அரசுகளும் கண்டுபிடித்திருக்கும் அண்மைய தந்திரம். இளைய யுக அரசியல் தலைமுறையை அச்சுறுத்தும் மோடி அரசினது நடவடிக்கையின் தொடர்ச்சி இது. ரோகித் வெமுலா, கன்னய்ய குமார் என இப்போது திருமுருகன் காந்தி. அஸாதி.. அஸாதி..

திருமுருகன் காந்தி கைது கடும் கண்டனத்துக்குரியது. எடப்பாடி அரசு ஆட்சியில் தொடர எந்த தார்மீக நியாயமும் இல்லை. மோடியின் எடுபிடி தான் எடப்பாடி என்பது ஊரறிந்த சேதி. சாதாரணமான இந்த காலத்திலே கூட அசாதாரண ஒடுக்குமுறையை ஏவும் அதிமுகவை விடவும் திமுக தான் தங்களை அதிகமாக ஒடுக்கியதாக நெஞ்சறிந்த பொய்யை திருமுருகன் இனி மேலும் தொடர மாட்டார் என்று நம்புவோம்.

மே-17 இயக்கத்தின் திருமுருகன் மற்றும் தோழர்கள் மீது குண்டர் சட்டம் என்பது அப்பட்டமான அராஜகம்! முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மரித்த ஈழதமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் கடுமையாக கண்டிக்கதக்கது.

நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்

அ.சவுந்தரராசன்

போக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம் துண்டுப் பிரசுரத்தை மக்களுக்கு வழங்கினார்கள். பொதுமக்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு பேராதரவு தந்தனர்.

கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள் அரசும், அரசு அதிகாரிகளுந்தான். ஆனால் போக்குவரத்து ஊழியர்களை சிலர் வசைபாடுகின்றனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இதில் சேர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில்குமரய்யா என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் எம்.வி. முரளி தரன், என். சேஷசாயி ஆகியோர் ‘‘போக்குவரத்து ஊழியர்கள் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பாவிட்டால் அவர்கள் மேல் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர். இது வரம்பு மீறிய செயல். நீதிபதிகள் தங்களை அனைத்திற்கும் மேம்பட்டவர்களாக கருதிக் கொள்வதன்வெளிப்பாடு இது. நீதிபதிகள் சட்டத்திற் கும், இயற்கை நீதிக்கும், சாதாரண மனித இயல்பிற்கும் விரோதமாக செயல்பட்டுள் ளனர்.

உண்மை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் போது அவர் சேமித்த பணம் ரூ. 15 லட்சத்திற்கு மேல் ரூ. 20 லட்சம் வரை கணக்கில் இருக்கும். அதிகபட்சம் ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் இந்தப் பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம். போக்குவரத்துக் கழகங்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தொழிலாளர்களின் பணத்தை 7 ஆண்டுகளாக வழங்க வில்லை.

ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகை மட்டும் 1700 கோடி ரூபாய். இப்போது பணியாற்றுவோரிடமிருந்து வைப்பு நிதிக்காகவும், காப்பீட்டிற்காகவும், கடன் சொசைட்டிக்காகவும் பிடித்த பணத்தை உரிய இடத்தில் செலுத்தாமல் போக்குவரத்து கழகங்களே பயன்படுத்திக் கொண்ட பணம் சுமார் 4500 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் வட்டிக்கு கடன்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் வாடிக் கொண்டிருக்கின்றன.

அரசே காரணம்

இந்த இழிநிலைக்கு முடிவு கட்டுங்கள் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. கழகங்களின் நட்டத்தை ஈடுகட்டவும் அரசு முன்வரவில்லை. புதியஒப்பந்தம் பேசவும் மறுத்து இழுத்தடித்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்த அறிவிப்பை பிப்ரவரி மாதமே வழங்கிவிட்டனர். அதற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேல் பொறுமையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் யார் இருப்பார்கள்?

கட்டப் பஞ்சாயத்து

உழைத்த பணத்தை கையாடிய வர்கள் குற்றவாளிகளா? பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் தொழிலாளர்கள் குற்றவாளிகளா? நீதிபதிகள் யாருக்கு ஆதரவு தருகிறார் கள்? இதே உயர்நீதிமன்றத்தில் இந்தப் பணத்தைக் கொடுக்க உத்தரவிடுமாறு வழக்குகள் போடப்பட்டன. பணிக் கொடையை 30 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. நீதிபதிகள் 12 தவணையில் இதைக் கொடுத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள். நீதிபதிகளுக்கு பணிக்கொடை சட்டம் தெரியாது என்பதுதான் இதன் பொருள். அல்லது தெரிந்தே அரசிற்கு துணை நிற்கிறார்கள் என்று பொருள். நீதிபதிகள் நடு நிலையோடு தீர்ப்பு வழங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது எப்படி சரியாகும்? தொழிலாளிக்கு உரிய பணத்தை 12 தவணையில் பெற்றுக் கொள் என்று உத்தரவு போட்டால் நீதிபதிகள் கையாடலுக்கு உடந்தை என்றே அர்த்தம்.

நீதிபதிகள் தவணையில் பெறுவார்களா?

இதே நீதிபதிகள் ஓய்வு பெற்றுப் போகும் போது பணிக்கொடையை, லீவு சம்பளத்தை அந்தத் தேதியிலேயே வாங்கிச் செல்கிறார்கள். இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா? தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?

ஒரு தலைப்பட்சம்

தீர்ப்பு வழங்கும் முன்பு எங்கள் கருத்தையே கேட்காமல் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடுவது சட்டவிரோதம். எங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வாய்ப்பே தராமல் தீர்ப்பு வழங்கினால் அது சர்வாதிகாரம். அத்தோடு எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்குகின்றனர். இவர்கள் நீதிபதிகளா அல்லது அரசின் ஆலோசகர்களா? நடுநிலை எங்கே இருக்கிறது? இதில் நீதிபதிகளுக்கு என்ன ஆதாயம்?

அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதே தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு. வேலை நிறுத்த உரிமை சட்ட உரிமை. வெள்ளைக்காரன் காலத்திலேயே நிலைநாட்டப்பட்ட உரிமை. மாவீரன் வ.உ.சி.யின் தொழிற் சங்க போராட்டத்தை ஒடுக்க வெள்ளை அரசு கையாண்ட அடக்கு முறைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

வேலைநிறுத்த உரிமையை, போராடும் உரிமையை பறிக்கும் முறையில்ஒரு தலைப்பட்சமான திடீர் தீர்ப்புகளை வழங்குவது நீதிபதிகளின் வரம்பு மீறிய செயல். இதை பொது சமூகம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும், நீதித்துறையும் நேர்ப்பட வேண்டும்.

அ.சவுந்தரராசன், சிஐடியு தமிழ்மாநிலக் குழு தலைவர்.
நன்றி: தீக்கதிர்

Watch video: Police misbehaving protesting women in Chennai 

நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

மனுவேல்

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இரயில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, பொய் வழக்கு போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நான்கு SUMS தோழர்கள் உட்பட 7 பேர் இன்று வரை சிறையில் உள்ளனர்.

தோழர் வளர்மதி (Sums Valarmathi) திருச்சி பெண்கள் சிறையில் உள்ளார். அங்கு அவரும், தோழர் சுவாதியும் சிறை அதிகாரிகளின் ஆசியுடன், சிறைக் காவலர்களால் பலமுறை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தோழர் வளர்மதியும், சுவாதியும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, போலி வாக்குறுதிகளைக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தபின்னர், சிறைத்துறை மீண்டும் பலவிதமான வன்முறையில் ஈடுபடத் துவங்கியது.

உண்ணாவிரதம் இருந்ததற்கு தண்டனை என்று கூறி, சிறைத் தொலைப்பேசியை பயன்படுத்தக் கூடாது, பி.சி.பி பணத்தை (அதாவது, அவர்களது சிறைக் கணக்கில் உள்ள பணத்தை) அவர்கள் பயன்படுத்துவதை தடுப்பது, பெற்றோருக்கு கடிதம் எழுத அனுமதி மறுப்பது, அடிப்படைத் தேவைகளான நேப்கின், சோப்பு, எண்ணெய் ஆகியவற்றை தர மறுப்பது என்று தொடர் சித்திரவதையில் சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதித்துறை நடுவர்
(மாஜிஸ்ட்ரேட்) முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, தோழர் வளர்மதி சிறையில் நடந்த வன்முறைகள் குறித்து நடுவரிடம் ஒரு மனு அளித்துள்ளார்.

அம்மனுவின் மீது எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத நீதித்துறை நடுவர் அந்த மனுவை அதே சிறைக்கு ஃபார்வர்ட் செய்துள்ளார்.

இந்நிலையில், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தோழர் வளர்மதியிடம் வந்துள்ள சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் ”இன்ஸ்ப்பெக்சன் நடக்க உள்ளது, அதனால் உன்னை மற்ற சிறைவாசிகள் இருக்கும் பொதுத் தொகுதிக்கு மாற்றப் போகிறோம்” என்று கூறியுள்ளனர். இன்ஸ்பெக்சன் நடைபெறும்போது தாங்கள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கவில்லை என்று காட்டுவதற்காக இவ்வாறு ஒரு நாடகம் ஆட சிறைத் துறை திட்டமிட்டுள்ளதை அறிந்த தோழர் வளர்மதி வர மறுத்துள்ளார்.

உடனே, சிறைக் காவலர்கள் தோழர் வளர்மதியை அடித்து, கை கால்களை பிடித்து தூக்கிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று மாணவிகள் மீது வன்முறை ஏவப்படுவதை கண்டு கோபமுற்ற மற்ற சிறைவாசிகள் “ஏன் இந்த பெண்களிடம் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?” என்று தட்டிக் கேட்டுள்ளனர். நிறைய சிறைவாசிகள் கூடி கேட்டவுடன், அடங்கிக் கிடந்த சிறைவாசிகள் ஒன்று கூடுகிறார்களே என்று பதட்டமான சிறை நிர்வாகம், சிறைக் காவலர்களைக் கொண்டு சிறைவாசிகள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்துள்ளது. தோழர் வளர்மதியும் கட்டாயமாக “உயர் பாதுகாப்புத் தொகுதிக்கு” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருபுறம், பாசிச நீதிமன்றம் தோழர்களுக்கு பிணை வழங்காமல் பிணை மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது.

இன்னொருபுறம், சிறைத்துறை தோழர்கள் மீது தொடர் வன்முறையை ஏவி வருகின்றது. என்ன செய்யப் போகிறோம்?

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கேலி பேசுபவர்களுக்காக இந்தப் பதிவு!

ஆர். எஸ். பிரபு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் கீழானவர்கள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் சமூக இயக்கத்தைப் பற்றிய புரிதல் துளியும் கிடையாது என்றே சொல்லலாம்.

ஓட்டுனர், நடத்துனர் அத்தனைபேரும் தங்களது குலத்தொழிலைவிட்டு வெளியேறி ஏற்றுக்கொண்ட ஒரு நாகரிகமான ஆரம்பகட்ட தொழில். ஏதாவது ஒரு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் படிப்பை முடித்தோ முடிக்காமலோ தட்டுத்தடுமாறி அடைந்த தொழில். யாருக்கும் டிரைவர் ஆகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் இருக்காது; ஒரு வேலைக்கு அலைமோதுபவர்களை தானாகவே இழுத்துக்கொள்ளும் தொழில்.

இன்றைய தேதியில் போர்வெல் லாரிகளில் பணிபுரியும் டிரில்லருக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம். குறைந்தது ஒரு இலட்சம் அட்வான்ஸ்; கார்ப்பரேட் வார்த்தையில் சொன்னால் அது இம்ப்ரெஸ்ட் கேஷ். வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் (இதன் டெக்னிகல் டெர்ம் லைன் வண்டி) கேஸ்/பெட்ரோல் டேங்கர், டிரைலர், காற்றாலை விசிறி லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் இருபதாயிரம். BE படித்தவனுக்கு 10000 சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது டிரைவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 20000 என்பது போதாதா என்ற கேள்வி எழக்கூடும்.

வேறு தொழிலில் புகாமல் குலத்தொழில் செய்யும்போது எப்படி ஒரு இழிவான பார்வை சொந்த சாதிக்காரர்களாலேயே வைக்கப்படுகிறதோ அதே பார்வைதான் லைன் வண்டி ஓட்டுனர்களுக்கும். விவசாயந்தான் பண்றான், சலூன்கடைதான் வச்சிருக்கான், ஸ்வீப்பராத்தான் இருக்கான் என்ற அளவில்தான் டிரைவராத்தான் போறான் என்ற அங்கீகாரமும். கல்யாண சந்தையில் ஒரு VAO சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஓட்டுனர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் ஆகும்வரை CL Driver-ஆக லாரி கிளீனர் சம்பாதிப்பதைவிட குறைவான சம்பளத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் மினி ஆட்டோ ஓட்டுவது, ஜேசிபி, பால்வண்டி, டேக்ஸி என நாட்களைக் கடத்துகின்றனர்.

நல்ல வேலையும் அமையாமல், திருமணமும் செய்யமுடியாமல், சொற்ப சம்பளத்தில் படிக்கவும், வேலைக்கும் செல்லும் பெண்களை எந்நேரமும் பார்த்துக்கொண்டே பணிபுரிவது முப்பதைத் தொடும் இளைஞர்களுக்கு நரகம். PhD முடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக பல்கலைக்கழகமே வேலைபோட்டுத் தரவேண்டும், வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் போகமாட்டேன் என்று தடித்தனத்துடன் பொழுதைக்கழிப்பவர்களுடன் ஓட்டுனர், நடத்தனர்களை ஒப்பிடுவது சாடிஸ்ட் மனநிலை.

பி. எஃப், கிரிஜுட்டி, படி என்பதெல்லாம் தொழிலாளர்களின் உரிமை. ஒரு நல்ல முதலாளிக்கு தெரியும் திறமையான ஊழியர்கள் இருக்கும்வரைதான் தனக்கு ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை என்று. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு தட்டையான மனநிலை கொண்ட ஒருசாரார் நம்மிடையே இருப்பது குறித்து அதிர்ச்சியடைய தேவையில்லை. கடைநிலை மக்களின் உபரியைச் சுரண்டி வளர்ந்த ஆண்டபரம்பரை சிந்தனை அவ்வாறுதானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து பேசும்போதெல்லாம் எல்லா உயர்சாதியினரும் பணக்காரர்கள் அல்லர்; பல பிராமணர்கள் வறுமையில் உழல்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கடி கேட்டிருக்கலாம். வறுமையில் உழன்றாலும் லாரி டிரைவராக, கிளீனராக இருக்கும் பிராமணரைக் கண்டதுண்டா? அப்படியெனில் அந்த தொழில் யாருக்கானது, ஏன் அதன்மீது இவ்வளவு வன்மம் என்பது எளிதாக விளங்கும்.

பவர் ஸ்டியரிங் இல்லாத டிராக்டரை ஓட்டிய அனுபவமிருந்தால் சாதாரண ஸ்டிரியங் உள்ள பேருந்தை ஓட்டுபவர்களின் உழைப்புகுறித்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். லைன் வண்டி ஓட்டுனர்களுக்காவது தூக்கம் வந்தாலோ, வயிற்று உபாதைகள் ஏற்பட்டாலோ தங்கள் விருப்பப்படி வண்டியை நிறுத்தமுடியும். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பஸ் ஸ்டாண்டு ஓட்டல், கக்கூஸ் தாண்டி எதையும் கற்பனைகூட பண்ணமுடியாது. சம்பளம் கொடுக்கவே வழி இல்லாததால் அளவுக்கதிகமாக ஓவர்டைம் பார்க்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் படும் பாடு ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருமண அழைப்பிதழ்களில் TNSTC நடத்துனர், TNSTC ஓட்டுனர் என்று பெருமையாக போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு கிடைக்காத கல்வியும், நல்ல வேலையும் அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்திருப்பதை அந்த அழைப்பிதழே சொல்லும். அதைத் தாண்டி கான்ட்ராக்டுகளில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஓட்டுனர், நடத்துனர், டிக்கெட் செக்கர் போன்றவர்களுக்கும் கட்டிங் உண்டு என்பதெல்லாம் அளவுக்கதிமான இன்டெலெக்சுவல் ஹேவிளம்பியின் பின்விளைவுகள்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கேட்பது அவர்களுக்கு முறைப்படி வந்து சேரவேண்டிய பணத்தை. இன்று அதிமுக தொழிற்சங்க அணி சார்பாக பேருந்துகளை இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உரிமைக்கும் சேர்த்துதான் இந்த பணிநிறுத்தம். ஏதோ ஒரு விமான நிலையத்தை இராஜ்கோட் பஸ் ஸ்டேன்ட் என்று போட்டோஷாப் செய்து போட்டு ஹேவிளம்பி செய்யும் கூட்டத்துக்கு இதெல்லாம் புரியாது.

