எழுத்தாளர் பிரேம்மின் ’அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’: நூல் வெளியீடு தொடர் நிகழ்வுகள்

எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான பிரேம்மின் ‘அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’(ஆழி பதிப்பகம்) நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. நூலை வெளியிடுகிறார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இந்நூலின் அறிமுக நிகழ்வுகள் மதுரை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் நிகழ உள்ளது. திங்கள்கிழமை (26-09-2016) அன்று மாலை 5.30 மணியளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. திருச்சியில் செவ்வாய்கிழமை (27-09-2016) அன்று மாலை 6 மணிக்கு செவானா ஓட்டலில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.   … Continue reading எழுத்தாளர் பிரேம்மின் ’அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’: நூல் வெளியீடு தொடர் நிகழ்வுகள்

“மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

பிரேம் (சாதிச்) சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது... பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம்சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதி மன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடி உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை தற்கொலை என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன. சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது. … Continue reading “மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

பத்தி: சுதந்திரம் யாருடைய பிறப்புரிமை?

பிரேம் அய்ரோப்பிய அரச குடும்பங்களும், பிரபுக்களும் கொள்ளைக்காரர்களையும் குற்றவாளிகளைகளையும் உலகம் முழுக்க அனுப்பி மண்ணையும் மக்களையும் அடிமை கொண்டு நசுக்கத்தொடங்கிய வரலாறுதான் இன்றுள்ள நவீன தேசங்களின் வரலாறு. வணிகம், பேரரசு விரிவாக்கம் இத்துடன் சமயப்பரப்புதல் என்ற உருமறைப்பும் சேர்ந்து கொள்ள அறுநூறு ஆண்டுகால உலக மயமாக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது. பிரிட்டன் உருவாக்கிய இன்றைய இந்தியா பொல்லாத நினைவுகளின் மீதும் துயரங்களின் மீதும் கட்டப்பட்டது. ஒரு நூறு ஆண்டு காலப் படுகொலைகள் உருவாக்கித் தந்த ஒரு … Continue reading பத்தி: சுதந்திரம் யாருடைய பிறப்புரிமை?

இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

பிரேம்  ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது. அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை … Continue reading இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

பிரேம்  திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு … Continue reading ”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

மறதிகளால் கட்டப்படும் வரலாறு அல்லது மறப்பதற்காகவே கட்டப்படும் வரலாறு: பிரேம்

பிரேம் திரைப்படத்தின் கால-இட அசைவும் ஒரு சமூகத்தின் கால-இட அசைவும் ஒத்திசைவாகும் பொழுது அந்தச் சமூகம் தன் வரலாற்றை வாழ்கிறது, தன் வரலாற்றுடன் வாழ்கிறது அல்லது தான் வாழ்வதை வரலாறாக்குகிறது என்றும், திரைப்படம் தன் காலத்தின் அசைவுகளை மறைத்தும் மறுத்தும் தனக்கான தனித்த ஒரு கால வெளியைக் கொண்டு இயங்குகிறது எனில் அதனை உருவாக்கிக் களிப்படையும் ஒரு சமூகம் தனக்கான வரலாற்றை வெறுக்கிறது அல்லது தனது உண்மையான வரலாற்றை மறைக்கிறது என்றும் பொருள்படும். தமிழின் தற்காலம் மட்டுமின்றி … Continue reading மறதிகளால் கட்டப்படும் வரலாறு அல்லது மறப்பதற்காகவே கட்டப்படும் வரலாறு: பிரேம்

புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

பிரேம்   ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ கொலை செய்யலாம், கொலை செய்யப்படலாம், அனைத்தும் புனிதமானவை, நீ புனிதமானவன்.” என நீள்கிறது. இந்த உள அமைப்பு பாசிச, அடிப்படைவாத வன்முறைகளைத் தன் புனிதக் கடமையாக எண்ணிக் கொள்ளும். ஆனால் இதே … Continue reading புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை

(எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலை நிகழ்த்தியிருக்கும் ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை.) தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதலென்பது கலை இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒருவனின் வாழ்வில் முக்கியமானதொன்று. தான் உறுதிபட நம்பும் ஒரு அரசியலை பேசுவதும் அதை சார்ந்து இயங்குவதும் ஒரு கலைஞனுக்கான அறம். துரதிர்ஸ்டவசமாக தமிழ் இலக்கியவாதிகளில் அனேகர் தாங்கள் பேசும் அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர்களாகவே யதார்த்தத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த கால் நூற்றாண்டு காலமாய் தமிழில் கோட்பாட்டு ரீதியான முக்கியமான உரையாடல்களை … Continue reading அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை

அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே: “பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் "லைக்கிட்டும்" "மெளனம் சாதித்தும்" உற்சாகப்படுத்திய நண்பர்களையும் கண்டித்து எழுதியிருந்த பதிவை நீக்கியிருக்கிறேன். காரணங்கள் இரண்டு. ஒன்று, பழனிவேள் தன் வசைகளை நீக்கிவிட்டதாக நண்பர்கள் அறியத் தந்தார்கள். இரண்டு, அந்த விவாதத்திலேயே, எழுதும் பெண்களைப் பற்றி யவனிகா சுதந்திரவள்ளியின் … Continue reading அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?

நடந்த முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி சர்ச்சைகள் ஏதும் இல்லாதது ‘சப்’பென்று இருந்தது என ஒரு தமிழ் நாளிதழ் கவலைப்பட்டது. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் முகநூலில் ஒரு சர்ச்சையொன்று மையங்கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி லீனா மணிமேகலை. சமீபத்தில் அவருடைய கவிதை நூல் (சிச்சிலி) ஒன்றும் நேர்காணல் நூல் (மொழி எனது எதிரி) ஒன்றும் வெளியானது. அந்த வெளியீட்டை ஒட்டி, கவிஞர் பழனிவேள் தனது முகநூல் பதிவில் இவ்வாறு பதிந்திருந்தார். Palani Vell இதனால் தான் இது கவிதையில்லை … Continue reading இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?

“திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  அதற்கு கவிஞர் யாழன் ஆதி எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்தப் பதிவு இங்கே... இந்நிலையில் எழுத்தாளர் பிரேம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். “தோழர் திருமா பெண் முதன்மை உணராதவரா? பெண்ணியத்தைத் தன் அறிவுமுறையில் இணைத்துக்கொள்ளாதவரா? பெரியார் ஒரு ஃபாசிஸ்ட் என்று நிருவிவிட்டார்கள், பிறகு தலைவர் திருமா பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என்று நிறுவிவிட்டால் தமிழரசியல், … Continue reading “திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!