நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

பீட்டர் துரைராஜ் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க இருக்கிறது. நம் சமூகத்தில் கருத்துருவாக்கத்திலும், அணிச் சேர்க்கையிலும் சாதி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர் தி.லஜபதி ராய் 'நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?' என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நூல் வெளியீட்டு விழாவை மதுரை, உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்கள்.இறுதி நேரத்தில் அரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பு அதே இடத்தில், அதே நாளில் புத்தக வெளியீட்டு … Continue reading நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

கட்டட தொழிலாளர் சங்கத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கே. இரவி (66). தமிழ்நாடு ஏஐடியுசியின் துணைப் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். கட்டுமான தொழிலாளர் நிலமை பற்றி தடைம்ஸ்தமிழ்.காமிற்காக பேசுகிறார். இந்த நேர்காணலை செய்தவர் பி. பீட்டர் துரைராஜ். கேள்வி : கட்டட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளாரே? பதில்: இப்படி ஒரு கோரிக்கையை கட்டட … Continue reading கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்

‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் … Continue reading அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்

வலதுசாரிகளும் பெரு முதலாளிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்: ஆனந்த் பட்வர்தன்

மேக்ஸ் முல்லர் பவனில் , சென்னை ஏழாவது ஆவணப்பட குறும்பட விழா (7th Chennai International Documentary and Short Films Festival 2019) 10.2.2019 வரை நடைபெறுகிறது. காய்தே நிறுவனமும், மறுபக்கம் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த ஐந்து நாள் விழாவை புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் தொடங்கி வைத்து பேசினார். “மேல்தட்டு மக்களைப்பொறுத்த வரையில் இந்த அமைப்பு (system) ஒழுங்காக உள்ளது. வலதுசாரிகளும், பெரு முதலாளிகளும் ( Crony Capitalism) கை கோர்த்து … Continue reading வலதுசாரிகளும் பெரு முதலாளிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்: ஆனந்த் பட்வர்தன்

“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்

இந்தியாவில் சாதி இயக்கங்கள் அடையாள அரசியலை பேசுகின்றன. அவை பொருளாதார காரணிகளை புறக்கணித்து விட்டன; மார்க்சியத்தை புறக்கணித்து விட்டன. சாதி மறுப்பு போராட்டம் புறக்கணிக்கப் பட்டது.

நூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’

அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு.

“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

பீட்டர் துரைராஜ் "குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள? " என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நினைவுக்கு வந்தது. இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் கல்லூரியில் சேர்ந்தற்கு காரணம் ஒரு காங்கிரஸ் எம்.பி … Continue reading “இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்

வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்

இவன் யார்? என்ன பெயர்? என்ன ரேங்? இது எதுவும் சிங்கள இராணுவத்துக்குத் தெரியாது. அதற்கு எவ்வளவு விவரங்கள் தெரியும் என்று இவனுக்கு தெரியாது. இந்த ஆடு புலி ஆட்டம்தான் கதை.

Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

பீட்டர் துரைராஜ் "ஹோமாசெக்‌ஷூவல்களை வக்கிரமான ரேபிஸ்டுகளாகவும் கொலைக்கார்களாகவும் மட்டும் 'வேட்டையாடு விளையாடு' படம் சித்தரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இறமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறது.ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல;அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளம் ஆகும்" என்று ஞாநி தனது 'ஓ' பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் எழுதினார். ஞாநி இருந்தால் பாராட்டும்படியான, லெஸ்பியன் … Continue reading Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்

நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள்.

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி

பீட்டர் துரைராஜ் பாலேசுவரம் கிராமத்தில் ஏழாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மரணத் தருவாய் பராமரிப்பு நிலையம் ( St.Joseph's Hospice ) எனும் சேவை நிலையத்தில் முறைகேடுகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது; இதனை எதிர்த்து இந்த காப்பக பொறுப்பாளர் தாமஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளது. இந்த காப்பகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் அங்கு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த … Continue reading பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி

செம்புலம்: கொங்கு மண்டலத்தின் சமகால வாழ்வியல்!

பாஸ்கர் என்ற திருமணமாகாத தலீத் இளைஞன் அதிகாலையில், சாலை ஓரத்தில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறான். அவன் கொலைக்கு காரணம் என்ன? சந்தையில் சாதிசங்க தலைவனை அடித்ததா? கட்டைப் பஞ்சாயத்தா? ‘பொம்பள’ விவகாரமா? மில் விவகாரமா? சமூக போராளி என்பதாலா?

நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

பீட்டர் துரைராஜ் தன்முதலான( original) சிந்தனையாளரும் மனித உரிமைப் போராளியுமான,  டாக்டர். கே.பாலகோபால் தெலுங்கில் எழுதியவற்றை "உரிமைகள்: ஒரு தத்துவக் கண்ணோட்டம்" என்ற பெயரில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கே.மாதவ் மொழி பெயர்த்துள்ள இந்த நூல் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சலனத்தை, தூண்டுதலை கண்டிப்பாக ஏற்படுத்தும். பாலகோபால் முப்பதாண்டு காலம் உரிமைகள் இயக்கப் பயணத்தில் தீர்மானகரமான பங்காற்றியவர். அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவு, துண்டறிக்கை, பாடத்திட்டம் , கேள்வி-பதில், அஞ்சலி, தலையங்கம் ,பேட்டி இவைகளைத் தொகுத்து இந்த முன்னூறு … Continue reading நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

#நூல் அறிமுகம்: தமிழ் மகனின் சமூக அறிவியல் கதைகள் ’அமில தேவதைகள்’!

' இயல்பு மீறிய ஏதோ ஒரு அம்சத்தை கதையில் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் நடப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் நடப்பதாகவும் மட்டும் சொன்னால் அது அறிவியல் கதை ஆகாது'

நூல் அறிமுகம்: ‘இலங்கையின் சுஜாதா ‘ அ.முத்துலிங்கம் எழுதிய “நாடற்றவன்”!

ஜாதா எழுதிய ' கற்றதும் பெற்றதும் ' எப்படி இருக்குமோ அந்த தொனியில், அதே பாடுபொருளில்தான் இந்த நூலும் இருக்கிறது.

#நிகழ்வுகள்: இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் கருத்தரங்கம் சென்னை இக்சா மையத்தில் இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எம். சங்கையா, எம். அப்பாதுரை, பேரா. ஜி. சரசுவதி, தியாகு, ஜாஸ்மீன், பேரா. அ. மார்க்ஸ், அ. சவுந்தரராசன், விடுதலை ராசேந்திரன், ஏ.கே. முகமது ஹனீபா, அப்துல் ரஹ்மான், ஆளூர் ஷாநவாஸ், அப்துல் சமது ஆகியோர் பேசுகின்றனர். கோவை கலவரத்தை மையப்படுத்தி ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் … Continue reading #நிகழ்வுகள்: இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!

தமிழகத்தில் 13லிருந்து 21 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்து இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பீட்டர் துரைராஜ் இணையதள கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். “2008-ஆம் ஆண்டு தமிழக அரசு 1400 சிறைவாசிகளை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் 7 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்தவர்கள். ஆனால் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை ஆணையம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. 1991-1999ஆம் ஆண்டு வரை கைதான இஸ்லாமிய சிறைவாசிகள் … Continue reading இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!