உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்காத கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக விவசாயிகள் தமிழகத்தை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், மண்டியாவில் போராட்டம் நடத்தினர். காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவிலும் போராட்டங்கள் நடைபெற தொடங்கி உள்ளன. இதேபோல் கர்நாடக காவிரிப் பாசனப் பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. இந்த சூழல்நிலையில் கலவரங்கள் … Continue reading பெங்களூருவில் மீண்டும் போராட்டம்: 144 தடை உத்தரவு
Tag: பெங்களூரு
பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு
வா. மணிகண்டன் பெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ் சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘பத்திரமா இருக்கியா?’ என்று விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நான்கரை மணியிலிருந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். பிரச்சினைகள் எதுவுமில்லை என்றாலும் வெளியில் ஒருவிதமான பதற்றம் தெரிகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் அவசர அவசரமாக வீடுகளுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். … Continue reading பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு
காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?: பெங்களூரு போலீசின் அக்கறையால் அதிர்ச்சி!!!
பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். பாரதீய ஜனதா பிரமுகரான இவருக்கு, நேற்று முன்தினம், பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று வந்தது. அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்த ரசீதில் ‘அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ந் தேதி சென்றபோது, பின் இருக்கையில் பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என … Continue reading காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?: பெங்களூரு போலீசின் அக்கறையால் அதிர்ச்சி!!!
ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவருக்கு என்ன வேலை?
ராக்கெட் அனுப்புவதற்கு பஞ்சாங்கப்படி நல்ல நேரம் பார்ப்பதும், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு தேங்காய் உடைப்பதும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குறித்து இதுவரை இருந்துவந்த சர்ச்சைகள். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பின்னணி இருப்பதுபோல இஸ்ரோ முன்னாள் தலைவரின் ஆர் எஸ் எஸ் உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் 2014 டிசம்பர் வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் கே.ராதாகிருஷ்ணன். பெங்களூருவில் ஆர் எஸ் எஸ் நடத்திய ஸ்வராஞ்சலி என்ற நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்தினராகக் கலந்துகொண்டது … Continue reading ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவருக்கு என்ன வேலை?