குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பா? இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை

வன்முறையும் அரவணைப்பும் சேர்ந்தே குடும்பம் எனும் அமைப்பாக உருக்கொள்கிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இல்லாமல் அதன் சாதகங்களை அனுபவிக்க முடியாது என்பதே அதன் அபத்தம்

மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் … Continue reading மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?

பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.” -இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.

மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

மாதவிடாய் வலியை இயல்பாக்குவதும் கூட பெண்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் வழக்கமான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக புறக்கணிப்பதே ஆகும்.

பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கொள்ளச்சேரியைச் சேர்ந்தவர் ஹரிசாமி. 54 வயதான இவர் ‘புல்லட் சாமி’ என அந்தப் பகுதியில் பிரபலமானவர். தன் பெயரை கங்கேசானந்த தீர்த்தப்பதா என்று மாற்றிக்கொண்டு கேரளாவில் மதிப்பிற்குரியதாக கருத்தப்படும் ‘பன்மன ஆஸ்ரம’த்துடன் இணைந்து செயல்படுவதாக காட்டிகொண்டு வந்திருக்கிறார். ஹிந்து ஐக்கிய வேதி என்ற சங்பரிவார் அமைப்பில் ஹரிசாமி இயங்கியபோது தற்போது கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ள ராஜசேகரனுடன் நெருங்கி செயல்பட்டிருக்கிறார். 2013ஆம் ஆண்டு பாஜக முன்னெடுத்த ஆரன்முலா விமான தளம் … Continue reading பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

சந்திரமோகன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக டெல்லியில் பல நாட்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராடினார்கள். நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனால், பெண்களுக்கு … Continue reading நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் ? ; நயன்தாராவுக்கு சில கேள்விகள்….

அன்புள்ள நயன்தாராவுக்கு… அரைகுறை ஆடையுடன் நடிகைகளின் படங்களை Double Spread-ல் கடை விரித்திருக்கும் புத்தகங்களிலும் (Book Requires it ? ),  thigh-high Slit- கவுன் அணிந்திருக்கும் நடிகைகளின் படங்களை upload-டியிருக்கும் இணையதளங்களிலும் நேற்றில் இருந்து Nayanthara Lashes Out, Lashes Out, என்று கூவிக்கூவி பெண்ணுரிமை விற்றதை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. சரி அப்படி என்னதான் நயன்தாரா Lashes out செய்திருக்கிறார்  என்று படித்தபோதுதான், என்னை போன்ற ஒரு சராசரி ரசிகைக்கு “சுராஜ் விவகாரம், நீங்களும், … Continue reading Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் ? ; நயன்தாராவுக்கு சில கேள்விகள்….

#நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில், “கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு செலுத்தவும், சமமாக நினைக்கவும் தெரியாத ஒரு தலைமுறையையே இம்முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா, நவீனா, கலைச்செல்வி... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களில் சிலர் கொலை … Continue reading #நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு நெருங்குகையில், சென்னை வட்டாரத்தில் திடீர் மழைச்சூழல் தொற்றிக்கொண்டது. ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்வு நடந்தது. இதில் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் பேச்சு, தீர்மானிக்கப்பட்டிருந்த பொருளை மையப்படுத்தியதாக அமைந்தது.   அவரின் … Continue reading பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா  ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். … Continue reading “ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

பத்தி: “புலனாகா அரங்கில் பெண் எழுப்பும் கேள்வி”- கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தமிழ்மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்களில் ஒன்றான அண்ணமார் கூத்து நிகழ்ச்சியை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. தமிழகத்தின் மேற்குப்பகுதியான கொங்குமண்டலத்தின் செழுமையான மரபில் காலூன்றி நடக்கும் கதைப்போக்கும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக் காட்சிகளும் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கில் இந்த நாட்டுப்புறச் சொல்கதை, முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கதைப்பாடலை பலமுறை பாடல் வடிவத்தில் கேட்டிருக்கிறேன். சமீபத்தில், கூத்து வடிவத்தில் நிகழ்ச்சியைப் பார்க்க வாய்த்தபோது பிரமித்துப் போனேன். அதுவும் படுகளக் காட்சி உலகக் காவிய … Continue reading பத்தி: “புலனாகா அரங்கில் பெண் எழுப்பும் கேள்வி”- கௌதம சித்தார்த்தன்