விவசாயிகளின் சிறுநீர் குடிக்கும் போராட்டம்: மனித மாண்புகளுக்குப் புறம்பாக தம்மை கீழிறக்கிக் கொள்வதை கைவிட வேண்டும்!

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது கோரிக்கைகளின் பேரில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துவிடும் நோக்கில் பல்வேறு நூதனப் போராட்டங்களை வருகின்றனர். இந்நிலையில் அவர் சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர். இது மனித மாண்பை கீழிறக்கிக் கொள்ளும் போராட்டம், அதை கைவிடுத்து வேறு முறைகளில் விவசாயிகள் போராட வேண்டும் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள கருத்து:

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது கோரிக்கைகளின் பேரில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துவிடும் நோக்கில் பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்திவந்தனர். ஆனாலும் அரசு தொடர்ந்து பாராமுகமாய் இருந்துவரும் நிலையில் இன்று “சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை” அறிவித்துள்ளனர். மனித மாண்புகளுக்குப் புறம்பாக தம்மை கீழிறக்கிக் கொள்ளும் இப்போராட்டத்தை கைவிட்டு வேறுவகையில் போராட்டத்தை தொடர வேண்டும்.

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும்.

1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். “இரும்பாலை வருகிறது , வேலை கிடைக்கும், வாழ்க்கை வளமாகும் ” என ஏழை விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.3000, 5000 எனக் கொடுத்து உருவான நிறுவனம். ஒருங்கிணைந்த உருக்காலையாக (Integarated Steeel Plant) உருவாகாமல் இருந்த போதும், 1980 லிருந்து 2010 வரைக்கும், உருட்டாலையாக இலாபகரமான நிலையில் தான் செயல்பட்டு வந்தது.

ஜிண்டால் எழுச்சி!

இந் நிலைமையில்,  ஜிண்டால் குழுமம் எஃகு உற்பத்தியில் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உருவெடுத்தது. சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. மேட்டூர் அருகே பொட்டனேரியில் செயல்பட்ட LMW நிறுவனத்தின் இரும்பாலையை வாங்கியது. சேலம் உருக்காலையை கபளீகரம் செய்வதற்கு தொடர் முயற்சி செய்தது. சேலம் உருக்காலை என்பது உருவாகக் காரணமாக இருந்த இரும்புத் தாது வளம் மிக்க கஞ்சமலையை வளைத்து போட தமிழக அரசாங்கம் மூலம் , TIMCO என்ற பெயரில் மறைமுகமாக முயற்சித்தது. விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கியது.

இருந்த போதிலும், 2009 ல், பிரதமர் அலுவலகம் வாயிலாக, நலிவுற்ற ஆலை என முத்திரைக் குத்தி தனியாருக்கு விற்க ஒப்பந்தப் புள்ளி கோரிய பொழுது, ஜிந்தால் முன்னிலையில் இருந்தது.
தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசாங்கம், SAIL பின்வாங்கியது. மீண்டும் மோடி அரசாங்கம் வந்த பிறகு, 2016 ல், பிரதமர் அலுவலகத்தில் விற்பதற்கான சதித் திட்டம் போடப்பட்டு விட்டது. 2010 ல் விரிவாக்கம் செய்வதற்கு தரப்பட்ட ரூ.2300 கோடி முதலீட்டிற்கான வட்டிப் பிரச்சினையை காரணம் காட்டி விற்பனை செய்வதற்கான காரணத்தை சொல்கிறது. வெறும் 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து விட்டது. இலட்சம் இலட்சம் கோடி ரூபாய்களை வங்கிகளின் Non performing Assets களாக, பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் வைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் தான் ரூ.2300 கோடி கடன், வட்டி பிரச்சினை என்று விற்பதற்கான காரணம் சொல்கிறது.

நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

மோடியின் அலுவலகம் பொய் சொல்ல…. பல கணக்குகள் ஜிந்தால் குழுமம் போட்டுக் கொண்டு இருக்கிறது. எல்லாம் அருமையான லாபக் கணக்கு. அயோக்கியத்தனமான ஊழல்படிந்த செயில் உயர் அதிகாரிகள், மற்றும் பாரதிய ஜனதா/ மோடி அரசாங்கத்திற்கும் தெரிந்த கணக்கு தான்.

1)உருக்காலையில் பயன்படுத்தப்படாத நிலம் 2500 ஏக்கரை விற்றாலே ரூ.10,000 கோடி வரை கிடைக்கும். ஆலையின் உள்ளே
நூற்றுக்கணக்கான ஏக்கரில் வளர்ந்துள்ள அரிய மரங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்கின்றனர்.

2)புதிதாக 2010 ல், போடப்பட்ட சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள Steel Smelting Shop, Annealing & Pickling Plant போன்றவற்றை அருகாமையில் உள்ள அவர்களது, பொட்டனேரி JSW இரும்பாலைக்கு கொண்டு சென்று விடலாம்.

3) “சேலம் ஸ்டெயின்லெஸ்” என்ற பிராண்டை ஒழித்துக் கட்டி, எல்லாம் “ஜிண்டால்” Jindal என எஃகு சந்தையில் கொடிக் கட்டிப் பறக்கலாம்.

4)ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் இரும்பு கனிமங்கள் கொண்ட “கஞ்ச மலை” யை மீண்டும் கைப்பற்றி விடலாம்.

5) கையிலிருந்து பணம் ஜிந்தால் தர வேண்டியதில்லை. இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளிடம் மொத்த பணத்தையும் கடனாகவே வாங்கிக் கொடுத்து விடலாம்.
ஒருவேளை தற்போதைய நிறுவனத்திற்கு போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை எனில்…
கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு ஓடிவிடலாம்.

சேலம் உருக்காலையைப் பாதுகாக்க என்ன செய்திருக்க வேண்டும்?

1)ஆலையின் வளாகத்திற்குள், புதிய தொழிற்சாலைகள் வேண்டும். 2008 ல் அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பரப்பளவில் SEZ சிறப்பு பொருளாதார மண்டலம், ரெயில்வே வேகன் தொழிற்சாலை, மின் நிலையம் Captive Power Plant ஏன் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

எஃகு தகடுகளை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஏன் திட்டமிடப்படவில்லை.

2) சேலம் உருக்காலைத் தயாரித்த தகடுகளை கூடுதலாக விற்பதற்கான உத்தரவாதமானச் சந்தையை ஏன் உருவாக்கவில்லை ?

3) உலக இரும்பு சந்தை தேக்கத்தில் இருக்கும் பொழுது, ஜப்பான், தெ.கொரியா, சீனாவில் இருந்து எதற்கு கிட்டத்தட்ட 55 % இறக்குமதி? இறக்குமதியாகும் இரும்புக்கு வரிகளைக் கூட்டலாமே!

4)சேலம் இரும்பாலைக்கு வாங்கும் கச்சாப் பொருட்கள், விற்பனை செய்யப்படும் எஃகு தகடுகளுக்கு விதிக்கப்படும் வரிகளை கணிசமாகக் குறைக்கலாமே!

தேவை என்ன?

மாநில அரசு அரசியல் உறுதியுடன் தலையிட வேண்டும்!

நிதியுதவி தர வேண்டும்!

புதிய தொழிற்பேட்டைகளுக்கு திட்டங்கள் தீட்ட வேண்டும்.

