பெண் விடுதலை என்பது ஆடையில்தான் இருக்கிறதா? ஆசிரியர் சபரிமாலா கருத்துக்கு எதிர்வினை

செயல்பாட்டாளரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான சபரிமாலா, பள்ளிகளில் மாணவிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அண்மையில் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிந்திருந்தார். பள்ளிகளில் பாவாடை அணிவதை தடை செய்வதும், மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை பணியமர்த்துவதும் தான் மாணவிகள் மீதான பாலியல் சீண்டலகளை தவிர்க்கும் என அதில் கூறியிருந்தார். சபரிமாலாவின் கருத்து சர்ச்சையான நிலையில், தமிழ் முகநூல் பக்கங்களில் பலர் எதிர்வினை ஆற்றினர்.  எழுத்தாளர் ஸ்ருதி: ஆடை அரசியல் கடலை போல பெரிய … Continue reading பெண் விடுதலை என்பது ஆடையில்தான் இருக்கிறதா? ஆசிரியர் சபரிமாலா கருத்துக்கு எதிர்வினை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?

பா. ஜீவ சுந்தரி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி மசோதாவைச் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது தோற்றுப் போகிறது. சட்ட மன்றத்திலும் கூட தேவதாசி முறையை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மசோதாவுக்குப் போதிய ஆதரவில்லை. முன்னர் பால்ய விவாகத் தடை கோரியபோதும் இதே எதிர்ப்பு இருந்தது. இவையெல்லாம் அன்று மிகப் பெரிய சம்பிரதாய மீறல்கள்... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரும் பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டியைப் போற்றினார்கள். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியே … Continue reading டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?

சமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்?

பா. ஜீவ சுந்தரி 34 பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாகச் செயல்படுவது என முடிவெடுத்து  பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்கள், மதம் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்படும் வெறியாட்டங்கள், படுகொலைகள் என அடுத்தடுத்து பெண்கள் பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான நிகழ்வு களுக்குப் பின் இனியொரு முறை பெண்கள் … Continue reading சமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்?

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்

“ஒருவரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதற்காக அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று ஆகிவிடாது. அவர்களுடைய குற்றங்களைக் கண்டு அமைதியாக இருப்பது, உடந்தையாக இருப்பது போன்றதாகும்.”

கேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil!

ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய குர்திஸ் இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil (சூரிய பெண்கள்) என்னும் ஃபிரஞ்சு படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர் இவா ஹசோன். 2015-ஆம் ஆண்டு பேங்க் பேங்க் என்ற பதின்பருவ காதலை மையப்படுத்திய, அதுகுறித்து கட்டமைப்பை உடைக்கும் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இது இவாவின் இரண்டாவது படம்.  கோல்ஷிஃப்டெ ஃபர்ஹானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Les Filles … Continue reading கேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil!

சாவித்திரி என்னும் ஆளுமையை வீழ்த்திய காதல்: குட்டிரேவதி

ஓர் உறவிலிருந்து இன்னோர் உறவிற்கு நகரும் வாய்ப்புகளும் சலுகைகளும் ஆண்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், ஒற்றைக்காதலை மனதில் உயர்த்தி வைத்து அதனடியிலேயே சரணடைந்து கிடைக்கும் பெண்களின் தன்மை, ஒரு கலையரசியையே வீழ்த்தியிருக்கிறது.

லண்டன் தேவாலய முதல் பெண் பிஷப்பாக சாரா முல்லாலே நிறுவப்பட்டார்!

கிபி இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட லண்டன் தேவாலயத்தின் முதல் பெண் பிஷப்பாக சாரா முல்லாலே நிறுவப்பட்டுள்ளார். லண்டன் தேவாயத்தின் 133-வது பிஷப் ஆவார். சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் மூன்றாவது மூத்த பிஷப் என்கிற பெருமையும் 56 வயதான சாராவுக்கு உண்டு. செவிலியரான சாரா முல்லாலே, தனது பதவி ஏற்பு விழாவில், ‘தற்போது லண்டன் நகரம் எதிர்கொண்டுவரும் குற்றங்கள் வன்முறைகள் குறித்து பேசுவது அவசியம்’ என தெரிவித்தார். தேவாயல சூழலுக்குள் நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்தும் அவர் பேசினார். … Continue reading லண்டன் தேவாலய முதல் பெண் பிஷப்பாக சாரா முல்லாலே நிறுவப்பட்டார்!

அன்னையர் தின கட்டவிழ்ப்பு: கொற்றவை

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
நான் ஆகச்சிறந்த காதலி, ஆகவே சகியாக் காதலை துறப்பவள்...

கேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும்

கென்ய திரைப்பட இயக்குநர் வனூரி கையூ இயக்கிய  இரு பெண்களின் ஓரின பால் ஈர்ப்பை பேசும் ‘ரொபிஃகி’ (Rafiki) கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கென்யா சார்பில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் படம் ‘ரொபிஃகி’. ஆனால், கென்யாவில் இந்தப் படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இயக்குநர் வனூரி கையூவை கைது செய்து சிறையிலடைக்க முயற்சி நடந்துவருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஓரின பால் ஈர்ப்பை இயல்பான விஷயமாக காட்டிய குற்றத்துக்காக இந்தத் திரைப்படம் கென்யாவில் … Continue reading கேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும்

பெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான அனைத்துப் போராட்டத்திற்கும் வெகுஜென பெண்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். அவர்களது பிரச்சினைகளை தனி கவனம் செலுத்துவதன் மூலமும், அவர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தேவைகளுக்கு சிறப்பு போராட்டங்களை வளர்ப்பதன் மூலமும் இந்தப் பெண்களை வென்றெடுக்க வேண்டும்.

சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

அண்மையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நீங்க போட்டிருக்க கண்ணாடி ரொம்ப நல்லா இருக்கு’ என மூன்றாம் தர பொறுக்கி போல நடந்துகொண்டார். ‘பொறுக்கி’ என்பது கடுமையான வார்த்தையாக இருக்கலாம்.  சற்று விளக்கமாகவே பார்க்கலாம். நீங்கள் ஒரு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மதிக்கத்தக்க தோற்றத்துடன் உள்ள ஒருவரிடம் பஸ் எப்போது வரும் என கேட்கிறீர்கள். அவர் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் … Continue reading சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

ஆஷிஃபாவை முன்வைத்து!: குட்டிரேவதி

பெண் - ஆண் மரபணுக்கள் வரை சென்று, வாஷிங்பவுடர் போட்டுக் கழுவும் அயர்ச்சியான வேலை நமக்கு இருக்கிறது. ஆனால் எளிய வழி ஒன்றும் இருக்கிறது.

வைத்தீஸ்வரியை வன்புணர்வு செய்தது எப்படி? பொதுமக்கள் முன்னிலையில் நடிக்க வைத்த போலீஸார்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி(16), புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பரதூர் வயல்வெளிப்பகுதியில் வைத்தீஸ்வரி உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்த நிலையில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்திருந்தது. இதனால் வைத்தீஸ்வரி … Continue reading வைத்தீஸ்வரியை வன்புணர்வு செய்தது எப்படி? பொதுமக்கள் முன்னிலையில் நடிக்க வைத்த போலீஸார்

நான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா சங்கர்

நான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய இளையவர்களை அதாவது என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன்.

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே!

பெண் ஆனதால், எழுதுவதை விட ஆயிரக்கணக்கில் லைக் வாங்குவது என் படங்கள்தான்.
முகத்தையும் தாண்டி நான் பேசத் துவங்கினேன்: முலையைப் பற்றி, யோனியைப் பற்றி, தூமைத்துணியைப் பற்றி, ரதியைப் பற்றி. ஒவ்வொரு சொல்லும் தாக்குதலுக்குள்ளானது.

”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்

ஆஸ்திரிய எழுத்தாளர்களில் இவரைப் போல் புகழப்பட்டவரும் இல்லை; வெறுக்கப்பட்டவர்களும் இல்லை. 2004-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு எல்ஃபீரிட்டுக்கு வழங்கப்பட்டது.

“உங்கள் போலிக் கண்ணீரை பத்திரமாக உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்”: மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி பெண்கள் ரத்த காயத்துடன் காவல் நிலையத்துக்கு சென்றால் கூட தாக்கிய ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை காவல்துறை. பாதிக்கப்பட்ட பெண்களுடன் நாலைந்து முறை அலைந்து அரசியல்வாதிகள் சிபாரிசு கொடுத்துதான் FIR போட வைத்திருக்கிறேன். எல்லா தரப்பிலிருந்தும் நெருக்குதல் வந்து கட்ட பஞ்சாய்த்துதான் நடக்கும். அதற்குள் அந்த பெண்ணின் குடும்பம் சோர்ந்து இதோடு விடுமா என்று துஷ்டரையும் அயோக்கியரையும் கண்டு தூர விலக நினைப்பர். மகா பொதுசனம் ஆணின் மன வக்கிர ஆட்டத்தை எல்லா வெளிகளிலும் … Continue reading “உங்கள் போலிக் கண்ணீரை பத்திரமாக உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்”: மாலதி மைத்ரி

”அம்மாக்களே போராடத் தெருவுக்கு வாருங்கள்!”: குட்டிரேவதி

குட்டிரேவதி இங்கே எந்த அம்மாவும் தெருவிற்கு வந்து போராடுவதில்லையோ, அழகேசன்களை, யஷ்வந்த்களை வளர்த்து சமூகத்திற்குத் தாரை வார்த்துவிடுகிறார்கள்.  அம்மாக்கள் எல்லோரும் தம் கணவர்களுடன் தான் போராடிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ. Three billboards outside ebbing, Missouri என்றொரு படம். இந்த முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற படம். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட தன் மகளுக்காகப் போராடும் தாய் பற்றிய படம். உலகெங்கிலும் நடக்கும் சம்பவங்களின் உணர்வுத்தொகுப்பு போல் இருந்தது. தாயின் போராட்டத்தை மடக்கும், … Continue reading ”அம்மாக்களே போராடத் தெருவுக்கு வாருங்கள்!”: குட்டிரேவதி

ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ் நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்! நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் … Continue reading ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்

பெண்களுக்கு ‘முடியாது’ என சொல்லும் உரிமை இல்லையா?

அமுதா சுரேஷ் "என்ன மாதிரி பையன்கள் பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" "நீ விரும்புறவனை விட உன்னை விரும்புறவனைக் கட்டிக்கோ" "பொண்ணுன்னா அடக்கம் வேணும்" இந்த வசனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒன்று ஏழ்மை, சரியான கல்வியில்லாமை, திரைப்படங்களைப் பார்த்து, தம் ஆதர்ச ஹீரோவை போன்ற "ஆணாதிக்க" திமிர்த்தனமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொன்று அளவுக்கதிகமான பணம், சுதந்திரம், பெற்றோர்களின் கவனிப்பு, கண்டிப்பு இல்லாத இளைஞர்கள், தான் நினைக்கும் எதுவும் தனக்கே கிடைத்திட வேண்டும் என்ற மனநிலை, … Continue reading பெண்களுக்கு ‘முடியாது’ என சொல்லும் உரிமை இல்லையா?

நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு முன்னுதாரணமானவரா?

சாதனைப் பட்டியல்களில் நிர்மலாக்கள் நிரம்பி வழிவதும், பட்டியல் சாதி, பழங்குடிப் பெண்கள் இல்லாமல் இருப்பது தற்செயலானதா?

மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!

பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான ‘விடுதலை கலை இலக்கியப் பேரவை’ விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளை ‘திருமா 55’ என்ற பெயரில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி சிதம்பரம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் சமூக செயல்பட்டாளருமான கௌசல்யா கலந்துகொண்டு பேசினார். தன்னுடைய உரையை அவர், தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்...அது இங்கே... “நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமில்லாதது; … Continue reading பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா

உங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்வீர்களா?

நடுஇரவில் ஒரு பெண், இரண்டு ஆண் நண்பர்களுக்கு இடையில் படுத்து இருப்பது காமத்தை தேடி அல்ல; ஆறுதல் தேடி மட்டும் தான் என்று பக்குவமாய் புரிந்து கொள்ள முடியுமா?

இந்திரா காந்தியின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் நோய்மனநிலை!

இந்திரா காந்தி என்கிற பெண்ணின் ஆளுமை குறித்து விவாதிப்பது தான் நேர்மையின் குணம். அதை விடுத்து அவர் படுக்கை அறையை எட்டிப் பார்த்து அவருடைய ஆளுமையை விவாதிப்பது நோய் மனநிலையின் கூறு.

ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் நடித்ததில் பெருமையில்லை: ஷ்ரேயா

இந்தி நடிகர் அபய் தியோல்  தனது டிவிட்டர் தளத்தில் " ஃபேர்னெஸ் கிரீம்களை நடிகர்கள் ப்ரோமொட் செய்வது அர்த்தமற்றது, தவறானது, நிறவெறி பிடித்தது" என்று எழுதியது முதல் அது பற்றிய விவாதங்கள் நடிகர்களுக்கிடையே காரசாரமாக நடந்து வருகிறது. ஃபேர்&லவ்லி கிரீம் விளம்பரத்தில் நடித்தவரான‌ ஷ்ரேயாவிடம் இது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  "ஃபேர்னெஸ் கிரீம்களை நடிகர்கள் ப்ரோமோட் செய்யக்கூடாது என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. நிறமாக இருக்க வேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை. இந்தியர்கள் நிறத்தின் பின்னால் … Continue reading ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் நடித்ததில் பெருமையில்லை: ஷ்ரேயா

வளரும் பெண் பிள்ளைகளை அணுகுவது எப்படி?

கே. ஏ. பத்மஜா வளரும் பெண்பிள்ளைகளை அணுகும் முறைகள் ஒரு பெண்ணிற்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை முடிவு செய்வது ஆணின் விந்தணுக்களில் இருக்கும் குரோமோசோம்தான். ஆனால், ஏனோ இந்த சமூகம் பெண்பிள்ளை பிறந்தால் தாயை மட்டும் குறைசொல்லும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அம்மா என்பவள் சுற்றி இருப்பவர்களின் ஆதரவும், வாழ்த்துகளும் பெரிதாய் இல்லாதபோதும் பெற்று எடுத்த பிள்ளைமேல் துளியும் பாசம் குறையாமல் வளர்க்கிறாள். இன்று பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பருவ வயதை எட்டும்போது ஒருவித பதற்றத்துக்கு … Continue reading வளரும் பெண் பிள்ளைகளை அணுகுவது எப்படி?

ஆண்களே அந்த மூன்று நாட்களுக்கு தயாரா?

கே. ஏ. பத்மஜா பொதுவாய் எந்த ஆணும் தனித்து இருப்பது அரிது. காதலி, மனைவி, அக்கா, தங்கை, அம்மா இப்படி ஏதோ ஒரு பெண் உறவு அவனை சூழ்ந்து கொண்டுதான் இருக்கும். பெண் தன்னை ஒரு ஆண் மதிப்பதாக,பாசம்வைத்து இருப்பதாக உணரும் தருணங்களில் ஒன்று மாதவிடாய் காலத்தில் அவளை பார்த்துகொள்ளும் விதம் .எனவே கொஞ்சம் பெண்களின் அந்த மூன்று நாட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண் பூப்பெய்தது முதல் ஒவ்வரு மாதமும் கருத்தரிக்காத கருமுட்டைகள் கருப்பை சுவருடன் … Continue reading ஆண்களே அந்த மூன்று நாட்களுக்கு தயாரா?

அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலை

அமுதா சுரேஷ் பல வருடங்களுக்கு முன்பு ஓர் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கு, பெற்றவர்கள் பார்த்துத் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள், அவருடைய அப்பா சுயதொழில் செய்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருப்பவர், "நான் வேலைக்கு வருவதே பொழுபோக்கத்தான்" என்று அந்தப்பெண்ணே சொல்லியிருக்கிறார், திருமண நிச்சயத்திற்குப் பின்பு அந்தப்பெண் சோகமாயிருக்க, அதன் காரணத்தை மற்றவர்கள் கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு சிறுவயதிலேயே இதயத்தில் சிறு ஓட்டை இருந்ததாகவும், அதற்கு ஆபரேஷன் செய்து சரிசெய்துவிட்டதாகவும், ஆபரேஷன் செய்த வடுவினால் தனக்குத் … Continue reading அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலை

மவுனம் என்பது சம்மதம் மட்டுமல்ல மவுனம் என்பது எதிர்ப்பும்தான் : ‘செம்ம கட்ட’ என்ற உயர் அதிகாரிக்கு உரத்த குரலில் ஒரு பதில்….