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் "விமலாதித்த மாமல்லன்" போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் … Continue reading அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது … Continue reading டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்   கடந்த வருடத்தில் இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper macஎன்னும் பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூக பிரக்ஞை கொண்ட விமர்சகர்களாலும், பெண்ணியவாதிகளாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சர்வதேச மாடலிங் உலகில் பெண் உடல் எவ்வாறெல்லாம் மாற்றப்படுகிறது மேலும் எப்படி கொச்சைப் படுத்தப்படுகிறது என்று விமர்சகர்கள் விரிவான வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். அதே சமயத்தில் … Continue reading பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் … Continue reading “காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John   ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை. இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை … Continue reading ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

அமுதா சுரேஷ் தினந்தோறும் செய்திகளை வாசிக்கும்போது, பெண்ணுக்கெதிரான ஏதோ ஒரு வன்முறை நிகழ்வை படிக்க நேர்கிறது! அரிதாகப் பெண்கள் நிகழ்த்தும் கொலைகளை விட, ஆண்கள் நிகழ்த்தும் கொலைகளை பார்க்கும்போது ஆண் இனம் மனதளவில் மிருக குணத்தை இன்னும் தாண்டி வரவில்லை என்றே தோன்றுகிறது! "நீ அம்பளைடா, அவளை வெட்டுடா" போன்ற சினிமா வசனங்கள், பெற்றோரின் காசில் வெட்டியாய் திரியும் நண்பர்களின் போதனைகள் என்று உடலளவில் பலம் பொருந்தியதாகக் கருதப்படும் ஆண்மக்கள், மனதளவில் பிறழ்ந்து தங்கள் பலத்தை எப்போதும் ஒரு … Continue reading பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவே...மற்றபடி அவர் முகநூல் அலுவலக விஷயங்களை … Continue reading ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி தமிழில் - பிரேம் “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் மாற்றம். பெண்ணியம் என்பது மனித உரிமையின் ஒரு பகுதி என்பது உண்மைதான், ஆனால் ‘மனித உரிமைகள்’ என்ற பொது அடையாளத்தைப் பயன்படுத்தும் போது பாலரசியலின் மிகக் குறிப்பான, தனித்த சிக்கல்களை அது இல்லாமாலாக்கி விடுகிறது. … Continue reading ‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரளத்தில் ஆட்சியமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேரளத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு ஆகும். கேரள அரசியல் வரலாற்றில் அனைத்து அரசாங்கங்களிலுமே ஒரே ஒருபெண் அமைச்சர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையே இருந்தது. இதை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது பினராயி விஜயன் அரசு.முதல்முறையாக இரண்டு பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இடதுஜனநாயக முன்னணி அரசில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு சீரிய முயற்சி எடுக்கப்பட்டு இரண்டு பெண் தலைவர்கள் … Continue reading கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரள தலித் மாணவி கொடூர கொலை வழக்கில் இருவர் கைது!

கேரள மாநிலத்தில் தலித் மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை குற்றப்பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.   கடந்த வியாழனன்று இரவு  பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மாணவியின் உடலை … Continue reading கேரள தலித் மாணவி கொடூர கொலை வழக்கில் இருவர் கைது!

கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை

சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும். கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது பாலியன் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப் பட்ட செய்தி இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த … Continue reading கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை

”நீங்கள் எங்கே கை வைத்தாலும் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்” சிக்கன் துண்டுகளை விற்க, பன்னாட்டு நிறுவனத்தின் ஆபாச விளம்பரம்

“மார்பு, தொடை, பின்புறம் என எதைத் தொட்டாலும் நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம்” என்கிற ஆபாச வார்த்தைகளுடன் நாண்டோ’ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் விளம்பரம், சமூக வலைத்தளங்களில் வசவுகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. ஜெம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா முதல்கொண்டு பலர் இந்த ஆபாச விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். https://twitter.com/abdullah_omar/status/713763776500137986 டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த இந்த விளம்பரம், பாலியன் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக பெண்ணிய செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். https://twitter.com/whimsydaisy/status/713867173244997632 https://twitter.com/SpoiltWoman/status/713987605277179904 https://twitter.com/anirbanblah/status/713796487281524737 https://twitter.com/PadmajaJoshi/status/713762011490885632 சமூக … Continue reading ”நீங்கள் எங்கே கை வைத்தாலும் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்” சிக்கன் துண்டுகளை விற்க, பன்னாட்டு நிறுவனத்தின் ஆபாச விளம்பரம்

“ஒரு இரவுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்குவீர்கள்” தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு சன்னி லியோன் தந்த அதிர்ச்சி பதில்!

பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை குஜராத் சென்றிருந்தார். குஜராத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் கணவர் டானியல் வெப்பருடன் தங்கியிருந்தார் சன்னி லியோனி.  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு தங்குவதற்காக விடுதி வந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் குடிபோதை கதவைத் தட்டிய ஒருவர் ஒரு உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  அவர் குடித்திருக்கிறார் என்பதை அறிந்த சன்னியும் அவருடைய கணவரும் அவரை அங்கிருந்து வெளியிற்றினர். இந்நிலையில், தேசிய செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் … Continue reading “ஒரு இரவுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்குவீர்கள்” தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு சன்னி லியோன் தந்த அதிர்ச்சி பதில்!

#வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அந்தப்பெண் தேவர் ஜாதி என்றும் அந்த … Continue reading #வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள். அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை … Continue reading தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

தமயந்தி உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்...துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை. இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் தலை வைத்து சாக வேண்டும். துபாய்காரன் வீட்டுக்கு வருகிறான். எதுக்கு வருகிறான்.. விஷயம் தெரிந்தா என்று பயப்படும் பத்மாவதி இப்படி நினைக்கிறாள்..." எடுத்ததுமே அடிப்பானா......எது செய்தாலும் தடுக்க முடியாது. ஊர் மெச்ச தாலி … Continue reading #சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

“பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

கீதா நாராயணன் என் முதல் பணியை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகராகத்தான் தொடங்கினேன்.அதில் நான் கண்ட அனுபவங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குப்போதும். காவல்துறை, நீதிமன்றம்,அரசு மருத்துவமனை தீக்காயத்துறை, பிணவறை என்று சகல சிக்கல்களும் நிறைந்த துறை அது. அதில் ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு உயர்த்திக் கொண்ட சமூகத்தைச்சேர்ந்த பெண். இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறித் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையின் மூலம் தற்காலிகத் தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.காரணம் கணவர் தொடர்ந்து குடித்து … Continue reading “பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆக்கிரமிக்கும் முன் ஈரானிய பெண்கள்!

1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு வாய்ப்புக் கொடுக்கும் தேசமாக இருந்த ஈரான், இஸ்மாயிய அடிப்படைவாதத்தால் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் ஈரானைச் சேர்ந்த பத்தி எழுத்தாளர் ரீடா. இஸ்லாமிய ஆட்சி அமைந்தபிறகு, சிறுமிகள்கூட ஹிஜப் அணிந்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்கிறார். https://twitter.com/RitaPanahi/status/694024501399453696 https://twitter.com/RitaPanahi/status/694025507361280000 https://twitter.com/RitaPanahi/status/693934478884909056 ஹிஜப் அணிய வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1979-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய பேரணி https://twitter.com/RitaPanahi/status/693933421836390400

தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு மதுவில் மயக்க மருந்து: பாரில் நடந்த சம்பவத்துக்கு துணை போகும் போலீஸ்

சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார் சோஃபி.  இவரும் இவருடைய நண்பர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஸ்மால் வேர்ல்ட் என்கிற டான்ஸ் பாருக்கு மது அருந்தச் சென்றுள்ளனர். மதுவை அருந்திய சிறிது நேரத்தில் சோஃபி மயங்கி விழுந்திருக்கிறார். அடுத்த நாள் காலை வரை சுயநினைவில்லாமல் இருந்திருக்கிறார். தன்னுடைய நண்பர்கள் உடனிருந்ததால் தனக்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் மயங்கி சரிந்த தன்னை நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருக்கும் சோஃபி அந்த பாரில் தொடர்ந்து … Continue reading சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு மதுவில் மயக்க மருந்து: பாரில் நடந்த சம்பவத்துக்கு துணை போகும் போலீஸ்

பல்லாவரத்தில் தனியார் கடையில் பெண் ஊழியர் தற்கொலையால் பரபரப்பு

பல்லாவரத்தில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடையில் அனகாபுத்தூரை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் இன்று பணிக்கு வந்த அவர், 4-வது மாடியிலுள்ள கழிவறையில் துப்பட்டா மூலம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தமிழ்செல்வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் … Continue reading பல்லாவரத்தில் தனியார் கடையில் பெண் ஊழியர் தற்கொலையால் பரபரப்பு