”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.  ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, … Continue reading ”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. "ஆண்டாள் ஒரு தேவதாசி" என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் "அவரது தலை உருள வேண்டும்" என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் … Continue reading “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்

கலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், “மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்”! தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும். குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை “அது வேறொரு மாநில விவகாரம்“ என்று சொன்ன … Continue reading “கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்

தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை போரின் போது தமிழர்களுக்கு துரோக இழைததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார். இது பற்றி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, “சீமான் என்கிற யாரோ ஒரு பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார் இளங்கோவன். இளங்கோவனின் பேச்சுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் … Continue reading தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார். இதைப் படியுங்கள்: தந்தி … Continue reading “மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு!

பேராசிரியர் அருணன் சமையல் எரிவாயுவைப்போல இனி மண்எண்ணைக்கும் மான்யம் வங்கிக் கணக்கில் போடப்படுமாம். அதாவது அதைப் போல இதையும் வெளிச்சந்தை விலையில்தான் வாங்க வேண்டுமாம். அப்படி வாங்கப் பழக்கிவிட்டு பின்னர் மான்யத்தை வெட்டுவார்கள். இப்போது சமையல் எரிவாயுவிற்கு வருமான வரம்பு வைத்து வெட்டிவிட்டார்கள் அல்லவா அப்படி மண்எண்ணைக்கும் வெட்டுவார்கள் . அதைப் பயன்படுத்துவோர் பரம ஏழைகள் என்பதைச் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை பா ஜ க அரசு. பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. ஐந்து லட்சம் கோடிக்கு மான்யம் தரும் … Continue reading மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு!