கண்ணன் ராமசாமி சுவாதியின் கொலைக்கு உளவியல் ரீதியிலான அழகியல் கண்ணோட்டத்தில் ஒரு முகம் கொடுத்திருக்கிறது ஒரு செய்தி. “நீ தேவாங்கு போல் இருக்கிறாய்!” என்று சுவாதி சொன்னதால் ஆத்திரம் அடைந்ததாக ராம்குமார் குறிப்பிட்டிருக்கிறார் என்கிற செய்தியை நாம் எல்லோரும் படித்தோம். ராம்குமாரின் வாக்குமூலம் குறித்த முழுமையான உண்மைகள் நமக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இருப்பினும், இதுவே இறுதி உண்மை எனக் கருத முடியாது என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இது போன்ற விமர்சனங்களை நாம் பிறரிடம் இருந்து எதிர்கொள்கிறோமா? … Continue reading தேவாங்கு அரசியல்!
குறிச்சொல்: பெண்
காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ் காதல் என்ற பெயரில் அடுத்தடுத்து பெண்கள் மீதான நான்கு வன்முறைகள். அதில் இரண்டு அப்பட்டமான கொலைகளாக முடிந்திருக்கிறது. முதலில் இவற்றை ‘காதல் கொலைகள்’ என்று வகைப்படுத்துவதே தவறு. இதில் காதல் என்பதே கிடையாது. நமது ‘இளைஞர் திரள்’ காதல் என்று நம்பும் ஒன்றின் உள்ளீடற்ற மூர்க்கமே இத்தகைய கொலைகள். முன்பெல்லாம் காதல் சார்ந்த தற்கொலைச் செய்திகள்தான் காணக்கிடைக்கும். இப்போது அவை குறைந்திருக்கின்றன. இதன் பொருள் தற்கொலைகள் குறைந்துவிட்டன என்பதல்ல. அவை காதலித்தவளின் மீதான … Continue reading காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்
“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி
‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார். https://www.facebook.com/psrf.india/posts/10153667450916994 “முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். இதுபோன்ற நேர்மறையான கதாபாத்திரங்களை காட்டியதற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித்துக்கு என்னுடைய பாராட்டை எவரேனும் தெரிவியுங்கள். அதுபோல, அடுத்த படைப்பில் கருப்புத் தோலுடைய பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைக்க … Continue reading #கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு
விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை
பதிப்பாளர் விலாசினி மீதான எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவுக்கும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீதான முகநூல் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் திவ்ய பாரதி இந்தப் பதிவை எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் Karthikeyan N. அவருடைய பதிவு கீழே: விலாசினியையும், கிருபா முனுசாமியையும் ஒரே தட்டில் வைத்து பேசும் இந்த போராளி பெண்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இங்கு எந்த காலத்திலும், சமூக வெளியில், பொது சமூகத்தில் விலாசினியும், கிருபாவும் "பெண்" என்ற பொதுப்படையான பார்வையில் பார்க்கப்பட போவதே … Continue reading விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை
ஓலா ஓட்டுனரை ‘பொறுக்கி” என்று திட்டினாரா விலாசினி?;அதுதான் பிரச்சனையின் மூல காரணமா: விமலாதித்த மாமல்லன் கட்டுரை…
பதிப்பாளர் விலாசினி ரமணி, அண்மையில் ஓலா ஓட்டுநர் தன்னை மிரட்டியதாக முகநூலில் பகிர்ந்துகொண்ட பதிவு, பரவலாகப் பகிரப்பட்டு, வெகுஜென ஊடகங்களிலும் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஓலா கார் ஓட்டுநர் மீது போலீஸ் நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலாசினி ரமணி, தனக்கு நேர்ந்ததை ‘மிகைப்படுத்தி’ சொல்வதாகவும் இதில் ஓலா ஓட்டுநர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்தாளர் விமாலித்த மாமல்லன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவருடைய பதிவு இங்கே... “உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” … Continue reading ஓலா ஓட்டுனரை ‘பொறுக்கி” என்று திட்டினாரா விலாசினி?;அதுதான் பிரச்சனையின் மூல காரணமா: விமலாதித்த மாமல்லன் கட்டுரை…
“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்
தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவரும் விலாசினி ரமணிக்கு நடந்த சம்பவம். இந்த சம்பவம் குறித்தி விலாசினி முகநூலில் எழுதியுள்ள பதிவு: “இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் … Continue reading “கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்
முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?
பா. ஜீவசுந்தரி மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல், தாவர, சங்கம சொத்துக்களாக மதிப்பிடாமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள் என்பதை வலியுறுத்தலாம். அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன. படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்ற விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். … Continue reading முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?
கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி
நாச்சியாள் சுகந்தி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது … Continue reading கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி
#இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!
Vinitha P M Swamy #இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு 'புதிய' படைப்பு... இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன? பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்... நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி? "எங்கள் … Continue reading #இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!
#பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!
புதியவன் ராபர்ஸ் ஃப்ராஸ்டின் கவிதையை பகிர்ந்தபோது, நண்பர் ஒருவர், “அக்னிபத்” கவிதையையும் தமிழில் தாருங்களேன் என்று கேட்டார். அக்னிபத் கவிதை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதியது. இந்தியில் மிகப்பிரபலமான கவிதை. அப்படியே தமிழில் தருவது சாத்தியமே இல்லை. முயற்சி செய்திருக்கிறேன். இந்தத் தமிழாக்கம் உலகின் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம் * மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கலாம் அடர்ந்தும் வலுவேறியும் இருக்கலாம் ஒற்றை இலையின் நிழலையும் கேட்காதே தேடாதே மயங்காதே நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை ஒருபோதும் களைத்து விடாதே … Continue reading #பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!