தலித்துகளின் குடிசைகளுக்கு தீ வைப்பு: இரவில் தூங்கிக் கொண்டிருந்த 100 குடும்பங்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் தலித்துகள் வசித்த 100 குடும்பங்களின் குடிசைகளுக்கு செவ்வாய்கிழமை இரவு தீ வைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் இந்தச் செய்தியே வெளியாகியிருக்கிறந்து. குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை குறித்து தெளிவான தகவல் இல்லை என்றே தேசிய அளவிலான ஊடகங்கள் சொல்கின்றன. ஊருக்குள் போதிய இடமில்லை என்பதால் அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று தலித்துகள் கேட்டதாகவும் அதற்கு அரசு மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசிடன் … Continue reading தலித்துகளின் குடிசைகளுக்கு தீ வைப்பு: இரவில் தூங்கிக் கொண்டிருந்த 100 குடும்பங்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை

பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

பீகார் மாநிலம் சுபால் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஞ்ஜீத் ராஜன் . 42 வயதான ரஞ்சித் 'ஹார்லி-டேவிட்சன்' நிறுவனத்தின் பைக்கில் பாராளுமன்றம் வந்து இறங்கி, அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார். https://www.youtube.com/watch?v=FOBESM5gk6w பொதுவாக மக்களவைக்கு காரில் வரும் எம்.பிக்கள் தங்களது வாகனத்தைக்கூட பார்க்கிங்கில் நிறுத்த மாட்டார்கள்.அப்படியிருக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரஞ்ஜீத் ரஞ்சன் இன்று தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை அவராகவே ஓட்டி வந்து பார்க்கிங் செய்து அனைவரையும் அதிர வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் … Continue reading பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

கதிர்வேல் ராணுவத்துக்கு ஆள் எடுக்க எழுத்து தேர்வு நடந்தது பிகாரில். ஆயிரம் வாலிபர்களுக்கு மேல் பேனா பென்சிலுடன் துள்ளி வந்தார்கள்.எல்லாரும் முதலில் சட்டையை கழற்றுங்கள் என்றார் அதிகாரி. அதிர்ச்சி அடைந்தாலும் அப்படியே செய்தனர் இளைஞர்கள். பேன்டையும் கழற்றுங்கள் என்றார் அதிகாரி. காரணம் புரியாமல், வேறு வழி தெரியாமல் கழற்றினார்கள். ஜட்டியுடன் மைதானத்தில் உட்கார வைத்து வினாத்தாளை கையில் கொடுத்து தேர்வு எழுத சொன்னார் அதிகாரி. மீடியாவுக்கு தகவல் போய் ஓடி வந்தார்கள். “காப்பி அடிக்காமல் தடுக்க எல்லாரையும் தனித்தனியாக … Continue reading ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

வடஇந்தியாவை விரைவில் அதி பயங்கர பூகம்பம் ஒன்று தாக்க உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரிக்டர் அளவுகோளின் படி அது எட்டுக்கு மேல் இருக்கும் என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பூகம்பத்தை விட இது அதிக சக்தி கொண்டதாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. நேபாளில் நிகழ்ந்த பூகம்பத்தை ஆய்வு செய்ததில், அதே போன்றவை வட இந்தியா முழுவதும் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் … Continue reading வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை