பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாளின் கடிதம்!

பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்: வணக்கம். ஜுன் 11 ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து 27 (இருபத்தேழாண்டுகள்) முடியப் போகிறது! அவரோடுள்ள ஏனைய அறுவரும் அவ்வாறே!! எங்கள் வாழ்நாளுக்குள் எம் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலையாகி வருவாரா எனும் அச்சம் மிகுகிறது ! ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள். ஏன் தண்டித்தார்கள். ஏன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்று புரியவில்லை? ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய CBI அதிகாரி … Continue reading பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாளின் கடிதம்!

பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?

வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன. இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் … Continue reading பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?

பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சக கைதியால் தாக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க. ஆட்சியில் சிறையிலே இருக்கும் பேரறிவாளன் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு, மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கும், சிறையிலே இருக்கும் கைதிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலைமைதான் உள்ளது என்பதற்கும் எடுத்துக்காட் டாக உள்ளது. மற்றொரு கைதியால் தாக்கப்பட்டார் என்றாலும், அவருக்கு இரும்புக் கம்பி … Continue reading பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி

சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்; காரணம் சரியாகத் தெரியவில்லை என்கிறார் வழக்கறிஞர்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார் என செய்தி வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை. அறை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கையில் காயமடைந்த அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் 6 தையல்கள் போடப்பட்டிருப்பதாக சொல்கிறது அந்தச் செய்தி. தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் தாக்குதலுக்கான காரணம் குறித்து … Continue reading சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்; காரணம் சரியாகத் தெரியவில்லை என்கிறார் வழக்கறிஞர்

எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் … Continue reading எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

“பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு

இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், குற்றவாளி இல்லை என பல்நோக்கு விசாரணை குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பிய பேரறிவாளனுக்கு, அளித்த பதிலில் இதைக் குறிப்பிட்டிருக்கிறது பல் நோக்கு விசாரணைக் குழு. இதுகுறித்து வழக்குரைஞர்.சிவக்குமாரிடம் பேசினோம். "இராஜீவ் காந்தி கொலை வழக்கு இரண்டு நீதிமன்றங்களில் நடைபெற்றது.ஒன்று தடா நீதிமன்றம். மற்றொன்று பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை. தடா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் … Continue reading “பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு

“வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

ஆனந்த விகடனில் கடந்த வாரம்(6.4.2016)வெளியான ‘போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ப. திருமாவேலன் ‘வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!’ என்ற தலைப்பில் தன்னுடைய முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், “மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், 'போர் வாள் அட்டக்கத்தி ஆன … Continue reading “வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

“தமிழக அரசு நினைத்தால் இன்றே எழுவரை விடுவிக்க முடியும்; கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை”: நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் விடுவிக்கும் முடிவு தொடர்பாக மத்திய … Continue reading “தமிழக அரசு நினைத்தால் இன்றே எழுவரை விடுவிக்க முடியும்; கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை”: நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்

எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு கடிதம்: உண்மை நிலவரம் என்ன?

வில்லவன் இராமதாஸ் ராஜீவ் கொலை வழக்கு - எழுவரையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை தமிழக அரசு கேட்டிருப்பதாக செய்தி. யாரும் உடனே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டாம். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று தரப்பும் (தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம்) தமிழர்களுக்கு விரோதமானவை. ஒருவேளை தேர்தல் ஆதாயத்துக்காக தமிழக அரசு அவர்களை விடுவிக்க விரும்பினால் அவர்களை பரோலில் விடுவிக்கும் வேலையைத்தான் அரசு முதலில் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் கருத்து கேட்பதில் உள்ள … Continue reading எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு கடிதம்: உண்மை நிலவரம் என்ன?