‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

தன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ. சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் … Continue reading ‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள். - வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் … Continue reading “உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

“தமிழ்நாட்டில் பிராமணனாக பிறப்பதே மிகப்பெரும் சாபம்”: நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வீ.சேகர்!

அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் தங்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று அந்தணர் முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அந்தணர் முன்னேற்ற கழகத்தின் இந்த கோரிக்கை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மைலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான, நடிகர் எஸ்.வீ.சேகர், “தமிழ்நாட்டில் பிராமணனாக பிறப்பதே மிகப்பெரும் சாபம்” என்று கூறியுள்ளார். http://www.hindustantimes.com-க்கு  அளித்துள்ள ஒரு பேட்டியில் "தமிழகத்தின் மொத்த மக்கள் … Continue reading “தமிழ்நாட்டில் பிராமணனாக பிறப்பதே மிகப்பெரும் சாபம்”: நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வீ.சேகர்!