பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக,  பத்திரிகையாளர் பர்கா தத்  போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.     அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம்  … Continue reading பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

சாவித்ரிபாய் புலே: இந்தியாவின் முதல் ஆசிரியை என்று உங்களுக்குத் தெரியுமா?

மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. நமக்குச் சொல்லித்தந்த பெண்ணியவாதிகளின் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் … Continue reading சாவித்ரிபாய் புலே: இந்தியாவின் முதல் ஆசிரியை என்று உங்களுக்குத் தெரியுமா?

#Beep song: “பாலியல் பலாத்காரம் செய்து பல பெண்களை அழித்தாரா?” சரத்குமாரின் ஆதரவு வார்த்தைகள் இவை…

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார்  அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதோ அந்த அறிக்கை.. “சிம்பு பாடி பதிவு செய்து, வேறு வரிகளைப் போட்டு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாடலை, அவருக்கு தெரியாமல் பொது மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட நினைத்து சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்திருக்கும் ஒரு குற்றவாளியின் செயலுக்கு சிம்பு பலியாடாகி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் அவரது தந்தை டி.ஆர். இதற்கான விளக்கத்தை கண்ணீரோடும் … Continue reading #Beep song: “பாலியல் பலாத்காரம் செய்து பல பெண்களை அழித்தாரா?” சரத்குமாரின் ஆதரவு வார்த்தைகள் இவை…