இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

கர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா். https://twitter.com/vijayanpinarayi/status/996796702387470337 தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை … Continue reading இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் … Continue reading பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை!

2008ஆம் ஆண்டே, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) , தலித் என்கிற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது, எனவே அந்த சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய அரசை கண்டித்து, திருவனந்தபுரம் ரிசர்வ் பேங்க் முன்பாக, கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் நாளை சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற உள்ளது. முன்னதாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 4474 பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Continue reading மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். கொலை மிரட்டல்!

தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். அமைப்பினர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகார் மனுவை தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்டது. அம்மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்: “அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விவசாயிகள் சந்திக்கிற முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை பாதுகாப்பது, … Continue reading தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். கொலை மிரட்டல்!

“நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்; வாமனனை ஒரு போதும் கொண்டாடமாட்டோம்” அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் மலையாளிகள்

மலையாளிகள் விமர்சையாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பாஜக தலைவர் அமித் ஷா. ஆனால் அவர் ஓணம் வாழ்த்து சொல்லவில்லை. வாமன ஜெயந்தி வாழ்த்து சொன்னார். தொல் மலையாளிகளின் (திராவிடர்களின்) அரசரான மகாபலியின் நினைவாக ஓணம் கொண்டாடப்படுகிறது.  அவரை அழித்த பார்ப்பன வாமனனின் பிறந்த நாளுக்கு வாமன ஜெயந்தி வாழ்த்து சொல்லி தங்களுடைய ஆர். எஸ். எஸ். சிந்தாந்தத்தைத் திணித்தார் அமித் ஷா. இந்த ட்விட்டர் பதிவு … Continue reading “நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்; வாமனனை ஒரு போதும் கொண்டாடமாட்டோம்” அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் மலையாளிகள்

பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக  பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்ததாக மாறுவதற்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட … Continue reading பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

#காணொலி “சிவப்பு காவியாகிறது”: கேரளாவில் காவி மயமாகிவரும் கம்யூனிஸ்டுகள்!

கேரளாவில் பாஜக, ஆர் எஸ் எஸ் காலூன்றி வருவதைத் தடுத்த, யோகாவை நடத்துவது, ஐயப்பன் பூசை, கிருஷ்ண ஜெயந்தி விழா போன்றவற்றை கேரள மார்க்சிஸ்ட் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இவை சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், கேரள கன்னூரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக கேரள மார்க்சிஸ்ட் தலைவர்களான பினராயி விஜயனை கிருஷ்ண அவதாரமாகவும் அர்ஜுனராக ஜெயராஜனையும் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரு யோ கணபதி பூசை, கிருஷ்ணன் அவதார கொண்டாட்டம், கீதை அர்சுனனாக … Continue reading #காணொலி “சிவப்பு காவியாகிறது”: கேரளாவில் காவி மயமாகிவரும் கம்யூனிஸ்டுகள்!