மக்கள் கடமை :

முன் எப்போதையும் விட, அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்ட களத்தில் ஒற்றுமையுடன் குதித்துள்ளன. டிசம்பர் 20 சேலம் தர்ணா போராட்டம் தொழிலாளர்களின் எழுச்சியைக் காண்பித்தது. போராட்டம் விரிவாக வேண்டும். போராட்ட தயாரிப்புகளுக்கான தோழர்களின் கடமை அதிகரிக்கிறது.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் “தேவ**** காசு வாங்கிட்டு ஆடுறீங்க” என்ற போலீஸ் அதிகாரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கேட்டு விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக தவிர்த்த அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் தமிழகத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னை எழும்பூரிலும் விழுப்புரத்திலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்கிழமை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஈடுபட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கீழ்த்தரமாகப் பேசியதாக கூறியுள்ளது.

makkal-athikaram-rail-roko-3

 

இதுகுறித்து மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மக்கள் அதிகாரம் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 18.10.2016 அன்று ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. மக்கள் நலக்கூட்டணியினர் ரயில் நிலையத்திற்குள் போராடிக் கொண்டு இருந்தனர். அந்த இடத்திற்கு சற்று முன்னதாக தாசப்பிரகாஷ் சந்தோஷ் நகர் வழியாகச் சென்று பெண்களும் குழந்தைளுமாக சுமார் 100 பேர்கள் உள்ளூர் ரயில்களை மறித்தனர். ரயிலின் மீதேறி முழக்கமிடத் தொடங்கினர். ரயில் பயணிகளிடம் போராட்டத்தின் நியாயத்தை விளக்கி துண்டறிக்கைகளை கொடுத்தனர். அப்போது பலர் ரயிலை விட்டு இறங்கிச்சென்றனர்.

போலீசு வழக்கம் போல போஸ் கொடுத்து செல்ல மாட்டோம் எனத்தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடாவடியாக இழுத்துச்சென்றது. இதைக் கண்ட முதியவர் ஒருவர் ஏய்யா காவிரித்தண்ணிய திறக்கச்சொல்ல முடியுமா?  என்று போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அடிமைகளைப் பார்த்து பழக்கப்பட்ட போலீசு சும்மா இருக்குமா? அவரை சராமரியாக அடித்தது. இதைப்பார்த்த மக்களும் தோழர்களும் தண்டவாளங்களை விட்டு அகல மறுத்தனர். தோழர்களை கொத்தாகத் தூக்கி இன்னொரு தண்டவாளத்தில் வீசுவது, ஓடும் ரயிலுக்கு அருகில் தூக்கிப் போட்டது. இதைப்பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள் என நினைத்தது.

makkal-athikaram-rail-roko-2

அடுத்த கட்டமாக தனது பொறுக்கித்தனத்தை காட்டத் தொடங்கியது. ஆண் போலீசு  பெண்களின் உடையை இழுப்பதும் கைகால்களை முறுக்கியும் வெறியாட்டம் போட்டது. தேவடியாளுங்களே  காசு வாங்கிட்டு ஆடுறீங்க என கூச்சல் போட்ட போலீசு அதிகாரி வினோத் ” என் பேரை நோட் பண்ணுடா என்னை ஒண்ணும் புடுங்க முடியாது” என்றார். இன்னொரு போலீசு  “ ஏண்டி இப்படி ஆட்டம் போடுறீங்க” என ஒரு பெண் தோழரை ஆபாசமாகப் பேசிக்கொண்டிருந்தார். வீடியோ கேமராவைப் பார்த்ததும் ஏம்மா மரியாதையா பேசும்மா என்றதாக தெரிவித்துள்ளனர்.

இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

தண்ணீருக்கான பொது மேடை

எண்ணூர் கழிமுகமும், பக்கிங்காம் கால்வாயும்,கொசஸ்தலை ஆறும் காமராஜர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கத் திட்டத்திற்காக வேகமான வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடசென்னையின் நிலத்தடி நீர்மட்டம், சாம்பல் கழிவு மற்றும் வெந்நீர் கலப்பால் அழிவுக்குள்ளாகியிருக்கும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றின் பல்லுயிரியம் இவற்றோடு இன்னும் வளர்ச்சியின் பேரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற துறைமுக, அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் பேரழிவின் எல்லைக்கு இப்பகுதியை தள்ளிக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் விதிமுறைகள்அனைத்தும் வெற்று காகிக அறிக்கையாக மட்டுமே உள்ளது.

மோசமான நீர்நிலை ஆக்கிரமிப்பாலும் மாசுபடுத்தலாலும் உப்பங்கழி ஆற்றிலும், கழிமுகப் பகுதியிலும் மீன்,இறால்கள்பிடித்து வந்தமீனவத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிற்கின்றனர். தினமும் அழிந்துகொண்டிருக்கும் எண்ணூர் கடற்கழியின் பிரச்னையை,மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமே கருதமுடியாது. இதை சென்னையின் ஒரு ஜன நெருக்கடியான பகுதியின் வெள்ளப் பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். இச்சூழல் சீரழிவைத் தடுக்க வேண்டிய அரசு இயந்திரமும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

முறையற்ற தொழிற்துறை வளர்ச்சியும் வடசென்னையும் :

மின்சார உற்பத்தி நிலையங்கள், துறைமுகம், உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கனரக உதிரிப்பாக தயாரிப்பு நிறுவனங்கள் என வடசென்னையை மையமாகக் கொண்டு உருவான தொழிற்சாலைகளும் அதில் உழைக்கிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்தான் இன்றைய சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குமான அடித்தளத்தை அமைத்தனர்.

90 களில் இங்கே அறிமுகமான தாராளமய, உலகமய, நவ தாராளப் பொருளாதாரக் கொள்கை பெரு முதலாளிவர்க்க சுரண்டலை இன்னும் தீவிரப்படுத்தியது. இத்திருப்புமுனை கட்டத்தில், வடசென்னையானது, உழைக்கும் மக்களின் உழைப்புச்சுரண்டலுக்கும், இயற்கை வளச்சுரண்டலுக்கும் இரையானது. எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பணிகள், சாலை விரிவாக்கங்கள்,கப்பல் கட்டுமானப் பணிகள் போன்ற அழிவு வளர்ச்சிப் பணிகள் பழவேற்காடு முதல்எண்ணூர் வரையிலான கடற்கரை மீனவக் கிராமப்பகுதியின் வாழ்வாதாரத்தை அழித்துப் போட்டது.

அலையாத்தி காடுகளின் மரணம்:

எண்ணூர் கழிமுகமானது, அடையாறு கூவம் போன்ற சிறிய ஆறுகளின் முகத்துவாரப் பகுதியல்ல. தெற்கிலிருந்து வருகிற ஆரணியாறும் கிழக்கிலிருந்து வருகிற கொசஸ்த்தலை ஆறும் ஒன்றாக இணையும் ஒரு பெரும் கழிமுகப் பகுதி. ஆக,ஆரணியாறும் கொசஸ்தலையாறும், புழல் ஏரியின் உபரி நீரும் இணைகிற இப்பகுதியானது வெள்ள பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகும்.

கொசஸ்த்தலையாறு  கடலில் கலக்கிற முகத்துவாரக் குப்பத்தில் தொடங்கி பழவேற்காடு வரை விரிகிற கழிமுகப்பகுதியானது, பல நீர்வாழ் உயிரினங்களும் பறவைகளும்,பூச்சியினங்களும் வாழ்கிற அதி அற்புத உயிர்ச்சூழல் மண்டலமாகும். அமேசான் காடுகள் நிலத்தின் மழைக்காடுகள் என்றால் அலையாத்திக் காடுகள் நீரில் முளைத்த அற்புத கண்டல் காடுகள் எனலாம்.மேலும் இக்கண்டல் பகுதிகளுக்கே உரித்தான பிரத்யேக இறால் இனங்கள், நண்டு இனங்கள், மீன் இனங்கள், நத்தை இனங்கள்,பூச்சியினங்கள் இங்கே வாழ்கின்றன.

சமீபத்தில்,மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதும் கட்டுமானங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் எண்ணூர் கழிமுக அலையாத்திக் காடுகளோ, இன்று வேருடன் பிடுங்கப்பட்டு, மண் கொட்டி மூடப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுக விரிவாக்கத்திற்காக ஆழப்படுத்துகிற பணியில் எடுக்கப்படுகிற மண், கழிமுகத்தை மூடப் பயன்படுத்தப்படுகிறது. அனல் மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கலந்து கழிமுகத்தின் ஒரு பகுதி சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது.

