ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!

கதிர் வேல் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு தரவில்லை, திமுக. அதனால் ஜோதிமணிக்கு அங்கே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிட்டவில்லை. ஜோதி அங்கே சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்று சொல்லி அவருக்கு உற்சாகம் ஊட்டுகிறார்கள் தோழர்களும் தோழிகளும். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிகிறது. ஒரு சிலர் மட்டுமே அன்புடன் அவரை எச்சரிக்கிறார்கள். “கட்சி அரசியலுக்கு எதிராக தனி மனிதர்கள் போராடி ஜெயிக்க முடியாது. எவ்வளவு நல்லவராக அல்லது வல்லவராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள்” என்கிறார்கள். … Continue reading ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

மனித கழிவுகளை அகற்ற உத்தரவிடுவதும் வன்கொடுமையே: தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்…

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இச்சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டப் பிரிவுகள் என்னென்ன?: *தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்களது தன்மானத்துக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் … Continue reading மனித கழிவுகளை அகற்ற உத்தரவிடுவதும் வன்கொடுமையே: தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்…

காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சராகிறார் மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீது காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலைகவலைக்கிடமானதை அடுத்து,வியாழனன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான முப்தி முகமது சயீது, கடந்தஆண்டு மார்ச் 1 ஆம் தேதி 2-வது முறையாக காஷ்மீர் முதல்வரானார். இதற்கு முன் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2005 வரை காஷ்மீர்முதல்வராக இருந்தார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது மத்திய … Continue reading காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சராகிறார் மெஹபூபா முப்தி