அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சந்திர மோகன் நிலங்கள் பறிபோனதால் திருப்பதி காடுகளில் சாகின்றனர்! கல்வராயன் மலையானது, சேலம்,விழுப்புரம் மாவட்டங்களில் 600 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்த இலட்சக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்களைக் கொண்டதாகும். 50,000 ற்கும் மேற்பட்ட (தமிழ் பேசுகின்ற) "மலையாளி" பழங்குடியினர் வசிக்கும் முக்கியமான மலையும் ஆகும். இம் மலையிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பதிக் காடுகளுக்கு செம்மரங்களை வெட்டச் சென்றவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்; வன அதிகாரிகள் கொலை வழக்கில், 2016 மே மாதத்தில் ஆந்திர சிறைகளிலிருந்து விடுதலையான 287 … Continue reading அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

மதிவாணன் பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வது அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், … Continue reading பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்

சமூக - அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்... தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த  என்னைப் பற்றிய … Continue reading தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்

பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

சந்திரமோகன் மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், "கண்டிக்கிறேன் " எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன். விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன். "நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்" எனவும், "மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி … Continue reading பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

’பியூஸ் மானுஷ் அமைப்பின் முக்கிய நிர்வாகி நடத்தும் பள்ளி, நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது’

பியூஸ் மானுஷ் தலைமையில் இயங்கும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகியாக இருப்பவர் மீனா சேது. இவர் நடத்தும் கோல்டன் கேட்ஸ் பள்ளி நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீர் நிலை நிலத்தில் 50 சென்ட் வரை ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் மற்றும் நுழைவாயில் கட்டியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்  நடத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் ஆக்கிரமிப்பு செய்தது உண்மை என்றும் 12 வருடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது … Continue reading ’பியூஸ் மானுஷ் அமைப்பின் முக்கிய நிர்வாகி நடத்தும் பள்ளி, நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது’

அன்று பாடகர் கோவனின் செயலை ‘வெட்கம்’ என எழுதிய பியூஸ் மானுஷ்; இன்று ’பணிவு’ என்கிறார்!

டாஸ்மாக் எதிர்ப்புப் பாடலைப் பாடியதற்காக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுவிக்கக் கோரி மக்களோடு, பல அரசியல் கட்சிகளும் சேர்ந்து குரல் கொடுத்தன. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட கோவன், தனக்கு எதிராக காவல்துறை நடவடிக்கைகளை கண்டித்த அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர். கருணாநிதியுடனான கோவனின் சந்திப்பு படங்களாக வெளிவந்தபோது பலர் அதை விமர்சித்தனர். கருணாநிதியின் மூப்பின் காரணமாக அவரிடம் குனிந்து பேசும் கோவன் குறித்து சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் … Continue reading அன்று பாடகர் கோவனின் செயலை ‘வெட்கம்’ என எழுதிய பியூஸ் மானுஷ்; இன்று ’பணிவு’ என்கிறார்!

கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.  கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர். இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் … Continue reading கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்