அழிவின் வளர்ச்சி:

1960-களில், எண்ணூர் அனல் மின் நிலையம், 1980-களில் வட சென்னை அனல் மின் நிலையம் , 2001-இல் காமராஜர் துறைமுகம் (முன்னர் எண்ணூர் துறைமுகம் என்று அழைக்கப்பட்டது) என வடசென்னையில் மையமிட்டு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கும் சூழலுக்கும் அழிவின் வாசலை திறந்துவிட்டன.

வடசென்னை அனல் மின் நிலையம் தனது வெப்பமான கழிவுநீரை ஆற்றில் வெளியிட்டது. பிறகு உப்பளங்களையும் மீன் குளங்களையும் விழுங்கி செப்பாக்கத்தில் பிரம்மாண்டமான சாம்பல் ஏரியை அமைத்தது. ஏரியிலிருந்து சாம்பல் கசிந்து கடற்கழியில் பரவி, அதன் ஆழத்தை குறைத்தது. கான்க்ரீட் தளங்களில் குழாய்கள் ஆலையிலிருந்து ஏரிக்கு சாம்பல் கொண்டு செல்வதற்கு கட்டப்பட்டன. பழுதடைந்த குழாய்களிலிருந்து கசியும் சாம்பல் குழம்பு ஆற்றில் பரவி, ஆற்றின் மணற்பரப்பிற்கு மேல் சிமெண்ட் போர்வை போர்த்தி ஆற்று மண்ணிலிருக்கும் உயிர்களை கொன்றுவிட்டது. ஆற்றின் ஆழமும் குறைந்துவிட்டது. மூன்று ஆள் ஆழம் இருந்த பகுதிகளில் இப்போது குதிங்காலளவுகூட நீர் இல்லை. பல இடங்களில் படகுகளை சாம்பல் தீவுகளுக்கு மேல் தள்ளிக்கொண்டு போகிற நிலைமை வந்துவிட்டது. காட்டுப்பள்ளி தீவில் அமைக்கப்பட்ட காமராஜர்துறைமுகம் ஆழப்படுத்துவதற்கு தூர் வாரிய கடல் மண்ணை அத்திப்பட்டில் உப்பளங்களில் கொட்டி செட்டிநாடு இரும்பு தாது மணல் மற்றும் நிலக்கரி கிடங்கு அமைத்தார்கள். கொட்டப்பட்ட மண்ணிலிருந்து நுண் மணல் கசிந்து, ஆற்றில் பரவி ஆற்றின் ஆழத்தை கடுமையாக குறைத்துவிட்டது. அதே சமயம் கிடங்கை துறைமுகத்துடன் இணைக்க ஆற்றை மறித்து ஒரு சாலையும், சாலையோரம் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயரும் அமைக்கப்பட்டுள்ளது. முழு வெள்ளத்தில் 500 மீட்டர் அகலமாக ஓடும் ஆற்றுக்கு வெறும் 10 மீட்டர் வழி மட்டுமே விடபட்டுள்ளது.

இதற்கும் மேலாக எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு அமைக்கப்படும் சாலையானது பக்கிங்காம் கால்வாயையும் கொசஸ்தலையாற்றையும் மறித்து அமைக்கப்பட்டுவருகிறது. இதை எதிர்த்து நிறுத்தாவிட்டால் எர்ணாவூரிலிருந்து புழுதிவாக்கம் வரை ஆற்றைமறித்து சாலை கட்டி ஆற்றை நிரவி விடுவார்கள்.

ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவோம்:

பக்கிங்காம் கால்வாயும் கொசஸ்த்தலை ஆறும் எண்ணூர் முகத்துவாரமும் சென்னைப் பெரு வெள்ளத்தின் போது, ஒட்டுமொத்த சென்னையைக் காப்பாற்றியதில் பெரும் பங்காற்றின. வெள்ள வடிகாலான நீர்வழித்தடமும், வெள்ள நீரைக் கடலில் சேர்க்கிற முகத்துவாரமும் இல்லாமல் போயிருந்தால் பாதி சென்னையே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.

அழிவின் வளர்ச்சியும், வளர்ச்சியின் அழிவும் பிரம்மாண்டமாகி வருகிற நிலையில் சூழல் படுகொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்படுகிற உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து இவ்வழிவைத் தடுத்தாக வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

நாள்:22.09.2016,வியாழன்,காலை 10.00 மணி முதல்

இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சென்னை

தண்ணீருக்கான பொது மேடை (மக்கள் இயக்கம்)

9842391963|9444078265

 

முகநூலில் ஸ்டிரைக் செய்வது, ஹாஸ் டேக் டிரண்டிங் ஆக்குவது, முகப்புப்படம் மாற்றுவது இதெல்லாம் எப்படி போராட்ட வடிவங்களாகும்?

சம்சுதீன் ஹீரா

சம்சுதீன் ஹீரா
சம்சுதீன் ஹீரா

முகநூலில் ஸ்டிரைக் செய்வது, ஹாஸ் டேக் டிரண்டிங் ஆக்குவது, முகப்புப்படம் மாற்றுவது இதெல்லாம் எப்படி போராட்ட வடிவங்களாகும், இதன்மூலம் என்ன செய்துவிட முடியும்? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் வானரப்படைகளின் ஆட்டமும் கொக்கரிப்பும் எல்லைமீறிச் சென்றதை நாம் அனைவரும் பார்த்தோம்.

தாலி குறித்து விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பு.த தொலைக்காட்சியின் மீது இந்துத்துவா குண்டர்கள் பட்டாசு வீசியதும்( அவிங்க குண்டு வீசினாலும் அது பட்டாசுதான்) . அதைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தாலியகற்றும் நிகழ்விற்கு ஆயுதங்களோடு (வெளாட்டு சாமான்கள்னு சொல்லுவாய்ங்க) குண்டர்கள் சென்று கலவரம் செய்ய முயன்றதும் அனைவரும் அறிவோம்.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் கருப்புச்சட்டை கிழிக்கும் போராட்டம் நடத்தி தி.க வினரின் சட்டைகளைக் கிழிப்போம் என்று சொன்னதாக தகவல்கள் வெளியானது.

அதனால் நாங்கள் சில தோழர்களோடு விவாதித்து தி.க.வினரை ஆதரித்து கருப்புச்சட்டை அணியும் போராட்டம் என்று முன்னெடுத்தோம். அதன்படி குறிப்பிட்ட நாளில் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து புகைப்படம் எடுத்து முகநூலில் முகப்புப்படம் வைத்தனர். கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் கட்சி, அமைப்பு வேறுபாடின்றி பாசிசத்துக்கெதிராக தமது எதிர்ப்பை எளிய முறையில் பதிவு செய்தனர்.

இந்திய அளவில் #black_against_suffron என்ற ஹாஸ்டேக் மூன்றாவது இடத்திற்கு வந்தது. பல பத்திரிக்கைகளில் செய்தியாகியது. தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் ஆதரவு கிடைத்து கவனத்தை ஈர்த்தது. இது மூன்று விளைவுகளை ஏற்படுத்தியது.

1. அகில இந்திய பா.ஜ.க தமிழக பா.ஜ.க வுக்கு டோஸ் விட்டது சில பத்திரிக்கைகள் வாயிலாக தெரியவந்தது.

2. இந்திய உளவுத்துறையிலிருந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்த நபர்கள் அல்லது குழு குறித்து விசாரிக்க ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததை அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தோழர் மூலம் தெரியவந்தது.

3. சட்டை கிழிப்பதாக சொன்ன அவர்களால் ஒன்றும்#கிழிக்க முடியவில்லை.

இதன்மூலம் சொல்லிக்கொள்வது என்னவெனில்… தொழிலாளர் விரோத மக்கள் விரோத அரசை கேள்விகேட்க, பணியவைக்க உங்களால் முடியும். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் ஒருநாள் செப்டம்பர் 2-ஆம் தேதி முகநூலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படாமல் இருப்போம்..

#sep2facebookstrike இந்த ஹாஸ்டேக்கைப் பயன்படுத்துவோம்..

அரசின் கேளாச்செவிகள் கேட்கட்டும்…

சன்சுதீன் ஹீரா, எழுத்தாளர்; மௌனத்தின் சாட்சியங்கள் நாவலின் ஆசிரியர்.