ரேவதி சதீஷ் சொந்த வாழ்க்கைல போன வாரம் நடந்தததை   எழுதவா வேண்டாமா என்று யோசித்ததில், எழுதிவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலை டியூட்டி முடிந்து கிளம்பிய பொழுதில் எதிரில் வந்த இளம் டாக்டர் "இன்னைக்கு 'மால்' மாதிரி இருக்கிங்க" என்று ஹிந்தியில் செப்பியருளினார்.(மால் என்பதற்குச் சரக்கு,செம்ம கட்டை, என்று தமிழில் அர்த்தம் கொள்ளலாம் ) எதிர்பாராத இந்தக் கமெண்ட்டினால் சட்டென்று "எனது உடைகள் ஒழுங்காக இருக்கிறதா" என்று சரி பார்க்க தூண்டப்பட்டேன். … Continue reading மவுனம் என்பது சம்மதம் மட்டுமல்ல மவுனம் என்பது எதிர்ப்பும்தான் : ‘செம்ம கட்ட’ என்ற உயர் அதிகாரிக்கு உரத்த குரலில் ஒரு பதில்….

பெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை?

கே.ஏ.பத்மஜா அது ஒரு சிறு நகரம். பொது நிகழ்ச்சி ஒன்றுக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெண் போலீஸாரும் அடங்குவர். காலை உணவுக்காக ஓட்டல் ஒன்றில் நான்கு பெண் போலீஸார் நுழைந்தனர். அங்கு டேபிள்களில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண்களின் பார்வை அவர்கள் மீது பட்டது. பட்ட அடுத்த நொடியே சட்டென இயல்பாக இருப்பது போல் பாவனைக் காட்டினர். ஆனால், அந்த பெண் போலீஸ் நால்வரும் சாப்பிட்டுவிட்டு கை அலம்பச் சென்றபோது, அங்கிருந்த அனைத்து ஆண்களின் கண்களும் அவர்களின் பின்பக்கத்தை … Continue reading பெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை?

மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி சமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனையைக் கூட ஏதோ இவ்வுலகமே ஒன்று திரண்டு தனக்கு துரோகம் இளைத்து விட்டது போல பெரியதாக உருவகப்படுத்தி, குருதி சொட்ட சொட்ட கதை வசனம் எல்லாம் எழுதி பரிதாபம் ஏற்படுத்தும் விதமாக ஒப்பாரி வைக்கின்றனர். இருக்க … Continue reading மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி

#நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில், “கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு செலுத்தவும், சமமாக நினைக்கவும் தெரியாத ஒரு தலைமுறையையே இம்முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா, நவீனா, கலைச்செல்வி... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களில் சிலர் கொலை … Continue reading #நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

கருத்து: மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்!

நிலவுமொழி செந்தாமரை மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும் முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டி வரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும் சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயே … Continue reading கருத்து: மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்!

“விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள்” ட்விட்டரில் சீண்டியவருக்கு அமலா பாலின் பதில்

நடிகர் அமலா பால் சமீபத்தில் தன்னுடைய திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இது குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டது. இந்நிலையில், செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட அமலாவின் படத்தைப் பகிர்ந்து அதில், “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள் என ட்விட்டியுள்ளார் ஒரு நபர். இதை அந்த நபர் அமலா பாலின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளார். https://twitter.com/SfcRoshan/status/777371731266707456 அந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதற்கு அமலாவின் பதில், “உங்களின் லட்சியம்(அந்த நபர் பெயரில் லட்சியத்தை இணைத்திருப்பதால்) … Continue reading “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள்” ட்விட்டரில் சீண்டியவருக்கு அமலா பாலின் பதில்

‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா  ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். … Continue reading “ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் "விமலாதித்த மாமல்லன்" போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் … Continue reading அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் குறித்து தனது கருத்தொன்றை இட்டிருந்தார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. அதை ஆதரித்தும் எதிர்த்தும் மாற்றுக் கருத்துகள் முன் வந்தன. சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மீகவும் கீழ்த்தரமான, நிறவெறி, ஆணாதிக்க தொனியில் கிருபாவை கடுமையாக எழுதினர். முகநூல் நிர்வாகத்திடம் புகார் அனுப்பிய பிறகு அவை நீக்கப்பட்ட இந்நிலை, வெளிநாட்டில் வசிக்கும் ஆர். தியாகு என்பவர், கீழ்த்தரமான பதிவொன்றை இட்டிருக்கிறார். போகிற போக்கில் திமுக தலைவர் கருணாநிதி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் … Continue reading கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?