புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்!

டி. அருள் எழிலன் ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஆளும் அதிமுக அரசாக இல்லை. பாஜகவின் பொம்மை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், … Continue reading புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்!

சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

அண்மையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நீங்க போட்டிருக்க கண்ணாடி ரொம்ப நல்லா இருக்கு’ என மூன்றாம் தர பொறுக்கி போல நடந்துகொண்டார். ‘பொறுக்கி’ என்பது கடுமையான வார்த்தையாக இருக்கலாம்.  சற்று விளக்கமாகவே பார்க்கலாம். நீங்கள் ஒரு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மதிக்கத்தக்க தோற்றத்துடன் உள்ள ஒருவரிடம் பஸ் எப்போது வரும் என கேட்கிறீர்கள். அவர் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் … Continue reading சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.  கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர். இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் … Continue reading கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

மனுஷ்ய புத்திரன் என்ற ஆர்.எஸ்.எஸ்

மனுஷ்ய புத்திரன் என்னை ஆர்.எஸ்.எஸ்காரர்களோடு ஒப்பிட்டு நண்பர் ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருப்பதாக அறிந்தேன். ஆர்.எஸ்.எஸ்காரர்களோடு நான் சண்டையிட்ட போதெல்லாம் அதைக் கண்டு குதூகலித்த ஷாநவாஸ் இப்போது மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் இவர்கள் ஆடும் நாடகத்தை அம்பலப்படுத்தியதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் பதில் சொல்லவிடாமல் தடுத்தேன் என்று பொய் சொல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்னை இஸ்லாமிய பயங்கரவாதி என்று அழைத்ததற்கும், தவ்ஹீத் ஜமாத் என்னை காஃபிர் என்று தாக்கியதற்கும், ஷாநவாஸ் இப்போது என்னை ஆர்.எஸ்.எஸ் என்று … Continue reading மனுஷ்ய புத்திரன் என்ற ஆர்.எஸ்.எஸ்

சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக்கூடாது?: விவாதத்தில் பேசிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மீது பாஜக பிரமுகர் தனிப்பட்ட தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு என்று உள்ள மரபுகளை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் சிலையை 18 படியேறி பார்ப்பதற்கு, 41 நாட்கள் கடும் விரதம்இருந்து இருமுடியுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களைப் பொறுத்த வரை, 10 வயதுக்கு … Continue reading சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக்கூடாது?: விவாதத்தில் பேசிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மீது பாஜக பிரமுகர் தனிப்பட்ட தாக்குதல்

அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை புத்தகமாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தச் செய்தியை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட விதம் விமர்சனத்துக்குரியதாக இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் என தினமலரும் புதிய தலைமுறையும் சொல்கின்றன. அப்படியென்றால் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் செய்தது யார்? இந்த ஊடகங்கள்தான் விளக்க வேண்டும்! தினமலர் செய்தி: அதிமுக ஊழல் பட்டியல்: இளங்கோவன் வெளியீடு சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அரசுக்கு … Continue reading அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

#நாஞ்சில்சம்பத் நேர்காணல்: நெறியாளர் குணசேகரனுக்கு குவியும் பாராட்டு

Jothimani Sennimalai இன்று தேர்தல் திட்டமிடல் சந்திப்பில் நண்பர்கள் Gunaa Gunasekaran நாஞ்சில்சம்பத் பேட்டியை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வேலைப்பளு காரணமாக என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இப்பேட்டி தொடர்பான புகழுரைகளை கேட்டவண்ணம் இருக்கிறேன். மிகுந்த மதிநுட்பமும் ,நிதானமும், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகபாவமும் , சிரிக்காமல் கலாய்க்கும் இயல்பும் அவரது தனிச்சிறப்பு! ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஊடகங்களில் இன்னும் ஒலிக்கும் வெகுசிலரில் அவரும் ஒருவர். சமீபகாலமாக ஊடகங்கள் ,ஊடகவியலாளர்கள் மீது குறைந்துவரும் நம்பிக்கையை … Continue reading #நாஞ்சில்சம்பத் நேர்காணல்: நெறியாளர் குணசேகரனுக்கு குவியும் பாராட்டு

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம்: ஏன்?

எழில் அரசன் புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'அக்னிப் பரீட்சை' நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டி அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கான அத்தனை கூறுகளையும் கொண்டிருக்கிறது! •"அம்மாவால் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த மக்களை அவர் சந்திக்கவில்லை" •"மக்கள் வெள்ளத்தால் பாதித்தால் நாங்கள் பொதுக்குழுவுக்கு பேனர்கள் அமைக்கக்கூடாதா?. ஒரு வீட்டில் துக்கம் நடந்ததற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடக்கக்கூடாதா?" •"அம்மா கோட்டைக்கு செல்கிறபோது பேனர் வைத்து வரவேற்பது கட்சிக்கான விளம்பரம். எல்லாவற்றுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது" •ஏற்கனவே கண்ணுக்கு … Continue reading நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம்: ஏன்?

சுனாமியில் சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள் இன்று கொல்லும் ஆறுகளாக மாறியது எப்படி?

தளவாய் சுந்தரம்  கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் பற்றி, சென்னை மழைப் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பேசப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். Ruben jay, 2014 டிசம்பர் 26இல் … Continue reading சுனாமியில் சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள் இன்று கொல்லும் ஆறுகளாக மாறியது எப்படி?