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

anbumani

அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

anbumani 2

“குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். ஜேஎன்யூவில் பயிலும் தமிழக மாணவர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

படங்கள்: Vijay Amirtharaj

மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

முகிலன்

ஈரோடு மாவட்டம் -பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட செரையாம்பாளையம் என்ற கிராமத்தில் “சாரல் பசுமை தன்னார்வ அமைப்பு” என்ற அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் முன்முயற்சியில் ஊரில் உள்ள பல்வேறு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த நசசு மரமான வேலிக்கருவை என்ற சீமை கருவேல மரத்தை அழித்து மண்ணை பண்படுத்தி, சுமார் 700 மரங்கள் (ஆல்-அரசு- வேம்பு-பழம் தரும் மரம்கள்) நட்டு வளர்த்து, முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.

அங்கு 100 ஆண்டுகள் ஆன பாரம்பரிய ஆலமரமும் உள்ளது. அங்கு நேற்று(13-07-2016, புதன்) திடீர் என சிலர் வந்து இந்த வழியாக மின்சார டவர் லைன் ஒன்று வர உள்ளது என மார்க் செய்துள்ளனர். மின்சார டவர் லைன் கொண்டு வர உள்ள வழித்தடத்தில் 50 க்கு மேற்பட்ட மரங்களுடன் 100 ஆண்டுகள் பழமை ஆன ஆலமரமும் வெட்டப்பட நேற்று மின்வாரிய பொறியாளரால் மார்க் செய்யப்பட்டது. மரத்தை வெட்டக் கூடாது என ஊர் மக்கள் சொன்னதற்கு, உங்களுக்கு தகவல், அதற்கு மேல் உங்களிடம் பேசிக் கொண்டுருக்க முடியாது என திமிராக பேசி சென்றுள்ளார் மின்வாரிய பொறியாளர்.

மின்சார டவர் லைன், ஆலமரமும் பாதிக்கப்படாமல் கொண்டு செல்ல மாற்று வழி இருந்தும் அந்த ஆலமரத்தை இன்று (14-07-2016, வியாழன்) வெட்டியே கொண்டு செல்வது என்ற முடிவை எடுத்து இன்று காலை 08.20 க்கு ஜே.சி பி .எந்திரத்தை ஒப்பந்தக்காரர்கள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக நேற்று இரவு அப்பகுதி (செரையாம்பாளையம்) மக்கள் கவுந்தப்பாடி வழக்கறிஞர் .நதியா அவர்கள் மூலம் என்னை தொடர்பு கொண்டனர்.அப்போது அவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை எப்படி செயல்படுத்தலாம் எனக் கூறினேன்.

நான் செரையாம்பாளையம் ஊர்மக்களின் வற்புறுத்தலின் பேரில் இன்று காலை 08.30 க்கு செரையாம்பாளையம் சென்றடைந்தேன்.

ஆலமரத்தை வெட்ட ஒப்பந்தக்காரர்கள், அவர்களது ஆட்களைக் கூட்டிக் கொண்டும் ஜே.சி .பி எந்திரத்தையும் கொண்டு வந்தவுடன் செரையாம்பாளையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் -பெண்களும் ஆலமரத்தை சுற்றி வளைத்து கோபாவேசத்துடன் நின்று கொண்டிரூந்தனர்..

நான் அங்கு சென்றவுடன் ஒப்பந்தக்காரர்களிடம் இம்மரத்தை வெட்ட கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை காட்டுங்கள் என்றேன். உடனே ஒப்பந்தக்காரர் திருதிரு என விழித்தார். அது மின்வாரிய பொறியாளரிடம் இருக்கும். அவர் வரும் போது கொண்டு வருவார் என்றார்.

தங்கள் கடவுள் போல் மதிக்கும் ஆலமரத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டிருந்த மக்கள், தனது கைகளை சங்கிலிகளாக கோர்த்துக் கொண்டு மரம் முழுக்க சுற்றி வளைத்து நின்று, அரசு மரத்தை வெட்ட அனுமதி கொடுத்ததை கண்டித்தும், மரத்தை வெட்ட விட மாட்டோம் என்றும், அரசின் மரம் வளர்ப்பு சந்தர்ப்பவாத செயல்பாட்டை கண்டித்தும் முழக்கம் இட்டனர். அங்கு போர்க்களம் போல் மக்களின் கண்டன முழக்கம் எதிரொலித்தது.

மக்கள் ஆலமரத்தை விட்டு அதை அழிக்க வந்த ராட்சசனான ஜே.சி .பி எந்திரத்தை நகர விடாமல் மறித்து நின்று கோபமாக தனது கண்டனக் குரலை எழுப்பினார்கள். ஒன்றுபட்டு அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கம் பவானி ஆற்றின் இரு கரைகளிலும் எதிரொலித்தது.

நான் ஒப்பந்தக்காரரிடம் மரத்தை வெட்டும் போது துறை சார்ந்த அதிகாரிகள் ( இது புறம்போக்கு என்பதால் வருவாய்த்துறை அதிகாரி, மின்சாரத்திற்கு என்பதால் மின்வாரிய அதிகாரி) இல்லாமல் வெட்டக் கூடாது என்பதை தெரிவித்து, அதிகாரிகள் இல்லாமல் எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். அவர் பதில் சொல்ல திணறினார். உடனே மின்வாரிய பொறியாளரின் அலைபேசி எண்ணை வாங்கி அவரை இங்கு எப்போது வருவீர்கள் என்றேன். அவர் எனது மேலதிகாரியை பார்க்க பெருந்துறையில் உள்ளேன். அவரைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்றார். நாங்கள் நீங்கள் வரும் வரை காத்திருக்கிறோம் என்றேன்.

உடனே மரத்தை வெட்ட வந்த ஜே.சி .பி ஓட்டுநர், தனது ஜே.சி .பி வண்டியை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்.

மக்களிடம் நான், மக்கள் போராட்டம்தான் பல்வேறு நிலைமைகளை மாற்றி உள்ளது.இன்று பல ஆண்டுகளாக நீங்கள் நேரடியாக தண்ணீர் ஊற்றி வளர்த்த மரத்தை வெட்ட வரும்போது, செரையாம்பாளையம் மக்கள் திரண்டு ஒன்றுபட்டு உறுதியாக நின்றதால் நிலைமையை மாற்றி உள்ளீர்கள்.

இப்போதும் மக்கள் போராட்டமே , திருவண்ணாமலையில், ஏற்கனவே மதுரை-சொக்கனுராணியிலும், சேலத்திலும் மரம் வெட்டும் நிலைமையை மாற்றியுள்ளது. மரங்களை பாதுகாத்து உள்ளது.
எனவே அதிகாரிகள் வரும் வரை காத்திருப்போம் எனக் கூறினேன்.

மதியம் வரை காத்திருந்தும் மின்வாரிய பொறியாளர் வரவில்லை. பின்பு அவரிடம் மக்கள் முன் அலைபேசி மூலம் பேசினேன். அவர் வராதத்திற்கு பல காரணங்களை சொல்லி மழுப்பினார். அவரிடம் நான்

“டெல்லி உச்சநீதிமன்றம் ஒரு மரத்தை வெட்டும் போது புதிதாக 10 மரங்கள் நட சொல்லியுள்ளது. அப்படி செய்து விட்டுத்தான் மரத்தை வெட்ட வந்துள்ளீர்களா என்றவுடன், அவர் இல்லை நாங்கள் மரத்தை வெட்டி விட்டு நடுவோம் என்றார். தமிழகத்தில் அப்படி நடந்த ஒரு இடத்தைக் காட்டுங்கள் என்றவுடன் பேச மறுத்து விட்டார். மேலும் நான் 2012-இல் திருச்சி மாவட்ட ஆட்சியராக ஜெயசிறீ அவர்கள் இருந்த போது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு கோரிக்கை வைத்தேன். இப்போது போடப்பட்டு கொண்டிருக்கும் திருச்சி-கரூர் பைப்பாஸ் சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் உத்திரவுப்படி ஒரு மரத்திற்கு பத்து மரம் நட்டால் மட்டுமே டோல்கேட்(சுங்கச்சாவடி) வைக்க அனுமதி தர வேண்டும் என்றேன். அதற்கு இரண்டு கூட்டத்தில் பதில் சொல்லாத திருச்சி ஆட்சியர் ஜெயசிறீ அவர்கள், நான் பதில் சொல்ல அழுத்திக் கேட்டவுடன் “நான் ஆட்சியரக இருக்க வேண்டுமா? வேண்டாமா??” என என்னை திரும்பிக் கேட்டார் . இதுதான் நமது நாட்டின் எதார்த்த நிலை, நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய் என்றேன்.

மரத்தை வெட்டக் கூடாது, அந்த வழித்தடத்தில்தான் மின்சார டவர் லைன்கொண்டு செல்வது கட்டாயம் என அரசும் -அதிகாரிகளும் முடிவு எடுத்தால் ஆலமரத்தையும், மற்ற மரத்தையும் நகட்டி(அகற்றி) வேறு இடத்தில் நட்டுவிட்டு மின்சார டவர் கொண்டு செல்லுங்கள் என்றேன். உடனே மின்வாரிய பொறியாளர் எங்கள் திட்டம் அதுதான் என்றார். எப்படி உங்களால் இப்படி பச்சை பொய் பேச முடிகிறது , ஒரு முன்மாதிரி உங்களிடம் உண்டா என்றவுடன் எதிர்முனையில் பதிலே இல்லை.

மேலும், அவரிடம் ” இல்லாத ராமர் பாலத்தை காரணம் காட்டி பல்லாயிரம் கோடி செலவு செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் அரசாலேயே காலாவதி ஆக்கப்பட்டது. விவசாயிகளின் நிலம் பாதிக்கப்படுவதால் விளைநிலம் வழியாக கெயில் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பால் முதல்வர் பிரதமரை சந்தித்து கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலமரத்தையும், மற்ற மரத்தையும் வெட்டக் கூடாது” என மக்களின் உணர்வை உயர் அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றேன்.

மின்வாரிய பொறியாளர் ” நான் மக்களிடம் சொன்னேன். ஊராடசி தலைவர் மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினார்” என்றார். நான் அவரிடம் “நாடு முழுக்க மின்சார டவர் லைன் ஒப்பந்தக்காரர்கள் 300 சதவிகிதம் லாபம் வைத்து டெண்டர் எடுக்குறார்கள் என்பதை அறிவேன். மேலும் அந்த தொகை கொடுப்பதே மக்கள் எதிர்ப்பு வராமல் அவர்களுக்கு பல்வேறு வகையில் லஞ்சம் பெற வைத்து, அவர்கள் வாயை அடைப்பதற்குத்தான். மின்சார டவர் லைனுக்காக பல ஊராட்சி தலைவர்களுக்கு இதற்காக லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப் பட்டதை நான் அறிவேன். இந்த தலைவர் எந்த அடிப்படையில் ஒத்துக் கொண்டார் என தெரியவில்லை” என்றவுடன் மீண்டும் அமைதி ஆகி விட்டார்.

அவரிடம் இறுதியாக ” உங்கள் அதிகாரிகளுக்கு சொல்லுங்கள். மாற்று வழி உள்ளது, அதில் மின்சார டவர் லைன் கொண்டு செல்லுங்கள். அதை விட்டு விட்டு காவல்துறையை விட்டு மிரட்டுவது-வழக்கு போடுவது போன்ற வழிமுறையை கையாள நினைத்தீர்கள் என்றால் அதையும் எதிர் கொள்ள தயாராக மக்கள் உள்ளனர் அவர்களுக்கு துணையாக நாங்கள் உள்ளோம். மக்களின் உணர்வுக்கும் -போராட்டத்திற்கும் மதிப்பு கொடுங்கள். இன்று நீதிமன்றம் தானாகவே முன்வந்து மக்களின் போராட்டத்தால் திருவண்ணாமலையில் மரம் வெட்டும் பிரச்சனையை எடுத்துள்ளது. எனவே மக்களை மதியுங்கள்” எனக் கூறி முடித்தேன்.

செரையாம்பாளையம் கிராம மக்களுக்கு வாழ்த்துக்களையும், அவர்களின் உறுதியையும் பாராட்டி, தொடர்ந்து உறுதியுடன் போராட்ட விடை பெற்று வந்தேன்.

முகிலன், சூழலியல் செயற்பாட்டாளர்.

பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்ட காஷ்மீரத்து சிறுமி; நம்பிக்கை ஓய்வதில்லை!

சமீபத்தில் காஷ்மீரில் நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவம் பெல்லட் ரக குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இந்த குண்டுகளை அனாயசமாகப் பயன்படுத்துகிறது இந்திய ராணுவம். இந்த குண்டுகளால் துளைக்கப்பட்ட பல சிறுவர்கள் பார்வையிழந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்படுவதும் சிறுவர்கள் தான் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதான ஸோராவின் உடலில் 12 பெல்லட் (சிறிய) குண்டுகள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள  SMHS மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர், தன் பால்ய வயதுக்கே உரிய எழுந்து நிற்கும் உறுதியில் நம்பிக்கை ஓய்வதில்லை என்கிற செய்தி தருகிறார்.

ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

ஜோஷ்வா ஐசக் ஆசாத்

 joshua

 

நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.

2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.

இந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ ‘ஆசாதி’ என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.

தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக ‘நம்மால்’ கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இத்தனை கொந்தளிப்பு? வெறும் 21 வயது ‘தீவிரவாதி’ கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது? அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக?

அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான். கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். ஃபேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கின்றன. (இறுதியாக அமர்நாத் யாத்ரீகர்களை கொல்லக்கூடாது என்கிற பதிவை வெளியிட்டுள்ளான்.)

சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர். புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் ‘காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்’. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். இணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

ஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.

ஜோஷ்வா ஐசக் ஆசாத், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

திலீபன் மகேந்திரன்

சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம்.

திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார்.

இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!

இதைக் காரணம் காட்டி உடன் யாருமில்லை என்பதை வைத்து ஆறுமுகத்தை நிர்வாகம் வெளியேற்றிவிட்டது.

எழுந்து நகரவும் முடியாததால் மருத்தவமணை வளாகத்துக்குள்ளளேயே அவர் கிடந்தார். இதைப் பொறுத்துக்கொள்ளாத நிர்வாகம் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வளாகத்தின் வெளியில் நடுரோட்டில் அனாதையைப் போல் தூக்கி வீசிவிட்டது. இன்று காலை இது குறித்து மருத்தவமணை அதிகாரி சையத் அசீஸ் பாஷா உசைனி அவர்களிடம் தோழர் வே. பாரதி முறையிட்டார். இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் “உங்களால் என்ன முடியுமோ பாத்துக்கொள்ளுங்கள்” என்று நிர்வாகம் திமிரோடு பதிலளித்து விட்டது.

இந்த நொடியிலிருந்து அவர் எங்கள் பொறுப்பு எங்களில் ஒருவர் இரவும், பகலும் அவருடனேயே இருந்து பார்த்துகொள்வோம் என்று தோழர் பாரதி உறுதிகொடுத்தும் சையத் அசித் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

திரு ஆறுமுகத்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உரிய நடைமுறையின்றி ஆறுமுகத்தை தெருவில் தூக்கி போட்டதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

நோயாளி ஒவ்வொருவரையும் மனித கண்ணியத்நோடு நடத்தப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி ( 10-05-2016) 3 மணி அளவில் அண்ணா வளைவு அருகில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனை வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தை தமிழ் சமூகம் அறியும் விதமாக நேரில் வந்து செய்தி எடுத்து தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு உரிமையுடன் வேண்டுகிறேன் ..

9865107107./ வே. பாரதி.

