தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்”

தலித்துகளின் militant குணத்தை ஊக்குவிக்கும், எதிர் தாக்குதலுக்கான வாய்ப்புகளை ஆராயும் கதையாடல்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வலுவாக நேர்த்தியாக வெளிப்படும் பொழுது அது சாதிய சமூகத்தில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்

பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. … Continue reading பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்

பா. ரஞ்சித்தும் சோழர்களும்

வாசுகி பாஸ்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்; 1 . இராஜராஜ சோழன் காலத்தில் … Continue reading பா. ரஞ்சித்தும் சோழர்களும்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், பட்டியலின எம்.ஏ.க்கள், எம்.பிக்கள் தங்களை தேர்ந்தெடுத்த பட்டியிலின மக்களின் நலனுக்காக பேச வேண்டும் என பேசினார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பா. ரஞ்சித் பேசிய சில கருத்துக்கள் விவாதமாகியுள்ளது. “தலித் மக்களுக்காக பேச முடியாவிட்டால், பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை … Continue reading இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

ப. ஜெயசீலன் அமெரிக்க கருப்பின போராட்ட வரலாறு அதி உன்னதமான அறம் சார்ந்த மானுட விடுதலைக்கான, சமுத்துவத்திற்கான எளிய,வறிய, தன்னடையாளம் பறிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் போர் குணத்தையும், அவர்கள் அடைந்த உன்னத வெற்றிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டம் என்பது தங்களின் பூர்விக மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, அவர்களின் கலை,இலக்கியம், மொழி, மதம், அடையாளம், சடங்குகள் என அவர்கள் சார்ந்த எல்லாவற்றையும் இழந்து, எல்லாமும் பறிக்கப்பட்டு மிஞ்சிப்போனவைகளையும் இழிவென கற்பிக்கப்பட்டு அதை சார்ந்து அவமானத்திற்க்கு உள்ளான … Continue reading ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்; தனுஷ் தயாரிக்கிறார்!

கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து, நடிகர் தனுஷ் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், அதை வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/dhanushkraja/status/770306581581869056

கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் … Continue reading கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

பிரேம்  திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு … Continue reading ”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!

சமீபத்தில் வெளியான தனது ‘கபாலி’ படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதில், “என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் திரு. ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் ’2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா. ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு … Continue reading புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!

#கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?

Rajasangeethan John 1990-ல் வந்த படம். அதுவும் இதேதான். A retiring don, who wants to get back to his family, is threatened by a gang wa, for one last time. படம் Godfather 3. இந்த லைனை செய்வதானால், தமிழில் யாரால் செய்ய முடியும்? கமல் மொத்த Godfather படங்களையும் நாயகன் படத்திலேயே முடித்துவிட்டார். வேறு வழியில்லை. பாட்ஷா ரஜினியால் மட்டும்தான் முடியும். இப்படியான லைனை ரஞ்சித் ரஜினிக்கு … Continue reading #கபாலி: ரஜினி ஏன் ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார்?

“பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!

கீட்சவன் பேரன்புள்ள பா.இரஞ்சித், நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் என் அருகே அமர்ந்திருக்கும் எனக்குப் பிரியமானவர்களிடம் பேசுவது பழக்கம். அவர்கள் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். சக மனிதர்கள் பார்வையில் இது மனநோய் போல் தெரியலாம். எனக்கு இது வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. அப்படித்தான் உங்களோடு பேசினேன். அதன் வரிவடிவம்தான் இந்தக் கடிதம் என்று கருதிக்கொள்ளலாம். ‪#‎அட்டக்கத்தி‬ எனும் அற்புத சினிமாவைக் கண்டு ரசித்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ரவுடிகளையும், சமூகப் பின்னணித் … Continue reading “பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!

#கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

Jeyannathann Karunanithi சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று. காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை … Continue reading #கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

“கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

பிரேம்   “கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” … Continue reading “கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்

“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு: “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்! கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க! தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்! மீண்டும் ஒரு "காளியை", "தளபதியை", "பரட்டையை" "கபாலியாக" எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்! … Continue reading “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

இதோ #NeruppuDaTeaser நெருப்புடா பாடல் டீஸர்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிக்கும் கபாலி படத்தின் ‘நெருப்புடா’ பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/wg-kEWsL6Xc

#கபாலிபாடல்: பா. ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புதிய பொருள் சொல்லும் முகநூல் சாதியவாதிகள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர். ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார்.   “நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.