90 03 406819/ திலீபன் மகேந்திரன்

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

கேரளத்தில் முன்னணி வணிக நிறுவனமாக கல்யாண் குழுமம் கல்யாண் ஜுவல்லர்ஸ்,  கல்யாண் சாரீஸ் என்ற பெயரில் பல ஊர்களில் கடைகளை நடத்தி வருகிறது. இங்கே பணியாற்றும் பெண்களுக்கு சரியான கழிப்பிட வசதியைக் கூட இந்நிறுவனம் செய்து தரவில்லை. சிறுநீர் கழிக்கக் கூட தங்களுக்கு மேலுள்ள கண்காணிப்பாளரிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டிய நிலை. அவர்களிடம் சொல்லும்போது பல சமயங்களில் “ட்யூப்பை புடவைக்குள்ள சொருகி வெச்சிக்கலாம் இல்ல” என்பது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களையும் விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றிய பெண்கள்  அனுபவித்துள்ளனர்.  கழிவறை வாசல்களில் கூட கேமராக்கள் பொருத்தி சதா கண்காணிப்பிலே ஊழியர்களை வைத்திருக்கின்றனர்.  12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே வழங்கியிருக்கின்றனர். எல்லா நிறுவனங்களிலும் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் கல்யாண் ஊழியர்கள் இவற்றை முடிவுக்கு கொண்டுவர நினைத்தனர்.  2015-ஆம் ஆண்டும் ஜனவரி 4-ம் நாள் ‘அமர்வு போராட்ட’த்தை சில பெண்கள் இணைந்து நடத்தினர்.

kalyan jewls

திரூச்சூர் மாவட்ட  Kovilakathumpadam என்ற ஊரில் இருக்கும் கல்யாண் சாரீஸ் நிறுவன ஊழியர்கள் எஸ்.கே. பத்மினி, பி. மாயாதேவி, தேவி ரவி, ரஞ்சனி தாசன், அல்போன்சா தாசன், பீனா சோஜன் ஆகியோர் முறைசாரா தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் 100 நாட்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

ஆரம்பத்தில் கல்யாண் நிறுவனம், “எங்களுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான வசதிகளைத் தருவதால்தான் இவர்கள் போராடுகிறார் போலும்” என பேசியது. இதே நிறுவனம்தான் மகாராணி போல அலங்கரிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு அடிமைச் சிறுவன் சாமரம் வீசுவதுபோல விளம்பரத்தை வடிவமைத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களை கீழ்மையாக நசுக்கும் அதை பெருமிதமாக நினைக்கும் மனநிலைதான் இத்தகைய விளம்பரத்தை எடுத்திருக்க முடியும்.

இந்நிலையில் பெண் தொழிலாளர்கள் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக 100 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 15-ஆம் நாள், தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டது. 100 நாட்களுக்குமான ஊதியம் வழங்கப்பட்டது. விற்பனை பிரதிநிதிகள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டன. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டது. பி எஃப் பிடித்தம் செய்யப்பட்டது. ஊதிய கணக்கு சரியான வழங்கப்பட்டது.

இத்தனையையும் சாத்தியப்படுத்தியது, இந்தப் பெண்களின் தொடர் போராட்டமே! இத்தகைய போராட்டமும் முன்னெடுப்பும் தமிழகத்தில் ஏன் சாத்தியமாகவில்லை? போராட்டங்கள் கண்டு நாம் ஏன் அஞ்சுகிறோம்? மே தினத்தில் சிந்திப்போம்.

தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

IF

மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர்.  அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)

 

IF

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை 16, 2010-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் விடுதலை கோஷம் எழுப்பினர். காஷ்மீரில் ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவத்திடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதும், பொதுமக்களை கொல்லும் ராணுவம் ஆட்சி திரும்பப் பெற வேண்டும் என்பதும் இவர்களுடைய கோரிக்கை.

(AFP PHOTO/Rouf BHAT (Photo credit should read ROUF BHAT/AFP/Getty Images)

****

IF

போலிசாருடன் போரிடும் இவர்கள் Krishak Mukti Sangram Samiti (KMSS) என்ற அமைப்பைச் சேர்ந்த களப்பணியாளர்கள். குவாஹாத்தியில் ஜூன் 22, 2011-ஆம் ஆண்டு அரசு நிலத்தில் வசித்த குடிசைவாசிகளை விரட்ட போலீஸ் களமிறங்கியபோது அதைத் தடுக்க இந்தப் பெண்கள் போராடினர். இதில் மூன்று பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  (AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)

****

கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்

கோவையில் தொடரும் போராட்டம் “சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு” சார்பில், கன்னய்யா குமாரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி திங்கள்கிழமை “பி.எஸ்.என்.எல். அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) , இந்திய மாணவர் சங்கம் (SFI),.இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா(CFI), புரட்சிகர மாணவர் முன்னணி (RSF), திராவிடர் மாணவர் கழகம், சமத்துவ மாணவர் கழகம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS), மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

#வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

அரசு பணிகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, திங்கள் கிழமை மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், வேப்பேரி ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒரு கேட்டுக்குள் பூட்டிவைத்து, போலீஸார் கைது செய்ய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண், தங்களுடைய போராட்டத்தை அரசு அடக்குமுறைகளால் தடுக்கப்பார்க்கிறது என ஆவேசமாகப் பேசினார்.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாற்று திறனாளிகள், அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஒரு ஏமாற்று வேலை என தெரிவித்தார் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான தீபக்.

இதனிடையே, வரும் 16-ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ: அல்போன்ஸ் ரத்னா

போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறதா நியூஸ் 7 தமிழ்?

போராட்டம் என்பது மக்கள் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் ஒரு வடிவம். அரசின் எல்லா அதிகாரக் கதவுகளையும் தட்டிவிட்டுத்தான் இறுதியாகப் போராட்டத்தை மக்கள் கையில் எடுக்கிறார்கள். இவ்வகையில் ஊடகங்கள் போராட்டங்களை இன்னும் விரிவாக அனைத்து தரப்பினரை(அரசு தரப்பு உள்பட)யும் சேரும் பணிகளைச் செய்பவை. செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்கும். அதைவிடுத்து “தினந்தோறும் 20 போராட்டங்கள்: நிம்மதி இழந்து தவிக்கும் போலீசார்” என்று தலைப்பிட்டு செய்தி எழுதுவது போராட்டங்களை மழுங்கடித்து, போராட்டங்களை விரும்பாத சர்வாதிகாரத் தன்மையை நிலைநாட்டுவதற்கு உதவி புரிவததாகத்தான் தோன்றும்.

போராட்டத்தைக் கண்காணிப்பதும், அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காமல் போராட்டத்தை கட்டுப்படுத்துவதுதான் காவல்துறையின் பணி. அரசுக்கே போராட்டங்களை முடக்கும் எண்ணம் இல்லை எனும்போது, ஊடகங்கள் ஏன் போராட்டங்கள் என்றால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்ற கோணத்திலே செய்தி வெளியிடுவது ஏன்?

பொது மக்கள் என்பவர் யார்? தண்ணீர் வரவில்லை என்னும் போது அதிகாரத்தின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டு இறுதியாக சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இப்படிப் போராடுகிறவர்கள் மக்கள் இல்லையா? சாலையில் இந்தப் போராட்டத்தால் அதிகபட்சம் அரைமணி நேரத்தை இழக்கும் பொது மக்களின் துயரம்தான் இங்கே முக்கியமானதா? அல்லது மாதக் கணக்கில் வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கும் மக்களின் துயரம் முக்கியமானதா?

நியூஸ் 7 தமிழ் பல நல்ல விவாதங்களை முன்னெடுக்கிறது. ஆனால், போராட்டங்களைக் கொச்சைப் படுத்தும் இத்தகைய செய்திகள் யாரைத் திருப்திப் படுத்த என்கிற கேள்வியும் இங்கே எழுகிறது. தேர்தல் வரும்போது, ஆளும் அரசுகள் வேகமாக பணிபுரிவதாக காட்டிக் கொள்கிறார்கள். நலத்திட்டங்களை செயல்படுத்த முனைகிறார்கள். அந்த சமயத்தில்தான் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை சொல்ல முடியும். இதில் ஆரம்பம் முதலே எல்லா அமைப்புகளும் தவறாக இருக்கின்றன. அவையெல்லாம் சரியாக இயங்கியிருந்தால் ஏன் போராட்ட வடிவத்தை மக்கள் முன் வைக்கப் போகிறார்கள்?

போராட்ட வடிவத்தையே புரிந்து கொள்ளாத ஊடகங்கள், எப்படிப்பட்ட பார்வையில் இந்தச் சமூகத்தை அணுகும்? அரசியலை அணுகும்? ஓரிருவரை வைத்துக்கொண்டுதான் தங்கள் நடுநிலை, அறம் பேணும் முகமூடிகளை அணிந்துகொள்கின்றன இந்த ஊடகங்கள்!

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தி இங்கே…

தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தினந்தோறும் 20 போராட்டங்கள் நடப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் நிம்மதி இழந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு சாதி அமைப்புகளும், அரசு துறைகளில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை சென்னையில் நடத்தி வருகின்றன.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சியினருக்கே தங்கள் வாக்கு எனவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 போராட்டங்கள் நடப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் நிம்மதி இழந்துள்ளனர்.